விக்ரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்ரம்
விக்ரம் 2003
பிறப்புகென்னடி ஜான் விக்டர்
17 ஏப்ரல் 1966 (1966-04-17) (அகவை 57)[1][2]
சென்னை, தமிழ்நாடு, இந்தியா இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்இலயோலாக் கல்லூரி, சென்னை
பணி
  • நடிகர்
  • திரைப்பட தயாரிப்பாளர்
  • பின்னணி பாடகர்
  • குரல் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1988–தற்போது வரை
பெற்றோர்வினோத் ராஜ் (தந்தை)
வாழ்க்கைத்
துணை
சைலஜா பாலகிருஷ்ணன் (தி. 1992)
பிள்ளைகள்இளவரசி
அக்ஷிதா விக்ரம்
உறவினர்கள்தியாகராஜன் (தாய்வழி மாமா)
பிரசாந்த் (உறவினர்)
விருதுகள்சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது (2003)
சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது (1999, 2003, 2010)
கலைமாமணி விருது (2004)

விக்ரம் (17 ஏப்ரல் 1966) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு முதல் சேது (1999), விண்ணுக்கும் மண்ணுக்கும் (2001), சாமி (2003), பிதாமகன் (2003), (2015) போன்ற தமிழ் மொழி திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.

இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் 7 பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். இவருக்கு மிலான் பல்கலைக்கழகம் 2011 ஆம் ஆண்டு மே மாதம் அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் முன்னணி இடம் வகிக்கும் நடிகருள் இவரும் ஒருவர்.[3]

விக்ரம் வெவ்வேறு சமூக நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்தியுள்ளார். இவர் ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பின் தூதர். சஞ்சீவனி அறக்கட்டளையின் தூதுவராகவும் வித்யா சுதா, என்னும் மாற்றுத் திறன் பள்ளியின் தூதுவராகவும் உள்ளார். காசி கண் நலப்பணியின் வேளையிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். விக்ரம் நிறுவனம் மூலம் பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.[4]

இளமைக் காலம்[தொகு]

விக்ரம், ஜான் விக்டருக்கும் ராஜேஸ்வரிக்கும் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில், 17ம் ஏப்ரல் 1966 அன்று நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார். இவரது இயற்பெயர் கென்னெடி ஆகும். இவரது தந்தை வினோத் ராஜ் என்றழைக்கப்படும் ஆவார். அவர் தந்தை ஒரு முன்னாள் இந்திய ராணுவ வீரர். தற்போது திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது தாய் இராஜேசுவரி துணை ஆட்சியராய்ப் பணியாற்றியவர்.[5][6] விக்ரமுக்கு அனிதா என்கிற தங்கையும் அர்விந்த் என்கிற தம்பியும் உள்ளனர்.[7]

விக்ரம் ஏற்காட்டிலுள்ள மாண்டபோர்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். பள்ளிப் பருவத்திலேயே கராத்தே கலையோடு நீச்சல் விளையாட்டையும் கற்றுத் தேர்ந்தார். திரைப் படங்களில் நடிக்கும் ஆர்வமிருந்தும் இவரது தந்தையாரின் கட்டாயத்தால் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை இலயோலாக் கல்லூரியில் படித்து முடித்தார்.[8] இவர் கல்லூரியில் படிக்கும்போது பெரு வாகனம் மோதியதால் மிகுந்த காயமடைந்ந்தார். மூன்று வருடம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார், தன் கால் செயலிழக்காமலிருக்க இருபத்து மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார்.[8][9][10]

இவர் 1992 ஆம் ஆண்டு சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு துருவ் விக்ரம் என்ற ஒரு மகனும் அக்ஷிதா விக்ரம் என்ற ஒரு மகளும் உண்டு. இவரின் மகன் துருவ் விக்ரம் தற்பொழுது திரைப்படங்க்ளில் நடித்து வருகின்றார்.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

விக்ரம் திரைப்படத்துறையில் அறிமுகமாவதற்கு முன்பு 1988 ஆம் கைலாசம் பாலசந்தர் இயக்கிய கலாட்டா குடும்பம் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார் அதை தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் குறைந்த பொருட்செலவில் ஆக்கப்பட்ட படங்களில் நடித்து வந்துள்ளார்.

இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த சேது என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த வெற்றிக்குப் பின் தில், ஜெமினி, தூள், சாமி போன்ற படங்களில் நடித்தார். இவர் காசி எனும் படத்தில் பார்வை அற்றவராக நடித்து திரை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். பின்னர் பிதாமகன் படத்தில் வெட்டியான் கதாப்பாத்திரத்தை தத்ரூபமாக வெளிக்கொணர்ந்து தேசிய விருது பெற்றார். அதன் பின் அந்நியன் என்னும் பிரம்மாண்டமான படத்தில் பிளவாளுமை குறைபாட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பிராமணராக நடித்தார். இப்படம் பொருளவில் அதிக வருவாயும் நல்ல விமர்சனங்களையும் பெற்றுத் தந்தது.[11] அதன் பின் மஜா, பீமா, கந்தசாமி போன்ற படங்களில் நடித்து தன் திரைப் பயணத்தை தொடர்ந்தார். பிறகு ராவணன் என்னும் படத்தில் வீரையா என்னும் பழங்குடி இன போராளி கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றார். 2011 ஆம் ஆண்டு வெளி வந்த தெய்வத் திருமகள் என்னும் படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக இவரது நடிப்புத் திரை விமர்சகளிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றது.

கலைப் பணி[தொகு]

விக்ரம் தான் திரைப்படத் துறையில் வருவதற்கு முன் சோழா தேநீர், டி வி எஸ் மற்றும் ஆள்வின் போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்தார். தனது முதுகலை வணிக மேலாண்மை படிப்பின் இறுதி ஆண்டில் தமிழ் திரைப்பட முன்னணி இயக்கனரான ஸ்ரீதர் அவர்களால் அணுகப்பட்டு அதன் பின் அவரது படத்தில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. விக்ரம் தனது முதல் படமான "என் காதல் கண்மணியை" 1990 ஆம் ஆண்டு நடித்தார். இது ஒரு குறைந்த பட்ஜெட் படமாக அமைந்தது. அதன் பின் ஸ்ரீதர் அவர்களின் "தந்துவிட்டேன் என்னை" எனும் படத்தில் நடித்தார். ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் இயக்கிய பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கல்லூரிக் காதல் படமான மீரா இவரின் மூன்றாவது படமாகும்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
1990 என் காதல் கண்மணி வினோத் தமிழ்
1991 தந்துவிட்டேன் என்னை ராஜு
1992 காவல் கீதம் அசோக்
மீரா ஜீவா
1993 துருவம் பத்ரன் மலையாளம்
சிருநவ்வுலா வரமிஸ்தாவா தெலுங்கு
மாஃபியா ஹரி ஷங்கர் தமிழ்
1994 சைன்யம் கேடட் ஜீஜி
பங்காரு குடும்பம் தெலுங்கு
புதிய மன்னர்கள் சத்யமூர்த்தி தமிழ்
1995 ஸ்ட்ரீட் மலையாளம்
அடல்லா மாஜகா தெலுங்கு
1996 மயூர ந்ரிடம் மலையாளம்
ஊஹா மோகன் தமிழ்
அக்கா பாகுன்னாவா
மெருபு
இந்திரப்ரஸ்தம் பீட்டர் மலையாளம்
ராசபுத்திரன் மனு
1997 இது ஒரு சிநேஹகதா ராய்
உல்லாசம் தேவ் தமிழ்
1998 கண்களின் வார்த்தைகள் தமிழ்
1999 ஹவுஸ் புள் ஹமீது
சேது சியான் (எ) சேது வென்றவர்: தென்னிந்திய பிலிம்பேர் சிறப்பு விருது
2000 ரெட் இந்தியன்ஸ் மலையாளம்
2001 இந்த்ரியம்
9 நேலாலு வீரேந்திரா தெலுங்கு
யூத்
விண்ணுக்கும் மண்ணுக்கும் விக்ரம் தமிழ்
தில் கனகவேல்
காசி காசி வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
2002 ஜெமினி ஜெமினி
சாமுராய் தியாகராஜன்
கிங் ராஜா சண்முகம்
2003 தூள் ஆறுமுகம்
காதல் சடுகுடு சுரேஷ்
சாமி ஆறுசாமி பரிந்துரை, சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
பிதாமகன் சித்தன் வென்றவர்: சிறந்த நடிகருக்கான தேசிய சினிமா விருது
வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
வென்றவர்: சிறந்த நடிகருக்கான தமிழக அரசு சினிமா விருது
2004 அருள் அருள்குமரன்
2005 அந்நியன் இராமானுசம்
அந்நியன்
ரெமோ
வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
மஜா அறிவுமதி
2008 பீமா சேகர் பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
2009 கந்தசாமி கந்தசாமி பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
2010 ராவணன் வீரையா தெலுங்கு மொழியாக்கப்பட்டு வெளிவந்தது;வென்றவர்: சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
ராவன் தேவ் பிரதாப் சர்மா இந்தி
2011 தெய்வத்திருமகள் கிருஷ்ணன் தமிழ் வென்றவர்: சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
2011 ராஜபாட்டை 'அனல்' முருகன்
2012 தாண்டவம் சிவா பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
2013 டேவிட் டேவிட் இந்தி தெலுங்கு மற்றும் தமிழ் மொழியாக்கப்பட்டு வெளிவந்தது
2015 லீ (எ) லிங்கேசன் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழியாக்கப்பட்டு வெளிவந்தது; விக்ரமின் ஐம்பாதாவது திரைப்படம்
10 எண்றதுக்குள்ள
2016 இருமுகன் அகிலன் வினோத் மற்றும் லவ் (இரட்டைப் பங்கு)
2018 ஸ்கெட்ச் ஜீவா (ஸ்கெட்ச்)
சாமி 2 ஆறுச்சாமி மற்றும் ராமசாமி
2019 கடாரம் கொண்டான் கே. கே. தெலுங்கு மொழியில் மிஸ்டர் கே. கே. எனும் பெயரில் வெளிவந்தது
2019 ஆதித்ய வர்மா டேராடூனில் பார்வையாளர் "தொலைவு" பாடலில் கேமியோ தோற்றம் [12]
2022 மகான் காந்தி மகான் அமேசான் பிரைம் வீடியோ படம் [13]
2022 கோப்ரா Films that have not yet been released மதியழகன் நிறைவு [14]
2022 பொன்னியின் செல்வன்: 1 Films that have not yet been released ஆதித்த கரிகாலன் தயாரிப்பிற்குப்பின் [15]
துருவ நட்சத்திரம் Films that have not yet been released ஜான் தாமதமாக [16]
சியான் 61 Films that have not yet been released| style="background: #DDF; color: black; vertical-align: middle; text-align: center; " class="no table-no2"|அறிவிக்கப்படும் முன் தயாரிப்பு [16]

பின்னணிக் குரல் கொடுத்தவை[தொகு]

திரைப்படம் ஆண்டு குரல் கொடுக்கப்பட்டவர் குறிப்பு
அமராவதி 1993 அஜித் குமார் [17]
புதிய முகம் 1993 வினீத்
பாச மலர்கள் 1994 அஜித் குமார்
காதலன் 1994 பிரபுதேவா [18]
குருதிப்புனல் 1995 ஜான் இடத்தட்டில்
காதல் தேசம் 1996 அப்பாஸ் [19]
கருப்பு ரோஜா 1996 அமர் சித்திக்
மின்சார கனவு 1997 பிரபுதேவா [20]
வி.ஐ.பி 1997 அப்பாஸ் [19]
சத்யா 1998 ஜே. டி. சக்ரவர்த்தி [21]
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் 2000 அப்பாஸ் [22]

பாடிய பாடல்கள்[தொகு]

தலைப்பு ஆண்டு பாடல்கள் இசையமைப்பாளர் உடன் பாடியவர் குறிப்பு
ஸ்ரீ 2002 "யாமிருக்க பயமேன்" டி எஸ் முரளிதரன் சங்கர் மகாதேவன், திப்பு [23]
[24]
ஜெமினி 2002 "ஓ போடு" பரத்வாஜ் அனுராதா ஸ்ரீராம் [25]
கந்தசாமி
மள்ளானா (தெலுங்கு)
2009 "எக்ஸ்க்யூஸ் மி"
"இதெல்லாம் டூப்பு"
"மேம்போ மாமியா"
" மியாவ் மியாவ்"
தேவி ஸ்ரீ பிரசாத் சுசித்ரா
தேவி ஸ்ரீ பிரசாத்
ரீட்டா
பிரியா ஹிமேஸ்
[26]
[27]
மதராசபட்டினம் 2010 "மேகமே ஒ மேகமே" ஜி. வி. பிரகாஷ் குமார் ம. சு. விசுவநாதன், நாசர் [28]
தெய்வத்திருமகள்
நானா (தெலுங்கு)
2011 "கதை சொல்ல போரேன்",
"ப ப பாப்பா"
ஜி வி பிரகாஷ் குமார் சிரிங்கா,
தனிப்பாடல்
[29]
ராஜபாட்டை
வீடிந்தே (தெலுங்கு)
2011 "லட்டு லட்டு" யுவன் சங்கர் ராஜா சுசித்ரா, பிரியதர்சினி [30]
டேவிட் 2013 "மரிய பிதாசே" ரெமோ பெர்னாண்டஸ் ரெமோ பெர்னாண்டஸ் [31]
கடாரம் கொண்டான் 2019 "தீசுடர் குனியுமா" ஜிப்ரான்

தொலைக்காட்சித் தொடர்கள்[தொகு]

பெயர் ஆண்டு இயக்குனர் குறிப்பு
கலாட்டா குடும்பம் 1988 தெரியவில்லை ஆறு பாக தொலைக்காட்சித் தொடர்
விஸ்வநாத் தெரியவில்லை தெரியவில்லை தொலைக்காட்சித் தொடர்
சிறகுகள் 2000 மனோபாலா தொலைக்காட்சிப்படம்

இசை ஒளிக்காட்சிகளித் தோற்றங்கள்[தொகு]

தலைப்பு ஆண்டு தொகுத்தவர் இயக்குநர் பாத்திரம் பாடல் தொகுப்பு குறிப்பு
"ஏக் சுர்" 2010 லூயிஸ் பாங்க்ஸ் கைலாஷ் சுரேந்திரநாத் தானாகவே தனிப் பாடல் [32]
[33]
"ஒன் - தி யூனிடி சாங்" 2012 ஜார்ஜ் பீட்டர் சுமேஷ் லால் தானாகவே தனிப் பாடல் [34]
"வணக்கம் சென்னை" 2012 கிரீஷ் கோபாலகிருஷ்ணன் பாண்டிராஜ் தானாகவே மெரினா [35]
[36]

வர்த்தக தோற்றங்கள்[தொகு]

அமைப்பு ஆண்டு இயக்குநர் பாத்திரம் குறிப்பு
கொக்கக் கோலா 2006-07 தெரியவில்லை தானாகவே
ப்ரூக் பான்ட் 2010-11 தெரியவில்லை தானாகவே [37]
[38]
மணப்புறம் நிதி நிறுவனம் 2010-11 தெரியவில்லை தானாகவே [39]
[40]
ஜோஸ்கோ ஜூவல்லர்ஸ் 2011-12 ரத்திஸ் அம்பத் தானாகவே [41]
[42]

மேற்கோள்கள்[தொகு]

  1. Surprise b`day cake for Vikram on `Sketch` set. Sify.com (17 April 2017). Retrieved on 17 September 2018.
  2. Vasudevan, K.V. (23 April 2016) Actor vikram turned 50 last week. The Hindu. Retrieved on 17 September 2018.
  3. "V for Vikram". தி இந்து. 1 April 2006 இம் மூலத்தில் இருந்து 6 செப்டம்பர் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060906014930/http://www.hindu.com/mp/2006/04/01/stories/2006040100220300.htm. பார்த்த நாள்: 7 November 2011. 
  4. "Vikram happy at being chosen UN Youth envoy". டெக்கன் ஹெரால்டு. 23 April 2010. பார்க்கப்பட்ட நாள் 2011-01-07.
  5. http://www.telegraphindia.com/1060604/asp/look/story_6303930.asp
  6. Narasimham, N. L (4 March 2005). "Still the regular guy". The Hindu. Archived from the original on 2005-03-21. பார்க்கப்பட்ட நாள் 2011-07-31. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  7. "Shruti Kamal snubs Venkat Prabhu". Behindwoods. 19 October 2007. பார்க்கப்பட்ட நாள் 2011-07-31.
  8. 8.0 8.1 Warrier, Shobha (17 August 2004). "Vikram's obsession gets its reward". ரெடிப்.காம். பார்க்கப்பட்ட நாள் 2011-07-31.
  9. Sukumaran, Shradha (17 June 2010). "'My blood group is B+ and that's my motto'". Mint. பார்க்கப்பட்ட நாள் 2011-07-31.
  10. Muthiah, Wani (28 July 2011). "Long, winding path to success for Vikram". The Star. Archived from the original on 2012-10-19. பார்க்கப்பட்ட நாள் 2011-07-31.
  11. Kumar, Ashok (20 August 2004). "Vikram, the Victor". The Hindu. Archived from the original on 2004-12-10. பார்க்கப்பட்ட நாள் 2011-07-31. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  12. "Video: Chiyaan Vikram's shot in Adithya Varma". Behindwoods. 8 February 2019. பார்க்கப்பட்ட நாள் 8 February 2019.
  13. "'Chiyaan 60': Makers rope in Vani Bhojan as the female lead in the Chiyaan Vikram starrer – Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  14. "Vikram's next with Ajay Gnanamuthu titled 'Cobra', motion poster out". தி நியூஸ் மினிட். 25 December 2019. https://www.thenewsminute.com/article/vikrams-next-ajay-gnanamuthu-titled-cobra-motion-poster-out-114769. 
  15. "'Ponniyin Selvan' shoot progressing in Thailand!". Sify. 23 December 2019. பார்க்கப்பட்ட நாள் 25 December 2019.
  16. 16.0 16.1 Gauthamvasudevmenon [menongautham] (2 November 2019). "And The Season doesn't end without this film that's really close to my heart & is hopefully state of the art. Tremendous& positive experience working with THE Chiyaan Vikram! #DN in post production over the next 60 days and heading towards release. #Johnwillmeetyousoon" (Tweet). பார்க்கப்பட்ட நாள் 2 November 2019. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  17. வி. வி. ரமணன் (28 September 2007). "சினிமா புதிர்: கேள்வி பதில்". தி இந்து இம் மூலத்தில் இருந்து 13 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140713114556/http://www.hindu.com/cp/2007/09/28/stories/2007092850320900.htm. 
  18. வி. வி. ரமணன் (5 July 2014). "சினிமா புதிர்: கேள்வி பதில்". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-quiz/article6180476.ece. 
  19. 19.0 19.1 "பல்துறையின் மறுபெயர் விக்ரம்". இந்தியாகிளிட்சு. 27 June 2014 இம் மூலத்தில் இருந்து 13 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140713115212/http://www.indiaglitz.com/channels/tamil/article/109569.html. 
  20. சுதர்சன் ஸ்ரீநிவாசன். "சியான் விக்ரம்". பிகைண்ட்வுட்சு. Archived from the original on 13 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 21 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archivedate= (help)
  21. பரத்வாஜ் ரங்கன் (1 December 2003). "உருக்கு மனிதர்– எப்படி ஒரு துன்பப்பட்ட இளைஞன் தமிழ்த் திரையுலக நாயகனானார்". தி கேரவன். http://www.caravanmagazine.in/arts/man-steel. 
  22. ஸ்ரதா சுகுமாரன் (17 June 2010). "எனது ரத்த வகை B+. அதுவே எனது குறிக்கோள்". லைவ் மின்ட் இம் மூலத்தில் இருந்து 13 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140713120020/http://blog.livemint.com/Leisure/L8abhlgLrFnbGomirGjV9J/8216My-blood-group-is-B-and-that8217s-my-motto8217.html. 
  23. "Dhil to Dhool". The Hindu. 1 February 2002 இம் மூலத்தில் இருந்து 13 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140713112847/http://www.hindu.com/thehindu/lf/2002/02/01/stories/2002020100410200.htm. 
  24. Malathi Rangarajan (26 June 2009). "Sing on". The Hindu இம் மூலத்தில் இருந்து 13 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140713113002/http://www.hindu.com/fr/2009/06/26/stories/2009062650250100.htm. 
  25. Sudhish Kamath (31 March 2002). "'Gemini' already a hit!". The Hindu இம் மூலத்தில் இருந்து 13 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140713113617/http://www.hindu.com/thehindu/lf/2002/03/31/stories/2002033100270200.htm. 
  26. S. R. Ashok Kumar (15 February 2009). "Vikram a singer too". The Hindu இம் மூலத்தில் இருந்து 13 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140713113701/http://www.hindu.com/2009/02/15/stories/2009021554560700.htm. 
  27. S. R. Ashok Kumar (8 April 2009). "Music to the ears". The Hindu இம் மூலத்தில் இருந்து 13 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140713113753/http://www.hindu.com/thehindu/mp/2009/04/08/stories/2009040850150100.htm. 
  28. Srinivasa Ramanujam (9 March 2010). "Vikram croons in five voices!". The Times of India இம் மூலத்தில் இருந்து 13 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140713113836/http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Vikram-croons-in-five-voices/articleshow/5658772.cms. 
  29. Pavithra Srinivasan (20 April 2011). "Music Review: Deiva Thirumagan music is touching". Rediff இம் மூலத்தில் இருந்து 13 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140713114040/http://www.rediff.com/movies/report/south-review-deiva-thirumagan/20110420.htm. 
  30. Pavithra Srinivasan (16 December 2011). "Music Review: Nothing new about Rajapattai's music". Rediff இம் மூலத்தில் இருந்து 13 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140713114159/http://www.rediff.com/movies/review/music-review-rajapattai/20111216.htm. 
  31. "'David' Tamil Music Review: The soundtrack boasts of trendsetting music". சிஎன்என்-ஐபிஎன். IANS. 15 January 2013 இம் மூலத்தில் இருந்து 13 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140713114321/http://ibnlive.in.com/news/david--tamil-music-review-the-soundtrack--boasts-of-trendsetting-music/315811-71-178.html. 
  32. "'ஃபிர் மிலே சுர்...': ஒரு கீதம் புத்துயிர்த்துள்ளது". அவுட்லுக் (இதழ்). பி.டி.ஐ. 25 சனவரி 2010. http://www.outlookindia.com/news/article/Phir-Mile-Sur-An-Anthem-is-Revived/673501. 
  33. தாருண்யா சுரேஷ் (25 பிப்ரவரி 2010). "செல்வா மற்றும் நான் வெகு தூரம் பின்னோக்கி பார்க்கும் போது: விக்ரம்". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/others/news-interviews/Selva-and-I-go-a-long-way-back-Vikram/articleshow/5611757.cms. 
  34. டென்னிஸ் மார்கஸ் மேத்தியு (16 மே 2012). "ஒற்றுமைக்கான பெரும்பாடல்". தி இந்து. http://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/a-grand-song-for-unity/article3422520.ece. 
  35. "தமிழ்ப் படமான மெரினா உணர்ச்சி மிக்க பிரச்சனைகளை கையாண்டுள்ளது". இந்தியாகிளிட்சு. சி.என்.என்-ஐ.பி.என். 2 செப்டம்பர் 2012 இம் மூலத்தில் இருந்து 13 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140713135357/http://ibnlive.in.com/news/telugu-film-marina-deals-with-sensitive-issues/287736-66.html. 
  36. "இயக்குநர் பாண்டிராஜ் விக்ரம் மற்றும் சினேகாவை ஈடுபடவைத்துள்ளார்". ஐங்கரன் இன்டர்நேசனல்சு. 10 சனவரி 2012. Archived from the original on 13 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகஸ்ட் 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archivedate= (help)
  37. Moviebuzz (18 செப்டம்பர் 2010). "விக்ரமும் திரிஷாவும் மறுபடியும் இணைந்து நடித்தனர்!". சிஃபி. http://www.sify.com/movies/trisha-and-vikram-are-together-again-news-tamil-kkguBUbffgisi.html. 
  38. ரிங்கு குப்தா (7 ஆகத்து 2011). "முதற் பிடிப்புமுதற் பிடிப்பு: குழம்பியா தேநீரா நானா?". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2014-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714225422/http://www.hindu.com/rp/2011/08/07/stories/2011080750130400.htm. 
  39. டினேஷ் பாஸின் (14 ஜூன் 2010). "தங்கம் விளம்பரச் சந்தையில் பிரகாசிக்கிறது". பிசினஸ் ஸ்டாண்டர்ட். http://www.business-standard.com/article/management/gold-shines-in-advertising-mart-110061400047_1.html. 
  40. "Manappuram to take QIP route to raise Rs 1,000 crore". தி எகனாமிக் டைம்ஸ். 19 ஆகத்து 2010. http://articles.economictimes.indiatimes.com/2010-08-19/news/27584445_1_manappuram-general-finance-loan-book-qip-route. 
  41. ஆதிரா எம் (3 ஏப்ரல் 2011). "Male Gold-models?". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/entertainment/malayalam/article370004.ece. 
  42. ஆதிரா எம் (21 சனவரி 2012). "தி பிரேசிலியன் ப்ரிகேட்". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/the-brazilian-brigade/article2818628.ece. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரம்&oldid=3907289" இலிருந்து மீள்விக்கப்பட்டது