வெண்வயிற்றுக் கரிச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெண்வயிற்றுக் கரிச்சான்
உத்தராகந்தில்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. caerulescens
இருசொற் பெயரீடு
Dicrurus caerulescens
லின்னேயசு(1758)
Subspecies

D. c. caerulescens
D. c. leucopygialis Blyth, 1846
D. c. insularis Sharpe, 1877

வேறு பெயர்கள்
  • Lanius caerulescens Linnaeus, 1758
  • Balicassius caerulescens (Linnaeus, 1758)
  • Buchanga caerulescens (Linnaeus, 1758)

வெண்வயிற்றுக் கரிச்சான் [White-bellied drongo (Dicrurus caerulescens)] என்பது இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டும் காணப்படும் ஒரு கரிச்சான் இனக் குருவியாகும். மற்ற கரிச்சான்களைப் போலவே இது பூச்சிகளை உண்ணும் வழக்கம் கொண்டிருந்தாலும், சில வகைப் பூக்களின் தேனை விரும்பி உண்பதால் மகரந்தச் சேர்க்கையிலும் இது உதவுகிறது[2].

துணையினங்கள்[தொகு]

இதில் மூன்று துணையினங்கள் பரிந்திரைக்கபட்டுள்ளன:[3]

உடலமைப்பும் கள அடையாளங்களும்[தொகு]

உடலமைப்பு[தொகு]

சின்னானை விட அளவில் பெரியது [நீளம் = 24 cm] கரிக்குருவியை விட சிறியது. வாலின் பிளவு கரிக்குருவியின் வால் பிளவை விடவும் குறைவாக இருக்கும். மார்பின் அடிப்பகுதியிலிருந்து வெள்ளையாக இருக்கும். கண்விழிப் படலம் அரக்கு நிறம். ஆண் பெண் இரண்டும் ஒரே தோற்றம் கொண்டிருக்கும்[4].

கள அடையாளங்கள்[தொகு]

இரண்டு அல்லது மூன்று குருவிகள் மற்ற பூச்சியுண்ணும் பறவைகளுடன் சேர்ந்தே காணப்படும்; அந்தி நேரத்திலும் நன்கு இருட்டிய பிறகும் கூட இரையைத் தேடும்.

பரவலும் வாழ்விடமும்[தொகு]

பரவல்[தொகு]

மேற்கு குஜராத், மேற்கு ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், இமாசல பிரதேசம், வடகிழக்கு மாநிலங்கள் நீங்கலாக இந்தியாவின் அனைத்துப் பகுதிகள் மற்றும் இலங்கையின் பெரும்பாலான பகுதிகள்[5]. இனப்பெருக்கம் செய்யாத காலங்களில் இவை மத்திய குஜராத் பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன[6].

வாழ்விடம்[தொகு]

இலையுதிர், மூங்கிற் காடுகளின் புதர்வெளிகள், தேயிலை, இரப்பர் தோட்டங்கள்.

உணவு[தொகு]

சிதடி எனப்படும் பாச்சை, வெட்டுக்கிளி, விட்டில், சிறகுடைய கறையான் உள்ளிட்ட பூச்சிகள்; திடீர்த் தாக்குதல் மூலம் உணவை பிற பறவைகளிடமிருந்து அபகரிப்பதும் உண்டு. எப்போதாவது, நாணல் கதிர்குருவிகளைத் தாக்கி உண்ணும்; Bombax, Erythrina- தாவரங்களுடைய மலர்களின் தேனை உண்ணும்.

ஒலி[தொகு]

பூங்குருவிகள், தினைக்குருவிகள் போன்றவற்றின் தொனியில் ஒலியெழுப்பும்; கரிக்குருவியைப் போன்றே பாடும். குறிப்பாக, தையல் சிட்டு, காட்டுக் கீச்சான், மாம்பழச் சிட்டு ஆகிய குருவிகளைப் போன்றே போலிக்குரல் எழுப்பும்[7][8].

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2012). "Dicrurus caerulescens". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22706967/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. Ali. S, Ripley. S.D. (1972). Handbook of the Birds of India and Pakistan. p. 123. OUP
  3. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Orioles, drongos, fantails". IOC World Bird List Version 11.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 7 October 2021.
  4. "birdsoftheworld-White-bellied Drongo-அடையாளம் (Identification)". பார்க்கப்பட்ட நாள் 24 மே 2021.
  5. "பரவல் வரைபடம் (Range Map)". பார்க்கப்பட்ட நாள் 24 மே 2021.
  6. "Distribution of the White-bellied Drongo (வரைபடம்)". பார்க்கப்பட்ட நாள் 24 மே 2021.
  7. "xeno-canto". பார்க்கப்பட்ட நாள் 24 மே 2021.
  8. "Sounds and Vocal Behavior - birdsoftheworld - White-Bellied Drongo". பார்க்கப்பட்ட நாள் 24 மே 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dicrurus caerulescens
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: