படிவ நிரலாக்க மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படிவ நிரலாக்க மொழிகள் (Scripting languages) அல்லது படிவ மொழிகள் என்பன நிரலாக்க மொழிகளுள் ஒரு பிரிவாகும். இவ்வகை மொழிகளின் நிரற்றொடர் தொகுப்பு படிவங்கள் (Scripts) என்றழைக்கப்படும். இப்படிவங்கள் வழக்கமாக மெலிதான மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பின்னர் இயக்கப்படும்.

படிவங்கள் நிரல்களிலிருந்து (Programs) வேறுபட்டவை. நிரல்களை இயக்க இருநிலை மொழியில் உள்ள இயக்கக்கூடிய கோப்புக்களாக நிரந்தரமாக மாற்றினால்தான் இயலும்.

படிவங்கள் அவ்வாறில்லாமல் எழுதப்பட்ட வடிவிலேயே ஒரு-நிரற்றொடர்-ஒரு-நேரத்தில் என்று மொழிப்பெயர்க்கப்பட்டு இயக்கப்படும்.

படிவ நிரலாக்கம்[தொகு]

பொதுவாக நாம் ஒரு நிரலை நிரலாக்க மொழியில் எழுதி அதை "Compile" செய்த பின்னரே பயன்படுத்த முடியும். அதாவது அதை "கம்பைளர்" மூலம் கணினி இயந்திர மொழிக்கு மாற்றிய பின்னரே பயன்படுத்த முடியும். அனால் படிவங்களை நேரடியாக நிரலின் மூலம் ஆரம்பிக்க (Run) முடியும். கணினி நிரல்கள் படிவ நிரலாக்க மொழியை வாசித்து, அதை அறிந்து செயற்படுத்தும். உதாரணமாக சி++(C Plus Plus) மூலம் உருவாக்கப்பட்ட ஓர் இனைய உலாவி (Web Browser), இனைய வடிவமைப்பாளர்களால் எழுதப்பட்ட "Javascript" படிவத்தில் உள்ள கட்டளைகளை ஏற்று செயற்படும்.

உதாரணங்கள்[தொகு]

  • அப்பில் ஸ்கிரிப்ட்(AppleScript)
  • லுவா (Lua)
  • பைதான் (Python)
  • ரூபி (Ruby)
  • ஜாவாஸ்கிரிப்ட் (Javascript)
  • பி.எச்.பி (PHP
  • ஷெல் (Shell)
  • பச் (Batch)

உதாரண படிவம்[தொகு]

இது ஒரு பச் படிவம், சாதாரண நோட்பேட் இலும் எழுதக்கூடியது.[தொகு]

{example.bat}

@echo off
title Wiki Tamil Script example

:main
cls
echo Hello! Tamil Wiki User,
set /p name=Please enter your name here :
goto run

:run
clse
cho Hello %name%, Welcome to wikipedia! The free encyclopedia.
pause
cls
echo This is very easy %name%, Try your own soon!
pause

பச் என்பது மிகவும் இலகுவான ஒரு "படிவ நிரலாக்க மொழியாகும்", விண்டோஸ் இயங்குதளத்தில் மட்டும் இயங்கக்கூடியது

சில நேரங்களில் நிரலாக்க மொழிகள் படிவ நிரலாக்க மொழிகளாகவும், படிவ நிரலாக்க மொழிகள் நிரலாக்க மொழிகளாகவும் பயன்படுதுண்டு.

பொதுவாக நிரலாக்க மொழிகளை விட பாடிவ நிரலாக்க மொழிகள் இலகுவாக வாசித்தறியக்கூடியதாக இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=படிவ_நிரலாக்க_மொழி&oldid=1985962" இலிருந்து மீள்விக்கப்பட்டது