உள்ளடக்கத்துக்குச் செல்

இலாகூர் அறிவுப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலாகூர் அறிவுப் பூங்கா (Lahore High Court) என்பது பாக்கித்தான் நாட்டின் இலாகூர் மாவட்டத்தில் உள்ள பெடியன் சாலையில் 852 ஏக்கர் பரப்பளவில் கட்டுமானத்தின் கீழ் உள்ள ஓர் அறிவியல் பூங்காவாகும். [1] [2] [3]

1 பில்லியன் டாலர் ஆரம்ப முதலீட்டில் லாகூர் அறிவியல் பூங்கா நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது, இதில் $200 மில்லியன் பஞ்சாப் அரசாங்கம் முதலீடு செய்துள்ளது. இந்த திட்டத்தை புரோசுட்டு & சல்லிவன் என்ற அமெரிக்க நிறுவனத்தினர் வடிவமைத்துள்ளனர். பூங்காவில் பல்கலைக்கழகங்கள், அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு மையங்கள், சில்லறை மற்றும் மத்திய வணிக மாவட்டம், குடியிருப்பு மாவட்டம், பொழுதுபோக்கு மண்டலம் மற்றும் பசுமைப் பகுதிகள் ஆகியவை உள்ளன. [4]

பாக்கித்தான் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையம் இப்பூங்காவில் கட்டப்பட்டு வருகிறது. [5]

மூலத் திட்டம்[தொகு]

பூங்காவின் மூலத் திட்டம் இதை ஐந்து வகைகளாகப் பிரிக்கிறது: [6]

  • வாழ்க்கை அறிவியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம்,
  • வடிவமைப்பு மற்றும் படைப்புத் தொழில்,
  • தகவல் தொழில்நுட்பம்,
  • கணினி அறிவியல்
  • அறிவியல் மற்றும் பொறியியல்

2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, இசுலாமாபாத்து நகரத்திலுள்ள் காசுமோட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இலான்காசுட்டர் பல்கலைக்கழகம் இணைந்து பூங்காவில் ஒரு பட்டதாரி பள்ளியை அமைக்கும். [7] [8] [9] தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் அதன் வளாகத்தை பூங்காவிற்கு மாற்றும். [10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lahore Knowledge Park | HIGHER EDUCATION DEPARTMENT". பார்க்கப்பட்ட நாள் 2016-08-13.
  2. "Lahore Knowledge Park master plan approved". பார்க்கப்பட்ட நாள் 2016-08-13.
  3. "Cosmopolitan effect: Knowledge Park to attract international universities - The Express Tribune". http://tribune.com.pk/story/1310012/cosmopolitan-effect-knowledge-park-attract-international-universities/. 
  4. "A billion dollar project, Lahore Knowledge Park, to produce 11,200 PhDs" (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-07-25. பார்க்கப்பட்ட நாள் 2016-08-13.
  5. "CEO LKP talks about creation of a knowledge park in Lahore". பார்க்கப்பட்ட நாள் 2017-03-21.
  6. "Looking beyond infrastructure, Punjab builds knowledge park - The Express Tribune" (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-07-24. பார்க்கப்பட்ட நாள் 2016-08-13.
  7. "Lahore Knowledge Park Company".
  8. "Pacts for Lahore Knowledge Park".
  9. "CEO LKP talks about creation of a knowledge park in Lahore".
  10. "Sharif reviews Lahore Knowledge Park Project".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலாகூர்_அறிவுப்_பூங்கா&oldid=3846050" இலிருந்து மீள்விக்கப்பட்டது