தேவதாஸ் தேவபிரபாகரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேவதாஸ் தேவபிரபாகரா[தொகு]

தேவதாஸ் தேவபிரபாகரா என்பவர் ஒரு இந்திய கரிம வேதியலாளர். இவர் இந்திய அறிவியல் கழகத்தில் வேதியியல் துறையின் பேராசிரியராக இருந்தார். 1932ல் பிறந்த இவர் 1978ல் காலமானார். வளைய அல்லீன்கள் மற்றும் நடுத்தர வளைய டையீன்கள் பற்றிய ஆராய்ச்சியில் புகழ் பெற்றவர். வளைய அல்லீன்கள் மற்றும் நடுத்தர வளைய டையீன்களின் ஒடுக்கம், ஹைட்ரோபோரெஷன், ஐஸோமெரிஷேஷன் ஆகியவற்றில் அவர் செய்த ஆராய்ச்சிகளும், மேலும் வளைய ஹைட்ரோகார்பன்களின் தயாரிப்பு பல்வேறு ஸப்ஸ்ட்ரேட்டுகளைப் பற்றிப் புரிந்து கொள்ள உதவுகிறது. தனது ஆராய்ச்சி முடிவுகளை ஒப்பார்க்குழு மீளாய்வு செய்யக்கூடிய கட்டுரைகளாக வெளியிட்டார். இந்தியன் அகாடமி ஆஃப் சயின்ஸஸ் அவற்றில் 48 கட்டுரைகளை இன்லைன் களஞ்சியத்தில் பட்டியலிட்டுள்ளது. இந்தியன் அகாடமி ஆஃப் சயின்ஸஸில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விஞ்ஞான ஆராய்ச்சிக்கான இந்திய அரசாங்கத்தின் உச்ச நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், 1976 ஆம் ஆண்டில் இவருக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசினை அவரின் இரசாயன அறிவியலுக்கான பங்களிப்புகளுக்காக வழங்கி கெளரவித்தது. 12 ஜனவரி 1978ல் தனது 38ஆவது வயதில் இவர் காலமானார்.

மேலும் பார்க்க[தொகு]

வளைய ஹைட்ரோகார்பன்கள்

மேற்கோள்[தொகு]

"A Regio-and Stereo-Specific Addition of Iodine Azide to C-9 and C-13 Cyclic Allenes". Sr. S. N. Moorthy. 2016.

Jump up ^ "Brief Profile of the Awardee". Shanti Swarup Bhatnagar Prize. 2016. Retrieved November 12, 2016. Jump up ^ "Handbook of Shanti Swarup Bhatnagar Prize Winners" (PDF). Council of Scientific and Industrial Research. 2016. Jump up ^ "Records". Science Central. 2016. Jump up ^ "Browse by Fellow". Indian Academy of Sciences. 2016. ^ Jump up to: a b "Fellow profile". Indian Academy of Sciences. 2016. Retrieved November 12, 2016. Jump up ^ "View Bhatnagar Awardees". Shanti Swarup Bhatnagar Prize. 2016. Retrieved November 12, 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

Bal Krishan Kaul; Arvind P. Kudchadker; Devadas Devaprabhakara (1973). "Investigation of temperature dependence of the interaction second virial coefficient using gas–liquid chromatography". J. Chem. Soc., Faraday Trans. 1. 69: 1821-1826. doi:10.1039/F19736901821

உசாத்துணை[தொகு]

https://en.wikipedia.org/wiki/Devadas_Devaprabhakara

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவதாஸ்_தேவபிரபாகரா&oldid=2722852" இருந்து மீள்விக்கப்பட்டது