சிம்சோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிம்சோன்
சிம்சோன் - சேர்னோவின் ஓவியம்
விவிலிய நீதித்தலைவர்
இறப்புடெல் சோரா, இசுரேல்
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம், கிறித்தவம்
சித்தரிக்கப்படும் வகைமிகவும் பலசாலியான நீதித்தலைவர்

சிம்சோன் (எபிரேயம்: שמשון‎, ஆங்கிலம்: Samson, சாம்சோன், அரபு மொழி: شمشون‎) எனப்படும் "சூரிய மனிதன்" எனும் பொருளுடையவர்[1] (அரபு மொழி: شمشون‎) ரனாகில் (எபிரேய விவிலியம்) நீதித் தலைவர்கள் அதிகாரங்கள் 13 முதல் 16 வரை உள்ள பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள பழைய இசுரவேலரின் நீதித்தலைவர் ஆவார்.[2][3]

விவிலியத்தின்படி இஸ்ரயேல் மக்களைப் பிலிஸ்தியர்களின் கையிலிருந்து விடுவிக்கக் கடவுளால் மிகுந்த ஆற்றல் அளிக்கப்பட்டவர் ஆவார்.[4] இவர் தம்மீது கர்ச்சித்துக்கொண்டு பாய்ந்த சிங்கக்குட்டி ஒன்றை இரண்டாக வெறுங்கையால் கிழித்தார் எனவும் ஒரு கழுதையின் பச்சைத் தாடை எலும்பைக் கொண்டு ஆயிரம் பேரைக் கொன்றார் எனவும் விவிலியத்தின் பழைய ஏற்பாடு குறிக்கின்றது.

இசுரேலில் உள்ள டெல் டெசோராவின் இவரின் அடக்க இடம் இருப்பதாக யூதரும், கிறித்தவரும் நம்புகின்றனர்.

குறிப்புக்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Samson
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்சோன்&oldid=3580778" இலிருந்து மீள்விக்கப்பட்டது