கோவிந்த பகவத் பாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவிந்த பகவத் பாதர்
கௌடபாதாச்சாரியார், கோவிந்த பகவத்பாதாவின் குரு, ஆதி சங்கரரின் மகத்தான குரு மற்றும் அத்வைத வேதாந்தத்தின் முதல் வரலாற்று ஆதரவாளர், ஸ்ரீ கௌடபாதாச்சார்யா மடத்தின் நிறுவனர் என்றும் நம்பப்படுகிறது.
சுய தரவுகள்
சமயம்இந்து சமயம்

கோவிந்த பகவத் பாதர் (Govinda Bhagavatpada) என்பவர் ஆதிசங்கரரின் குருவும்[1], கௌடபாதரின் சீடருமாவார்.[2] அனைத்து பாரம்பரிய கணக்குகளிலும் ( சங்கர விஜயம் உட்பட ) இவர் ஆதி சங்கரரின் ஆசிரியராக குறிப்பிடப்படுவதைத் தவிர, இவரது வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இவர் ஆதி சங்கரரின் பிரகாரண கிரந்தத்தின் முதல் வசனமான விவேக சூடாமணியில் குறிப்பிடப்பட்டுள்ளார் . சிருங்கேரி சாரதா மடத்தின் குரு பரம்பரையில் கௌடபாதரின் பெயரால் இவர் பெயரிடப்பட்டார்.[2] இவர் ஆதிசேஷன் அவதாரமாக கருதப்படுகிறார்.

குருவின் சந்திப்பு[தொகு]

மாதவீய சங்கர விஜயம் எனும் நூலில், கோவிந்த பகவத் பாதரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆதிசங்கரர், காலடியை நீங்கி, நர்மதை ஆற்றை அடைந்த போது, கோவிந்த பகவத் பாதர், ஆற்றங்கரையில் சமாதி நிலையில் இருந்தார். அந்நேரத்தில், நர்மதை ஆற்றில் எதிர்பாராது பெருக்கெடுத்த வெள்ளத்தை தன் கமண்டலத்தைக் கொண்டு தடுத்து, சமாதி நிலையில் இருந்த கோவிந்த பகவத் பாதரின் உயிரைக் காத்தார்.

ஆதிசங்கரரை நோக்கி நீ யார் எனக் கேட்டார். அதற்கு சங்கரர் அத்வைத தத்துவத்தில் செய்யுள் நடையில் சில சுலோகங்களில் நான் யார் என்பதை விளக்கியதை கேட்ட கோவிந்த பகவத் பாதர், சங்கரரை தன் சீடராக ஏற்றுக் கொண்டார்.[1]

கோவிந்த பகவத் பாதரின் ஆணைப்படி, சங்கரர், உபநிடதம், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகிய இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்களுக்கு பாஷ்யம் எழுதி, அத்வைத வேதாந்தத்தை இந்தியா முழுவதும் தானும், தனது சீடர்கள் மூலமும் பரப்பினார்.

கோவிந்த பகவத் பாதரின் நினைவைப் போற்றும் வகையில், ஆதிசங்கரர் தான் எழுதிய பஜ கோவிந்தம் எனும் நூலில், குரு தோத்திரத்தில் கோவிந்த பகவத் பாதரின் பெருமைகளை விளக்கியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Sri Sankara Bhagavatpada and Sri Kanchi Kamakoti".
  2. 2.0 2.1 "Sringeri Sharada Peetham | Offline".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்த_பகவத்_பாதர்&oldid=3875003" இலிருந்து மீள்விக்கப்பட்டது