என். குஞ்சுராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என். குஞ்சுராமன்
N. Kunjuraman
உறுப்பினர், கேரள சட்டமன்றம்
பதவியில்
1960–1965
முன்னையவர்ஆர். பிரகாசம்
பின்னவர்கே. பி. கே. தாசு
தொகுதிஆற்றிங்கல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 1906
இறப்பு10 திசம்பர் 1980

என். குஞ்சுராமன் (N. Kunjuraman) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவருடைய காலம் சூன் 1906 முதல் திசம்பர் 1980 வரையுள்ள காலமாகும். இரண்டாவது கேரள சட்டமன்றத்தில் ஆற்றிங்கல் தொகுதியை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

குஞ்சுராமன் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். போராட்டப் பங்கேற்பின் போது ஆறு முறை சிறை சென்றுள்ளார். 1948 ஆம் ஆண்டு திருவிதாங்கூரின் சட்டமன்ற உறுப்பினரானார். 1949-1952 வரை, புதிதாக அமைக்கப்பட்ட திருவிதாங்கூர் கொச்சி சட்டமன்றத்தின் உறுப்பினராக இவர் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் கல்வி, கூட்டுறவு, தொழில் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1960 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக ஆற்றிங்கல் தொகுதியில் இருந்து கேரள சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவிகளைத் தவிர, திருவனந்தபுரம் மாவட்ட நில அடமான வங்கி மற்றும் தென்னை நார்களுக்கான குறைந்தபட்ச ஊதியக் குழுவின் தலைவராகவும் இருந்தார். மேலும் இவர் இந்தியாவில் தென்னை நார் தொழில் வளர்ச்சிக்கான அகில இந்தியக் குழுவின் உறுப்பினராகவும், அகில இந்திய தென்னை நார் வாரியத்தின் உறுப்பினராகவும் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members - Kerala Legislature". www.niyamasabha.org. பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
  2. Assembly, Kerala (India) Legislative (1964). Proceedings; Official Report (in மலையாளம்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._குஞ்சுராமன்&oldid=3633406" இலிருந்து மீள்விக்கப்பட்டது