வாசஸ்பதி மிஸ்ரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாசஸ்பதி மிஸ்ரர்
பிறப்புகி. பி., 900
இந்தியா
இறப்புகி. பி., 980
தத்துவம்பாமதி அத்வைத தத்துவத்தை நிறுவியர்
இந்திய மெய்யியல்

வாசஸ்பதி மிஸ்ரர் (Vācaspati Miśra) (900 – 980), ஆதிசங்கரரின் பிரம்ம சூத்திரம் மீதான பாஷ்யத்திற்கு, மிக விரிவாகவும், தெளிவாகவும் விளக்க உரையை தனது மனைவி பாமதி பெயரில் வெளியிட்டதின் மூலம் புதிய பாமதி அத்வைத வேதாந்த தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர். இவரது பாமதி நூல் புதிய நியாய தத்துவவாதிகளுக்கு முக்கிய நூலாக அமைந்தது.

வாசஸ்பதி மிஸ்ரர், தற்கால இந்திய - நேபாள எல்லையில், பிகார் மாநிலத்தின், மதுபனி மாவட்டத்தின், தலைமையகமான தர்பங்கா நகரத்திற்கு அருகில் உள்ள வாசஸ்பதி நகரில் வாழ்ந்தவர்.

வாசஸ்பதி மிஸ்ரர், வேத தத்துவ தரிசனங்களில் மீமாம்சை மற்றும் நியாயம் ஆகிய தத்துவங்களை ஆய்ந்து தத்துவபிந்து எனும் நூலை எழுதியுள்ளார்.

ஆதார நூல்களுக்கும் படிப்பதற்கும்[தொகு]

முக்கிய நூல்கள்[தொகு]

மற்ற நூல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசஸ்பதி_மிஸ்ரர்&oldid=2711827" இலிருந்து மீள்விக்கப்பட்டது