ஐதராபாத் இலவச மீன் மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐதராபாத் இலவச மீன் மருத்துவம் ஐதராபாத்தில் ஆண்டுதோறும் பாதினி அரிநாத் கவுடு குடும்பத்தினரால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு இலவசமாக அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை ஆகும். ஆஸ்துமா நோய்க்கான மருந்து உயிருள்ள மீனின் வாயில் வைத்து நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. நோயாளிகளும் மருந்துடன் கூடிய சிறு மீனை அப்படியே விழுங்கி விடுகிறார்கள்.

பாதினி கவுடு சகோதரர்கள்[தொகு]

பாதினி கவுடு சகோதரர்கள் இந்தியாவில் ஆந்திரபிரதேச மாநிலம் ஐதராபாத்தில் வசிக்கும் கவுடு குடும்பத்தினர் ஆவர். இந்த கவுடு குடும்பம் தங்கள் பரம்பரை வழியாக வந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தி ஆஸ்துமா நோயைக் குணமாக்க முடியும் என்று கோருகிறார்கள். மருந்து அடைத்த இரண்டு அங்குல நீளமுள்ள மீனை உயிருடன் விழுங்குவதன் மூலம் ஆஸ்துமா குணமாகும் என்று வாக்களிக்கிறார்கள். கவுடு குடும்பம் கடந்த 160 வருடங்களாக இந்த சிகிச்சையை வெற்றிகரமாக அளித்து வருவதாகவும் கள் இறக்கும் பணிபுரிந்த இவர்களுடைய முப்பாட்டனார் திரு.பாதினி வீரன்ன கவுடு அவர்களே இந்த சிகிச்சையின் முன்னோடி என்றும் சொல்கிறார்கள்.[1]

கவுடு குடும்பத்தில் அரிநாத் கவுடு, ஸ்ரீ விஸ்வநாத் கவுடு, உமாமகேச்வர் கவுடு மறைந்த சோமலிங்கம் கவுடு மற்றும் சிவராம் கவுடு ஆகியோர் உறுப்பினர்கள்.

சிகிச்சை முறை[தொகு]

பாதினி மீன் மருந்து (பாதினி மிருகசிர மீன் என்றும் அறியப்படும்) இரண்டு அல்லது இரண்டரை அங்குல நீளமுள்ள உயிர் உள்ள விரால் மீன் (murrel fish) (வேறு பெயர் Ophiocephalus striatus Bloch) (பேரினம்: Channa, இனம்: Channa striatus) வாயில் திணிக்கப்படுகிறது. இந்த மீன், மருந்துடன் ஆஸ்துமா நோயாளியின் வாய் வழியாக விழுங்க வைக்கப்படுகிறது. (இந்த மீன் வழவழப்பாக இருப்பதால் விழுங்குவதில் சிக்கல் இருப்பதில்லை). உயிருடன் உள்ள இந்த மீன் தன் வாலையும் செதில்களையும் அசைத்தபடி நோயாளியின் தொண்டையில் பயணித்து சளி அடைப்புகளை (phlegm congestion) உடைத்து ஆஸ்துமாவை குணமாக்குவதாகக் கோரப்படுகிறது.[2] சற்றேறக்குறைய 45 நாட்கள் கடும் பத்திய உணவு மேற்கொண்டு தொடர்ந்து மூன்று வருடங்களுக்குச் சிகிச்சை மேற்கொள்ளுமாறு நோயாளி அறிவுறுத்தப்படுகிறார். இவ்வாறு மேற்கொள்ளும் சிகிச்சை ஆஸ்துமாவை முற்றிலும் குணமாக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

பாதினி மீன் மருந்து ஆண்டுதோறும் பருவ மழைக்காலம் தொடங்கும் நாட்களையொட்டி, ஜூன் முதல் அல்லது இரண்டாம் வாரம் மிருகசீர்ஷா கார்த்திகை (வைகாசி (ஜ்யேஷ்ட) மாதம்) நன்னாளில் நோயாளிகளுக்கு தரப்பட்டு விழுங்க வைக்கப்படுகிறது. மூன்று மேலதிகமான மருந்தளவுகள் (doses of the extra medicine) நோயாளிகளுக்கு தொடர்ந்து வரும் கார்த்திகை நட்சத்திர நாட்களான ஆருத்ரா கார்த்திகை, புனர்வசு கார்த்திகை மற்றும் புஷ்யமி கார்த்திகை நாட்களில் வழங்கப்படுகிறது. (பதினைந்து நாட்கள் இடைவெளியில் மொத்தம் 45 நாட்கள் அடங்கிய காலம்). இந்த சிகிச்சை முறையை எடுத்துக் கொள்பவர்கள் இந்த 45 நாட்கள் அடங்கிய காலகட்டத்தில் கடும் பத்தியம் அனுசரிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.[3]

தோற்றம்[தொகு]

பாதினி குடும்பத்தினர் சொல்கிறபடி இவர்களுடைய முப்பாட்டனார் ஒரு மொந்தைக் கள்ளும் வெள்ளை ரொட்டியும் சேர்த்துக் கடுமையாக உழைக்கும் தொழிலாளர்களுக்குத் தானமாக வழங்குவது வழக்கமாம். ஒரு இந்துத் துறவி 1845 ஆம் ஆண்டு முப்பாட்டனாரைச் சந்தித்தாராம். துறவி முப்பாட்டனாருக்கு வியக்கத்தக்கச் சக்தி நிறைந்த மூலிகை மற்றும் இரகசிய கலவை (formula) முறை போன்றவற்றைச் சொல்லி அங்குள்ள கிணற்றையும் தற்போது சிகிச்சை நடைபெறும் இடத்தையும் போற்றி வாழ்த்தினாராம். இந்த மருந்தைப் பயன்படுத்தி இலவசமாக ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினாராம்.

இந்த இரகசியக் கலவை முறை முதலில் கவுடு பரம்பரையில் வந்த சிவ ராம் கவுடுக்கும் பின்னர் வந்த ஷங்கர் கவுடுக்கும் சொல்லித்தரப்பட்டது. ஷங்கர் கவுடு அவர்களின் வாழ்நாளில் மீன் சிகிச்சை முறை மிகவும் பிரபலமடைந்தது. பின்னர் ஷங்கர் கவுடு தன் ஐந்து மகன்களுக்கும் சொல்லிக் கொடுத்தார். இந்த சிகிச்சை கடந்த 160 வருடங்களாக கவுடு குடும்பத்தினரால் தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

கருத்து முரண்பாடு[தொகு]

பாதினி கவுடு குடும்பத்தினர் கீழ்க் கண்ட காரணங்களுக்காக மருந்தின் கலவைக் கூறுகளைப் பற்றி வெளிப்படையாகத் தெரியப்படுத்தவில்லை:

  • மருந்தின் கலவை முறை அல்லது கலவைக் கூறுகளைப் (ingredients) பற்றி வெளிப்படையாகத் தெரியப்படுத்தினால் மருந்து வீரியம் (potency) இழந்து போகலாம் என்ற அச்சம் ஒரு காரணம். முப்பாட்டனார் துறவியிடம் கொடுத்த வாக்குறுதியின்படி இலவசமாக சிகிச்சை செய்யலாம் ஆனால் மருந்தின் கலவை முறைகளை வெளியிடக்கூடாது என்பதாகும்.
  • பிறர் இந்த சிகிச்சை முறையைத் தன்னலப்படுத்துவதைக் காண விரும்பவில்லை.
  • வணிக நோக்கில் செயல்பட்டால் இந்த சிகிச்சை முறை குணமளிக்கும் தன்மையை இழந்துவிடும்.

பிபிசி மற்றும் சி.என்.என் ஊடக செய்தி நிறுவனங்கள் 2004 ஆம் ஆண்டிலேயே இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இந்த சிகிச்சை பற்றி மக்கள் அபிமானம் மற்றும் குணமளிக்கும் திறன் பற்றி அறிவித்தன.[4][5]

ஜன விஞ்ஞான வேதிகா எனும் பெயரில் இயங்கும் பகுத்தறிவு இயக்கம் மீன் மருந்தின் கலவைக் கூறுகளை வெளியிடாமைக்காக நகர நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்திய மருத்துவக் குழு மற்றும் பல அறிவியலாளர்கள் இணைந்து, மீன் மருந்தின் மாதிரியைச் (sample) சேகரிக்குமாறு மாநில அரசையும் உயர்நீதி மன்றத்தையும் வற்புறுத்தினார்கள். இந்த மீன் மருந்து ஊக்கியம் (steroids), கன உலோகம் (heavy metal (chemistry) மற்றும் பாதரசம் (மூலம்) போன்றவை இந்த மீன் மருந்தில் கலந்திருக்கலாம் என்று அனுமானிக்கப்பட்டது.

குற்றச்சாட்டுகளுக்குப் பதில்[தொகு]

கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் தேதி அன்று பாதினி கவுடு குடும்பத்தினர் மீன் மருந்தின் மாதிரியை அறிவியல் பகுப்பாய்வுக்காக (scientific analysis) முறையே 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் சிகிச்சை நடைபெறும் சமயத்தில் ஒப்படைத்தார்கள்.[6] அப்போது இக்குடும்பம், புகழ் பெற விரும்பி இந்த சிகிச்சை அளிக்கப்படவில்லை மாறாக இலவசமாக சிகிச்சை அளிப்பது மட்டுமே குறிக்கோள் என்று உறுதியளித்தார்கள். அரிநாத் கவுடு மற்றும் அவர் சகோதரர்கள் தங்கள் முன்னோர்களின் அறிவுறுத்தலை மட்டும் பின்பற்றுவதாகக் கூறினார்கள். இவர்கள் திட்டவட்டமாகக் கூறுவது என்னவெனில் 1845 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது, ஆனால் இறப்பு ஏதுமில்லை என்பதாகும்.

போதிய சான்றுகள் இல்லாதபடி கவுடுகள் எச்சரித்தது இந்தியாவின் பிற இடங்களில் மற்றும் உலகின் பகுதிகளில் இந்த குடும்பப் பெயரைப் பயன்படுத்தி மீன் மருந்து சிகிச்சை செய்யும் போலிகள் பற்றிய செய்தி ஆகும். மிருகஷீர்சா கார்த்தி நாளன்று ஐதராபாத் நகரில் கண்காட்சித் திடலில் (Exhibition Grounds) மட்டும் இச்சிகிச்சை நடைபெறுகிறது என்பது மற்றொரு செய்தி.

நீதி மன்றத் தீர்ப்பு[தொகு]

ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம், பகுதி நடுவர் ஆயம் (Division Bench) 2006 ஆம் ஆண்டு சனவரி மாதம் 27 ஆம் தேதி அன்று மீன் மருத்துவம் மற்றும் சிகிச்சை முறையில் தலையிடவோ அல்லது ஆணை அல்லது உத்தரவு பிறப்பிக்கவோ மறுத்துவிட்டது. இதற்கு நீதிமன்றம் அளித்த விளக்கம் என்னவெனில் சிகிச்சை மருத்துவ பெறுமானம் (medical value) ஏதுமில்லாத போதிலும், ஆய்வு செய்யப்பட்ட மாதிரிகளில் எந்த தீங்கு விளைவிக்கும் பொருளுமில்லை என்பதாகும். மக்கள் நம்பிக்கையுடன் இந்த சிகிச்சையைப் பெற திரளுவது குறித்து நீதி மன்றம் தலையிட இயலாது.[7]

பகுதி நடுவர் ஆயம் ஜன விஞ்ஞான வேதிகா தொடுத்த மனுவை தள்ளுபடி செய்தது. எனினும் மனுதாரர்கள் முறையீடு என்னவெனில், பாதினி சகோதரர்கள் கொடுக்கும் பொருளில் எந்த மருத்துவ குணமும் இல்லையென்பது நிலைநாட்டப்பட்டாலும், மாநில அரசு ஆஸ்துமா குணமாக்கும் சிகிச்சை உரிமைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. Healing - The big gulp by Shonar Joshi
  2. LIVE FISH USED AS ASTHMA 'CURE': Discovery News
  3. Hyderabad Fish Medicine For Asthma 1 (Nadanthathu Enna - June 16, 2011) (Video)
  4. Fish medicine not at Katedan The Hindu June 6, 2012
  5. One killed in stampede for fish medicine The Hindu June 9, 2012