வால்டர் லீவின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வால்டர் ஹெச்.ஜி. லீவின் , Ph.D.
பிறப்புசனவரி 29, 1936 (1936-01-29) (அகவை 88)
நெதர்லாந்து
வாழிடம்நெதர்லாந்து,
அமெரிக்கா
தேசியம்நெதர்லாந்து
துறைஇயற்பியல்
பணியிடங்கள்எம்.ஐ.டி
கல்வி கற்ற இடங்கள்டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
இணையதளம்
http://web.mit.edu/physics/people/faculty/lewin_walter.html

வால்டர் ஹெச்.ஜி. லீவின் (Walter Lewin) ஒரு இயற்பியல் பேராசிரியர். இவர் ஜனவரி 29-ல் 1936 ஆம் ஆண்டு பிறந்தார். எம்.ஐ.டி யில் பணிபுரிந்தார்.

கல்வி[தொகு]

1965 -ல் டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அணுக்கருவியல் இயற்பியலில் பட்டம் பெற்றார்.மேலும் ரோட்டர்டாம் கல்லூரியில் இயற்பியல் ஆசிரியராகவும் பணியாற்றினார்.1966-ல் எம்.ஐ.டி யில் துணைப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.பின்னர் எம். ஐ. டி யில் 1974-ல் பேராசிரியாக பணிபுரிந்தார்.[1] ஜார்ஜ் கிளார்க் என்பவருடன் இணைந்து பலூன்கள் மூலம் எக்ஸ்கதிர் வானியல் சோதனைகளைச் செய்தார்.அதன் பின்னர் 20 முறை இப்படியான சோதனைகளைச் செய்தார்.இச்சோதனைகளின் மூலம் புதிய 5 எக்ஸ்கதிர் மூலங்களைக் கண்டறிந்தனர்[2]. இவரின் 450 அறிவியல் கட்டுரைகள் இதுவரை வெளியாகியுள்ளன.எம்.ஐ.டி யில் இவரது உரைகள் மற்றும் வகுப்புகள் பிரசித்தி பெற்றவை. 2011 முதல் இணையம் வழி ஸ்கைப் மூலம் உலகின் பல்வேறு மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Instructor Profile: Walter Lewin at MIT OpenCourseWare (archived 2009)
  2. "1971ApJ...169L..17L Page L17". Adsabs.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2013-04-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்டர்_லீவின்&oldid=3915181" இலிருந்து மீள்விக்கப்பட்டது