கோந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Corymbia calophylla kino
கோரிம்பியா காலோபிலா கினோ(கோந்து)

கோந்து (Gum) என்பது சில தாவரங்களின் சாறும் பிசின்பொருட்களும் அடங்கிய ஒட்டுபொருளாகும். இது எப்போதும் பலசர்க்கரைப் பொருளால் ஆனதாகும். இது மரப்பட்டைகளின் அடியிலோ விதைப் பூச்சாகவோ அமைகிறது. இந்த பலசர்க்கரைப் பொருள் உயர் மூலக்கூற்று எடையுடன் நீர்வேட்பிகலாக அமைகின்றன[1] மேலும், நீர்நொய்மங்களாகவும் உள்ளன.

விதைப்பூச்சாக[தொகு]

பல கோந்துகள் தவரங்களின் விதைப்பூச்சாக அமைகின்றன; கோந்துப் பூச்சின் தகவமைப்பு நோக்கம் விதை முளைத்தலைக் காலத் தாழ்த்தம் செய்வதேயாகும். இந்த கோந்துப் பூச்சுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக, மேற்கு நச்சு ஓக் மரம் ஆகும். இது பரவலாக மேல்வட அமெரிக்காவில் காணப்படுகிறது.[2]

Gum from Red Gum crystaline
செம்படிகக் கோந்து

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Schröder, Monika J. A. (2003). Food Quality and Consumer Value: Delivering Food that Satisfies. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-540-43914-5. https://archive.org/details/foodqualityconsu0000schr. 
  2. Hogan, C. Michael (15 October 2008). Nicklas Strömberg (ed.). "Western poison-oak: Toxicodendron diversilobum". GlobalTwitcher. Archived from the original on 21 July 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோந்து&oldid=3914192" இலிருந்து மீள்விக்கப்பட்டது