ஹார்ன் முனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்ன் முனை
புவியியல்
அமைவிடம்கார்ன் முனை அமைவிடம்

கார்ன் முனை (Cape Horn) என்பது தென் அமெரிக்காக் கண்டத்தில் தென்கோடி முனையாகும். இது கார்ன் தீவகத்திலுள்ளது.

இயல்பு[தொகு]

கார்ன் முனை தென் துருவத்தின் அண்மையிலிருப்பதால் குளிர் அதிகம். தாவரங்கள் முளைப்பதில்லை. இங்கு கடும் புயல்கள் எழுகின்றன.

வரலாறு[தொகு]

பனாமா கால்வாய் வெட்டப்படுவதற்கு முன்னர் கப்பல்கள் இம்முனையைச் சுற்றிச் சென்றன. முதலில் 1578இல் சர் பிரான்சிஸ் டிரேக் இம்முனையை அடைந்தார். ஆயினும் 1615இல் இங்கு சென்ற டச்சு மாலுமிகள் தங்கள் நாட்டிலுள்ள கோர்ன் (Hoorn) மாகாணத்தின் பெயரை வைத்தனர். இதுவே நாளடைவில் கார்ன் என்றாயிற்று.

உசாத்துணை[தொகு]

  • "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1993, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹார்ன்_முனை&oldid=3728337" இலிருந்து மீள்விக்கப்பட்டது