அடோல்ஃப் இயூஜின் பிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடோல்ஃப் பிக்
Adolf Fick
அடோல்ஃப் பிக் (1829–1901)
பிறப்பு3 செப்டம்பர் 1829
காசெல், செருமனி
இறப்பு21 ஆகத்து 1901(1901-08-21) (அகவை 71)
பிளாக்கென்பெர்க், பெல்ஜியம்
தேசியம்செருமனியர்
துறைஉடலியங்கியல்
உயிரி இயற்பியல்
பணியிடங்கள்சூரிக் பல்கலைக்கழகம்
வூர்சுபுர் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்மார்பூர்க் பல்கலைக்கழகம்
ஆய்வேடுகண் பார்வையின் சமச்சீரற்ற தன்மையால் ஏற்படும் ஒளியியல் பிறழ்வு (1851)
ஆய்வு நெறியாளர்பிரான்சு லூட்விக் பிக்[1]
அறியப்படுவதுபரவலுக்கான பிக்சு விதிகள்
பிக் கோட்பாடு
இம்பேர்ட்-பிக் விதி]]

அடோல்ஃப் இயூஜின் பிக் (Adolf Eugen Fick, 3 செப்டம்பர் 1829 - 21 ஆகத்து 1901) செருமனியில் பிறந்த மருத்துவரும், உடலியங்கியலாளரும் ஆவார்.

1855 இல், இவர் பிக்கின் பரவல் விதிகளை அறிமுகப்படுத்தினார், இது ஒரு திரவ சவ்வு முழுவதும் வாயுப் பரவலைக் கட்டுப்படுத்துகிறது. 1870 ஆம் ஆண்டில், இப்போது பிக் கோட்பாடு என்று அழைக்கப்படுவதைப் பயன்படுத்தி, இதய வெளிப்பாட்டை முதலில் அளந்தார்.

பிக் தனது பரவல் விதியை இருமுறை வெளியிட முடிந்தது, ஏனெனில் இது உடலியங்கியலுக்கும், இயற்பியலுக்கும் சமமாகப் பொருந்தும். இவரது பணி இதய வெளிப்பாட்டை அளவிடுவதற்கான நேரடி பிக் முறையை உருவாக்க வழிவகுத்தது.

பிக்கின் மருமகன், அடோல்ஃப் காசுட்டன் இயூஜென் பிக் தொடு வில்லையைக் கண்டுபிடித்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடோல்ஃப்_இயூஜின்_பிக்&oldid=3958274" இலிருந்து மீள்விக்கப்பட்டது