ரஹ்மானியா ஜும்ஆ பள்ளிவாசல், சித்தார்த்நகர்

ஆள்கூறுகள்: 27°30′00″N 83°27′00″E / 27.5000°N 83.4500°E / 27.5000; 83.4500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஹ்மானியா ஜும்ஆ பள்ளிவாசல், சித்தார்த்நகர்
ரஹ்மானியா ஜும்ஆ பள்ளிவாசல்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம் நேபாளம்
சமயம்இசுலாம்
மண்டலம்நேபாளம்
மாநிலம்நேபாள மாநில எண் 5
மாவட்டம்ரூபந்தேஹி மாவட்டம்
மாநகராட்சிசித்தார்த்நகர்
நிலைசெயல்பாடில் உள்ளது.

ரஹ்மானியா ஜும்ஆ பள்ளிவாசல் (Jama Masjid Rahmaniya) நேபாள நாட்டின் நேபாள மாநில எண் 5 மாநிலத்தில் ரூபந்தேஹி மாவட்டத்தில் சித்தார்த்நகர் ஊரில் உள்ள பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் கி.பி.1950 இல் கட்டப்பட்டது .இப்பள்ளிவாசல் நேபாள நாட்டின் பழமையான பள்ளிவாசல் ஆகு‌ம்.

அமைவிடம்[தொகு]

இப்பள்ளிவாசல் நேபாள நாட்டின் நேபாள மாநில எண் 5 மாநிலத்தில் ரூபந்தேஹி மாவட்டத்தில் சித்தார்த்நகர் ஊரில் அமைந்துள்ளது.சித்தார்த்நகரின் பழைய பெயர் பைரவா ஆகும்.[1]

மதரசா[தொகு]

மதரசா

மதரசா அரேபியா அன்சாரியை பைசுல் இசுலாம் என்பது ரஹ்மானியா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் இயங்கும் மதரசா ஆகும்.இந்த மதரசா கி.பி.1950 இல் கட்டப்பட்டது.[2] தற்போது இங்கு 200 இசுலாமிய மாணவர்கள் பயில்கின்றனர்.இங்கு அரபி, பார்சி, உருது, ஆங்கிலம், நேபாளி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் போதிக்கப்படுகின்றன.மதரசா அரசாங்கம் அனுமதி பெற்று இயங்கி வருகிறது.[3]

அஹ்லே சுன்னத் ஜமாத்[தொகு]

அஹ்லே சுன்னத் ஜமாத் (Ahle Sunnat Wa Jamat Anjuman Islamiya Committee,Hindi:अहले सुन्नत व जमात अन्जुमन इस्लामिया कमिटी, Urdu:اہلسنت و جماعت انجمن اسلامیہ کمیٹی) நிர்வாகிகள் குழு இப்பள்ளிவாசல் மற்றும் மதரசாவை நிர்வகிக்கிறது.இந்த குழு தேர்தல் மூலம் தேர்வு செய்ய படுகிறது.[4]


மேற்கோள்கள்[தொகு]