ஹாஃபீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹாஃபீசு
பிறப்புஹாஃபீசு சீராசீ
c. கிபி 1310/1337
சீராசு
இறப்பு1390
சீராசு
தொழில்கவிஞர்
தேசியம்பாரசீகர்
காலம்முசாபரியர்
வகைபாரசீகக் கவிதை, Persian Mysticism, இர்பான்
இலக்கிய இயக்கம்கவிதை, Mysticism, சூபியம், மீவியற்பியல், நெறிமுறைகள்

ஹாஃபீசு என்னும் புனை பெயரால் பரவலாக அறியப்படும் கவாசா சம்சுத்தீன் முகம்மத் ஹாஃபீசு சீராசீ (1345 - 1390) என்பவர், பாரசீகத்தின் மிகவும் புகழ்பெற்ற கவிஞர் ஆவார். இவரைக் கவிஞர்களின் கவிஞர் என்றும் குறிப்பிடுவது உண்டு. பல ஈரானியர் இல்லங்களில் இவரது பாடல்களை மனப்பாடம் செய்வதும், இவரது வரிகளைப் பழமொழிகளாகப் பயன்படுத்துவதும் இன்றும் கூட நிகழ்ந்து வருகின்றது. இவரது வாழ்க்கையையும், பாடல்களையும் பெருமளவிலானோர் ஆய்வு செய்துள்ளதுடன், இவற்றுக்குப் பல விளக்கங்களும், விரிவுரைகளும் எழுதியுள்ளனர். இவரது படைப்புக்கள் பதினான்காம் நூற்றாண்டுக்குப் பிந்திய பாரசீகப் பாடல்களில் மற்றெவரினது பாடல்களைக் காட்டிலும் கூடிய செல்வாக்குச் செலுத்தின.

காதல், மதுவைப் புகழ்தல் என்பவற்றோடு தங்களை அறத்தின் காவலர்களாகவும், நீதிமான்களாகவும், எடுத்துக்காட்டுகளாகவும் பிறரை நம்பச்செய்து பாசாங்கு செய்பவர்களுடைய நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவதும் இவரது கசல்களின் முக்கிய கருப்பொருள்களாக இருந்தன. கஃபீசு-வாசித்தல்; பாரசீக மரபுவழி இசை, காட்சிக் கலைகள், வனப்பெழுத்து ஆகியவற்றில் இவரது பாடல்கள் அடிக்கடி பயன்படுதல் என்பன ஈரானியச் சமூகத்தில் இவர் இன்றும் நிலைத்திருப்பதற்கான எடுத்துக்காட்டுகள் ஆகும். இவருடைய சமாதிக் கட்டிடம் ஈரானியக் கட்டிடக்கலையின் தலை சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். சுற்றுலாப் பயணிகளும் இதனைப் பார்க்கச் செல்கின்றனர்.

வாழ்க்கை[தொகு]

பாரசீக மாக்களின் வாழ்க்கையிலும் பாரசீகப் பண்பாட்டிலும் முக்கியமான ஒருவராக விளங்கியபோதும், இவரது செல்வாக்கும், புகழும் நீண்டகாலமாக நிலைத்திருக்கின்ற போதும் இவரது வாழ்க்கை பற்றிய தகவல்கள் அரிதாகவே உள்ளன. கிடைக்கும் தகவல்களில் பலவும் பழங்கதைப் பாணியிலான துணுக்குகளாகவே உள்ளன. இவரது வாழ்க்கை பற்றிக் கூறுகின்ற சில பழைய வரலாறுகள் நம்ப முடியாதவையாக அல்லது கற்பனை சார்ந்தவையாகவே உள்ளன.

இவருடைய பிறந்த தேதி, இறந்த தேதி என்பவை குறித்தும் பல வேறுபாடான கருத்துக்கள் அறிஞர்களிடையே நிலவுகின்றன. தற்கால அறிஞர்களுட் பலர், எம். மோயின் என்பவர் முன்வைத்த 1315 என்பதைப் பிறந்த ஆண்டாக ஏற்றுக்கொள்கின்றனர். இறந்த ஆண்டாக ஜாமி என்பவர் வெளியிட்ட 1360 என்பதும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

இவருடைய கவிதைகளிலிருந்து இவர் நல்ல கல்வியைப் பெற்றவராக அல்லது தானே கற்றுக்கொள்வதற்கான வசதிகளைப் பெற்றவராக இருந்திருக்கவேண்டும் எனத் தெரிகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாஃபீசு&oldid=3770464" இலிருந்து மீள்விக்கப்பட்டது