ஒளிக்காலத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒளிக்காலத்துவம் (Photoperiodism) என்பது ஒளி மற்றும் இருள் ஆகியவற்றிற்கு ஏற்ப உயிரினங்களில் ஏற்படும் உடற்செயலியல் நிகழ்வு ஆகும். இச்செயல் தாவரம் மற்றும் விலங்குகளில் காணப்படுகிறது. ஒளி மற்றும் இருள் ஆகியவற்றின் அளவிற்கேற்ப தாவரங்களின் வளர்ச்சி நிலைகளில் ஏற்படும் மாற்றம் என்றும் வரையறுக்கலாம்.

தாவரங்கள்[தொகு]

பல ஆஞ்சியோஸ்பெர்ம் பூக்கும் தாவரங்களில் ஃபைட்டோகுரோம் அல்லது கிரிப்டோகுரோம் என்ற ஒளியை ஈர்க்கும் புரதங்கள் உள்ளன. இந்த புரதங்கள் பூக்கள் மலர்வதற்கு இருளின் நீளம் அல்லது பகலின் நீளம் ஆகியவற்றைக் கண்டறிகிறது.

முழுமையான ஒளிநாட்டத் தாவரங்கள்[தொகு]

சில தாவரங்களின் பூக்கள் மலர்வதற்கு முழுமையான இருள் அல்லது குறைவான இருள் தேவைப்படுகிறது. இவ்வகைத் தாவரங்களுக்கு முழுமையான ஒளிநாட்டத் தாவரங்கள் (Obligate Photo Periodic Plants) என்று பெயர்.

பகுதி ஒளிநாட்டத் தாவரங்கள்[தொகு]

இத்தாவரங்களின் பூக்கள் மலர்வதற்கு குறைவான ஒளி அல்லது இருள் தேவைப்படுகிறது.

பைட்டோகுரோம் வகைகள்[தொகு]

இது இரண்டு வகைப்படும். அவை: Pr, Pfr.[1] Pr என்பது செயலற்ற ஃபைட்டோகுரோம் வகையாகும். இது தாவரங்கள் குறைவான ஒளியில் வளர்வதைத் தடை செய்கிறது. Pfr என்பது செயல்படும் ஃபைட்டோகுரோம் புரதமாகும். பகலிலுள்ள சிவப்பு ஒளி Pr என்ற செயலற்ற ஃபைட்டோகுரோம் புரதத்தை செயல்படும் ஃபைட்டோகுரோம் (Pfr) புரதமாக மாற்றுகிறது. செயல்படும் ஃபைட்டோகுரோம் புரதத்தினால் தாவரங்கள் வளர்கின்றன. இதற்கு மாறாக நிழலில் அல்லது இரவில் சிவப்பு ஒளி குறைவாக காணப்படுவதால் இவ்வொளி செயல்படும் நிலையிலுள்ள Pfr ஃபைட்டோகுரோம் புரதத்தை செயலற்ற Pr என்ற ஃபைட்டோகுரோம் புரதமாக மாற்றுகிறது. இதனால் தாவரங்கள் இருளில் அல்லது நிழலில் நன்றாக வளர்வதில்லை.[2][3][4]

தாவரங்களில் காணப்படும் இந்த ஃபைட்டோகுரோம் தாவரங்களின் ஒளிக்காலத்துவத்தை நிர்ணயிக்கின்றன. பூக்கும் தாவரங்களில் ஒளிக்காலத்துவத்தை Holiday என்பவர் சோதனை மூலம் நிரூபித்தார். இதே போன்று சில தாவரங்களில் நீல ஒளி மற்றும் புற ஊதாக் கதிர் A ஆகியவற்றை ஈர்க்கும் தன்மை கொண்ட கிரிப்டோகுரோம் என்ற புரதமும் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Fankhauser, Christian (2001). "The Phytochromes, a Family of Red/Far-red Absorbing Photoreceptors". Journal of Biological Chemistry 276 (15): 11453–11456. doi:10.1074/jbc.R100006200. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9258. பப்மெட்:11279228. 
  2. Casal, J.J. (2014). "Light perception and signalling by phytochrome A". Journal of Experimental Botany 65 (11). (11): 2835–2845. doi:10.1093/jxb/ert379. பப்மெட்:24220656. 
  3. Lin, Chentao (2000). "Photoreceptors and Regulation of Flowering Time". Plant Physiology 123 (1): 39–50. doi:10.1104/pp.123.1.39. பப்மெட்:10806223. 
  4. Chamovitz, Daniel (2013). What A Plant Knows. Scientific American. பக். 17–18. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-374-28873-0. 

மேலும் படிக்க[தொகு]

  • D.E. Fosket, Plant Growth & Development, A Molecular Approach. Academic Press, San Diego, 1994, p. 495.
  • B. Thomas and D. Vince-Prue, Photoperiodism in plants (2nd ed). Academic Press, 1997
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிக்காலத்துவம்&oldid=3461761" இலிருந்து மீள்விக்கப்பட்டது