ஹேம மாலினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹேம மாலினி
மதுராவின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2014
முன்னையவர்ஜயந்த் சவுத்திரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஹேம மாலினி ஆர். சக்கரவர்த்தி

16 அக்டோபர் 1948 (1948-10-16) (அகவை 75)[1]
அம்மன்குடி, தமிழ்நாடு, இந்தியா
துணைவர்தர்மேந்திரா (1980–நடப்பில்)
பிள்ளைகள்ஈஷா தியோல்
ஆகனா தியோல்
வேலைநடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி
விருதுகள்பத்மசிறீ (2000)

ஹேம மாலினி ("Hema Malini Chakravarty") (பிறப்பு 16 அக்டோபர் 1948) இந்தியத் திரைப்பட நடிகையும், இயக்குநரும், தயாரிப்பாளரும், நடனக் கலைஞரும் அரசியல்வாதியும் ஆவார்.[2] 1963 இல் நடனப் பெண்மணியாக இது சத்தியம் என்ற திரைப்படத்திலும் 1965இல் நடனப் பெண்மணியாக பாண்டவர் வனவாசம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இவர் கதைநாயகியாக நடித்த முதல் திரைப்படம் 1968ஆம் ஆண்டு வெளிவந்த சப்னோ கா சௌதாகர் ஆகும்; இதனைத் தொடர்ந்து பல பாலிவுட் திரைப்படங்களில், முன்னணி நாயகியாக நடித்துள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் தனது கணவரும் திரைப்பட நடிகருமான தர்மேந்திராவுடன் நடித்துள்ளார்; ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாகவும் நடித்துள்ளார்.[3]

துவக்க காலத்தில் "கனவுக் கன்னி" என அறிமுகப்படுத்தப்பட்ட ஹேம மாலினி, 1977இல் அதே பெயருள்ள (டிரீம் கேர்ள்) திரைப்படத்தில் நடித்துள்ளார்.[3] நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள ஹேம மாலினி சிறந்த நடனக் கலைஞரும் ஆவார்.[4][5][6] 150 திரைப்படங்களுக்கும் கூடுதலாக நடித்துள்ளார்.[4] தனது திரைப்பட வாழ்க்கையில், ஹேம மாலினிக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பதினோரு முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்; 1972இல் ஒருமுறை வென்றுள்ளார். 2000இல் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதினையும் இந்திய அரசின் பத்மசிறீ விருதையும் பெற்றுள்ளார்.[7] 2012இல் சேர் பதம்பத் சிங்கானியா பல்கலைக்கழகம் ஹேம மாலினிக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.[8] இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் அவைத்தலைவராக பணியாற்றியுள்ளார். 2006இல் சோபோரி இசை மற்றும் நிகழ்த்து கலை அகாதமியிலிருந்து விடாஸ்டா விருது பெற்றுள்ளார்.

2003 முதல் 2009 வரை பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[9] 2014இல் மதுரா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பல அறக்கட்டளைகள் மற்றும் சமூகத் தாபனங்களுடன் ஈடுபாடு கொண்டுள்ளார்.

இளமையும் குடும்பமும்[தொகு]

ஹேம மாலினி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் அம்மன்குடி என்னுமிடத்தில் தமிழ்-பேசும் ஐயங்கார் குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாகப் [10] பிறந்தார். தந்தை V.S.R. சக்கரவர்த்தி, தாயார் ஜெயா சக்கரவர்த்தி. இவரது அன்னை திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

சென்னையின் ஆந்திர மகிள சபாவில் வரலாற்றுப் பிரிவில் கல்வி கற்றார்.[11] பின்னர் பள்ளியிறுதிக் கல்வியை தில்லியின் மந்திர் மார்கிலுள்ள பள்ளியில் முடித்தார்.[12]

அரசியல் பணிவாழ்வு[தொகு]

1999இல் ஹேம மாலினி பஞ்சாபின் குர்தாசுபூர் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் இந்திப்பட நடிகர் வினோத் கண்ணாவிற்காக பரப்புரையில் ஈடுபட்டார்.[13] 2004ஆம் ஆண்டு பெப்ரவரியில் அலுவல்முறையாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[13] 2003 முதல் 2009 வரை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமால் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மார்ச்சு 2010இல் பாஜகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[14] 2014இல் மக்களவை பொதுத் தேர்தலில் மதுராவிலிருந்து 3,30,743 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றார்.[13][14][15][16]

சமூக இயக்கங்களில் பங்கேற்பு[தொகு]

ஹேம மாலினி விலங்குரிமை அமைப்பான விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் இந்தியக் குழுவின் ஆதரவாளர். 2009இல் மும்பையின் நெருக்கடிமிக்க சாலைகளில் குதிரை வண்டிகள் இயக்கப்படுவதை தடை செய்ய மும்பை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதினார்.[17] 2011இல் அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேசுக்கு காளையை அடக்கும் போட்டிகளை (ஏறுதழுவல்) தடை செய்ய வலியுறுத்தி கடிதம் எழுதினார்.[18][19] அவ்வாண்டின் "வருடத்து பீட்டா நபராகத்" தேர்ந்தெடுக்கப்பட்டார்.[20] தாவர உணவாளராக "எனது உணவு விருப்பங்கள் புவிக்கும் விலங்குகளுக்கும் உதவுவதாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது" எனக் கூறியுள்ளார்.[21]

மேற்கோள்கள்[தொகு]

  1. "rediff.com: A dream called Hema Malini". Rediff.com. 16 October 1958. பார்க்கப்பட்ட நாள் 14 June 2011.
  2. Hemamalini, ever dream girl turned 65. cinemanewstoday.com.
  3. 3.0 3.1 A dream called Hema Malini. Rediff.com. Accessed 24 September 2009.
  4. 4.0 4.1 "Top Actresses. Box Office India. Accessed 8 January 2008". Archived from the original on 2 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 13 ஜனவரி 2016. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  5. Friday Review Chennai / Tribute : Bollywood's macho man bids goodbye. பரணிடப்பட்டது 2009-05-06 at the வந்தவழி இயந்திரம் The Hindu 1 May 2009 Accessed 14 June 2011.
  6. Top Box Office Draws of Indian Cinema.[தொடர்பிழந்த இணைப்பு] IBOS. Accessed 24 September 2009.
  7. Padma Vibhushan, Padma Bhushan, Padma Shri awardees. பரணிடப்பட்டது 2010-04-14 at the வந்தவழி இயந்திரம் The Hindu 27 January 2000 Accessed 14 June 2011.
  8. Here comes Dr. Hema Malini! தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 2 October 2012. Accessed 2 October 2012.
  9. Smt. Hema Malini, Member of Parliament (Rajya Sabha)- Bio DataPress Information Bureau of India. பரணிடப்பட்டது 2008-06-22 at the வந்தவழி இயந்திரம்
  10. Hema Malini. Living Media International Limited 2004 p23.
  11. My Fun Days. பரணிடப்பட்டது 2013-09-06 at the வந்தவழி இயந்திரம் Telegraph India 29 June 2011. Accessed 6 July 2011.
  12. Detailed Profile, Smt. Hema Malini, Members of Parliament (Rajya Sabha), Who's Who, Government: National Portal of India. India.gov.in Accessed 6 July 2011.
  13. 13.0 13.1 13.2 Hema Malini joins BJP. பரணிடப்பட்டது 2004-04-03 at the வந்தவழி இயந்திரம் The Hindu 20 February 2004 Accessed 14 June 2011.
  14. 14.0 14.1 Karnataka News : BJP picks Hema Malini for RS. பரணிடப்பட்டது 2011-02-26 at the வந்தவழி இயந்திரம் The Hindu 19 February 2011 Accessed 14 June 2011.
  15. Hema Malini makes dream debut in Mathura. Zeenews 2014.
  16. Constituency wise. பரணிடப்பட்டது 2014-05-29 at the வந்தவழி இயந்திரம் ECI results.
  17. Hema Malini campaigns for being vegetarian பரணிடப்பட்டது 2016-01-06 at the வந்தவழி இயந்திரம் Zee News 8 October 2013
  18. Ban Tamil Nadu's jallikattu: Hema Malini. Times of India 4 July 2011.
  19. Hema Malini urges ban on Tamil Nadu's Jallikattu.[தொடர்பிழந்த இணைப்பு] IBN Live 1 July 2011.
  20. Hema Malini named PETA Person of the Year. Deccan Herald 19 December 2011.
  21. Hema Malini stars in PETA ad. Times of India 9 October 2013.

மேலாய்விற்கு[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேம_மாலினி&oldid=3908737" இலிருந்து மீள்விக்கப்பட்டது