இரண்டாம் சாதுல்லா கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் சாதுல்லா கான்
Sa'adatullah Khan II
ஆற்காடு நவாப்
ஆட்சி1742 - 1744
முன்னிருந்தவர்சப்தார் அலி கான்
பின்வந்தவர்அன்ருதீன் கான்
முழுப்பெயர்
இரண்டாம் முகமது சய்யித் சதாதுல்லா கான்
தந்தைசப்தார் அலி கான்
இறப்பு1742 சூலை
ஆற்காடு

இரண்டாம் சாதுல்லா கான் (- ஜூலை 1744, முஹம்மத் சயீத்) என்பவர் சப்தார் அலி கானின்  இளைய மகன் ஆவார். ஆனாலும் ஆற்காட்டின் நவாப் ஆனார்.

வாழ்க்கை[தொகு]

1742 இல் சப்தர் அலி கான் படுகொலை செய்யப்பட்ட பிறகு, மர்த்தாசா அலி கான் ஆற்காடு (கர்நாடகத்தின்) நவாபாக  கூறிக்கொண்டார். இதற்கிடையில், மராத்தா தலைவர் ராகோஜி போன்ஸ்லேவால் சதாராவில்  சிறைத்தண்டனை பெற்ற வந்த சாந்தா சாஹிப் கடுமையாக முயன்று பேச்சுவார்த்தை நடத்தி அதன்பிறகு பிறகு அவர்களிடம் இருந்து விடுதைலை அடைந்தார். இவரும் மர்த்தாசா அலியை ஆதரித்தார்.

இருந்தாலும், சென்னை மாகாணத்தில் உள்ள ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் முஹம்மத் சயீதை ஆதரித்ததுடன் அவரை ஆற்காட்டின் நவாபாக அறிவித்தது. அதே சமயம், முதலாம் நிஜாம் உல் முல்க் ஆசாப் ஜா வலிமையான படைகளுன் வந்து முஹம்மது சையதுக்கு ஆதரவு அளித்ததார். ஆனால் அவர் சிறுவனாக இருந்ததால், அவரின் அரசப் பிரதிநிதியாக அன்வரூதீன் கான் 28 மார்ச் 1743 இல் பொறுப்பேற்றார்.

எனினும், முஹம்மது ஸையீத், 1744 சூலையில் ஆற்காட்டில்ஆற்காட்டில் கொல்லப்பட்டார். இதனால், அவருடன், ஆற்காடு நவாபின் முதல் வம்சம் முடிவுக்கு வந்தது. இதன் விளைவாக முதலாம் நிஜாம் உல் முல்க் ஆசாப் ஜா நவாபாக பதவியேற்றார்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_சாதுல்லா_கான்&oldid=3630639" இலிருந்து மீள்விக்கப்பட்டது