ஸ்பரங் ரிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேச்சுச் சந்தம் (Sprung rythm) இயற்கைப் பேச்சின் தாளத்தைப் பின்பற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கவிதைத் தாளமாகும். இதை அறிமுக படுத்தியவர் ஜெரார்டு மேன்லி ஆப்கின்சு ஆவார். அதுமுதல் அடியை வலியுறுத்தப்படும் அடிகளில் இருந்து அழுத்தி உச்சரிக்க வேண்டியவை குறிகளால் சுட்டப்பட்டு, வலியுறுத்தப்படாத அடிகளாக பிற தொடர்ந்து வரும் எனக் கூறினார். இவர் இதை ஆங்கிலப் பேச்சுக் கவிதையில் இருந்து புதிதாகக் கண்டுபிடித்தார். பிரித்தானியக் கவிஞர் ஜெரார்டு மேன்லி ஆப்கின்சு, முந்தைய காலத்தில் நாட்டுப்புறப் பாடல்களில் அமைந்த இயற்கைப் பேச்சின் கவிதைத் தாளத்தை மீள வடிவமைத்தார்.அவர் கடுமையாய் உச்சரிக்கப்பட வேண்டியவைகளை குறிப்பிடுவதற்கு சுட்டிக்காட்டுதலில் குறியெழுத்து (acute e.g. á ) வழிமுறைகளைப் பயன்படுத்தினார். இதில் இவர் அசையின் இயல்பான நேரத்தை உச்சரிக்கும் அசை சார்ந்த நேரமாக மாற்றினார். சில திறனாய்வாளர்கள் அவர் வெறுமனே கலப்பு, ஒழுங்கற்ற அடியை வடிவமைத்துள்ளார் என்று கண்டித்தனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Schneider, E. W. (June 1965). "Sprung Rhythm: A Chapter in the Evolution of Nineteenth-Century Verse". PMLA. 80 (3): 237–253.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பரங்_ரிதம்&oldid=3727177" இலிருந்து மீள்விக்கப்பட்டது