மொசார்ட் விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொசார்ட் விளைவு (Mozart effect) என்பது ஆஸ்ட்ரியா நாட்டில் பிறந்து 1756 – 1791 காலத்தில் வாழ்ந்த ஒரு மாபெரும் இசை மேதையான. மோட்சார்டின் சொனாட்டா(Sonata)(K448) இசையை 10 நிமிடம் கேட்டால் சாதாரணப் பொருட்களுடன் தொடர்புடைய காலம் மற்றும் இடம் பற்றிய கற்பனைத் திறன் தற்காலிகமாக மேம்படுகிறது என்ற கருத்தாகும்.[1][2] 1993 ல் ரௌச்சர்(Rauscher)என்ற ஆய்வாளர் இதனைக் கூறினார்.[3] இந்த அகநிலை மாற்றம் 10 -15 நிமிடங்களுக்கு மட்டுமே இருந்தது. சில ஆராய்ச்சியாளர்கள் அதை உறுதி செய்தாலும் வேறு சிலர் இதை ஒப்புக் கொள்ள மறுத்தனர். இசையில் மயங்கி தன் மனதைப் பறிகொடுத்துவிட்டு மகிழ்ச்சியால் துள்ளி எழும்போது ஏற்படும் உற்சாகமே இப்படி வெளிப்படுகின்றது என்றும், நுகர் உணர்வு இல்லாவிட்டால் இப்படி நிகழ வழியில்லை என்றும், மொசார்ட் விளைவு என்று ஒன்றும் இல்லை என்றும் இவர்கள் கூறினார்கள்.

இதனால் ஆராய்ச்சியாளர்கள் எலிகளை வைத்து மொசார்ட் இசையின் தாக்கம் எவ்வாறு இருக்கிறது என ஆராய்ந்தனர். எலிகளின் சுறுசுறுப்பு இசை கேட்ட பின் இயல்பு நிலையைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. ரசிப்புத் தன்மை, திறன் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கவில்லை எனக் கண்டறிந்தனர். சிறு வயதுக் குழந்தைகளுக்கு இசைப் பயிற்சி அளித்த போது அவர்கள் இசைப்பயிற்சி பெறாத குழந்தைகளை விட செயல் திறன்மிக்கவர்களாக இருந்தனர்.[3] இதை PET எனப்படும் பாசிட்ரான் உமிழ்வு வரைபடம் காட்டி(Positron emission tomography ) மூலமும் காந்த ஒத்ததிர்வு வரைபடம் காட்டி மூலமும் மூளையை விரிவாக ஆராய்ந்தனர்.

இசை கேட்டு ரசிக்கும் போது மூளையின் பல பகுதிகள் ஒரு சேர தூண்டப்படுகின்றன. இசையின் சுருதி, தாளம், பண்திறம் அதிர்வெண், ஒத்ததிர்வு, சுரம், ஒலிப்பண்பு, ஏற்ற இறக்கம் போன்ற பல இயற்பியல் தன்மைகள் மூளையின் வெவேறு பகுதிகளினால் உணரப்படுகின்றன. அதாவது இசை மூளையின் பல பகுதிகளை சட்டென உறக்க நிலையிலிருந்து இயக்க நிலைக்கு உயர்த்தி விடுகின்றது. அது போல ஒரு பொருளைக் கொண்டு வினையாற்றும் போதும் மூளையின் வேறு பல பகுதிகள் தூண்டப்படுகின்றன. இப் பகுதிகள் யாவும் இசை உணர் பகுதிகளுடன் மேற் பொருந்தியிருக்கின்றன.[4] இதனால் இசை கேட்டுக் கொண்டே வினையாற்றும் போது செயல் திறன் வெகுவாக மேம்படுகின்றது எனக் கண்டறிந்துள்ளனர்.[5]) இசைக்கும், உயிரினங்களுக்கும் ஒரு உள்ளார்ந்த தொடர்பு இருப்பதையே இவை தொட்டுக் காட்டுகின்றன.

உணர் திறனைக் கொண்டு நினைவாற்றலை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கு மொசார்ட் விளைவு ஒரு சான்றாகும். சிறிது நேரமே மொசார்ட் இசையை கேட்டாலும் குழந்தைகளின் செயல் திறன் பெரிதும் மேம்படுகின்றது. கற்பனைத் திறனில் குறிப்பிடும்படியான தற்காலிய மாற்றமும், கணக்குப் போடுதல், சதுரங்கம் விளையாடுதலில் புத்திசாலித்தனமும், குழப்பமின்றி விரைந்து செயல்படும் தன்மையும் ஏற்படுகின்றன.[6] வலிப்பு நோய் (epilepsy) வந்தவர்கள் இசையால் குணமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[7] கற்றலில் குறைபாடு டிஸ்லெக்சியா, கவனச்சிதைவு நோய், ஆட்டிசம், மனமற்றும் உடலியக்கக் குறைபாடுடையோர் மன நோய் உள்ளவர்கள் இசையால் ஓரளவு குணமடைகின்றார்கள்.[8] இசை, நரம்புகளின் மூலம் நடைபெறும் செய்திப் பரிமாற்றங்களை ஒழுங்குபடுத்துவதால் இந்த உடலியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன எனக் கண்டறிந்துள்ளனர்.[7]

மேற்கோளும் குறிப்புகளும்[தொகு]

  1. William Pryse-Phillips (2003). Companion to Clinical Neurology. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-515938-1. https://archive.org/details/companiontoclini0000prys_v6i7. , p. 611 defines the term as "Slight and transient improvement in spational[sic] reasoning skills detected in normal subjects as a result of exposure to the music of Mozart, specifically his sonata for two pianos (K448)."
  2. Dr.M.Meyyappan (SUNDAY, OCTOBER 7, 2012). "அறிக அறிவியல்". creative thoughts. பார்க்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2012. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. 3.0 3.1 எஆசு:10.1038/365611a0
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  4. Thompson, W.F., Schellenberg, E.G. & Husain, G. (2001). Mood, arousal, and the Mozart effect. Psychological Science, 12(3), 248-251.
  5. Wilson, T., Brown, T. (1997). Reexamination of the effect of Mozart's music on spatial task performance. Journal of Psychology. 131 (4), 365. Retrieved December 4, 2007, from EbscoHost Research Databases.
  6. United States Patent and Trademark Office Trademark Application and Registration Retrieval (TARR).
  7. 7.0 7.1 "The Mozart Effect". epilepsy.org. பார்க்கப்பட்ட நாள் 2007-08-07.
  8. Campbell, Don (1997). The Mozart Effect: Tapping the Power of Music to Heal the Body, Strengthen the Mind, and Unlock the Creative Spirit. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-380-97418-5. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொசார்ட்_விளைவு&oldid=3848985" இலிருந்து மீள்விக்கப்பட்டது