வளையபுரோப்பீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளையபுரோப்பீன்
Skeletal formula of cyclopropene
Skeletal formula of cyclopropene with implicit hydrogens shown
Skeletal formula of cyclopropene with implicit hydrogens shown
Ball and stick model of cyclopropene
Ball and stick model of cyclopropene
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
சைக்ளோபுரோப்பீன்[1]
இனங்காட்டிகள்
2781-85-3 Y
ChemSpider 109788 N
InChI
  • InChI=1S/C3H4/c1-2-3-1/h1-2H,3H2 N
    Key: OOXWYYGXTJLWHA-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த cyclopropene
பப்கெம் 123173
SMILES
  • C1C=C1
பண்புகள்
C3H4
வாய்ப்பாட்டு எடை 40.07 g·mol−1
கொதிநிலை −36 °C (−33 °F; 237 K)
வெப்பவேதியியல்
Std enthalpy of
combustion
ΔcHo298
-2032--2026 கியூ மோல்−1
வெப்பக் கொண்மை, C 51.9-53.9 யூ கெ−1 மோல்−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

வளையபுரோப்பீன் (Cyclopropene) என்பது C3H4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சைக்ளோ புரோப்பீன் என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் சைக்ளோ ஆல்க்கீன் வகைச் சேர்மத்திற்கு ஒர் எளிய எடுத்துக்காட்டு ஆகும். சைக்ளோ புரோப்பீன் முக்கோண வடிவ கட்டமைப்பைக் கொண்டுள்ளது ஏனெனில் இதனுடைய மூலக்கூறு உயர்நிலை திரிபு அடையும் தன்மையுடையதாக உள்ளது. சைக்ளோ புரோப்பீனை தயாரிப்பது கடினமான செயலாகும். பிணைப்புகளைப் பற்றியும் மூலக்கூற்று ஆர்பிட்டால்கள் பற்றியுமான அடிப்படை ஆய்வுகளுக்கு மிகவும் பயனுள்ள ஒரு சேர்மமாக இது உள்ளது. ஒற்றைப் பிணைப்புடன் ஒப்பிடுகையில், இரட்டைப் பிணைப்பின் சுருக்கப்பட்ட பிணைப்பு நீளம் அதற்கு எதிரேயுள்ள கோணத்தின் அளவையும் குறைக்கிறது. சைக்ளோ புரோப்பேனில் 60° கோணமாகக் காணப்பட்ட இக்கோண அளவு சைக்ளோ புரோப்பீனில் 51° கோணமாகக் குறைந்துள்ளது[2]. அதேநேரத்தில் சைக்ளோ புரோப்பேனுடன் ஒப்பிடுகையில், வளையத்து கார்பன் – கார்பன் பிணைப்பின் p பண்பு அதாவது எலக்டரான் சுற்றுவட்டப்பாதை அதிகரித்து காணப்படுகிறது. ஆல்க்கீன் கார்பன்கள் வளையத்திற்காக sp2.68 கலப்பினச் சேர்க்கையைப் பயன்படுத்துகின்றன[3]

தயாரிப்பு முறைகள்[தொகு]

தொடக்கக் கால தயாரிப்புகள்[தொகு]

வளைய புரோப்பீனின் முதலாவது உறுதிப்படுத்தப்பட்ட தயாரிப்பு முறையை தெம்யானோவ் மற்றும் தோயாரெங்கோ ஆகியோர் மேற்கொண்டனர். மும்மெத்தில்வளையபுரோப்பைலமோனியம் ஐதராக்சைடை பிளாட்டினம் பூசிய களிமண்ணில் 320-330 பாகை செல்சியசு வெப்பநிலையில் கார்பனீராக்சைடு சூழலில் வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தினர். இம்முறையில் மும்மெத்திலமீன் பிரதானமான பொருளாக உற்பத்தி செய்யப்பட்டது. இதனுடன் இருமெத்தில்வளையபுரோப்பைலமீனும் 5% வளைய புரோப்பீனும் உடன் உற்பத்தியாகின. சைக்ளோயெப்டாடிரையீன் மற்றும் டைமெத்தில் அசிட்டைலீன் டைகார்பாக்சிலேட்டு ஆகியனவற்றின் கூட்டு விளைபொருளை வெப்பசிதைவுக்கு உட்படுத்தியும் வளைய புரோப்பீன் 1% அளவுக்குத் தயாரிக்கப்பட்டது.

அல்லைல் குளோரைடிலிருந்து நவீனத் தொகுப்புமுறை[தொகு]

அல்லைல் குளோரைடுடன் கார சோடியம் அமைடை 80 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தும்போது ஐதரசன் ஆலைடு நீக்கமடைந்து 10% அளவுக்கு வளைய புரோபீன் உற்பத்தியாகிறது[4]

CH2=CHCH2Cl + NaNH2 → C3H4 (cyclopropene) + NaCl + NH3

இவ்வினையில் அல்லைலமீன் துணைவிளை பொருளாகக் கிடைக்கிறது. அல்லைல் குளோரைடுடன் சோடியம் பிசு(டிரைமெத்தில்சிலில்)அமைடை கொதிக்கும் தொலுயீனில் 45 முதல் 60 நிமிடங்களுக்கு வினைபுரியச் செய்தால் 40% அளவிற்கு வளைய புரோப்பீன் தூய்மையான நிலையிலும் கிடைக்கிறது.

CH2=CHCH2Cl + NaN(TMS)2 → C3H4 (cyclopropene) + NaCl + NH(TMS)2.

1-மெத்தில்சைக்ளோபுரோப்பீனும் இதே முறையில் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இங்கு மெத்தல்லைல் குளொரைடும் பீனைல்லித்தியம் காரமும் பயன்படுத்தப்படுகின்றன:[5]

CH2=C(CH3)CH2Cl + LiC6H5 → CH3C3H3 (1-methylcylcopropene) + LiCl + C6H6.

வழிப்பொருள்கள் தொகுப்புமுறை[தொகு]

நைட்ரோசைக்ளோபுரோப்பேன்களை சோடியம் மெத்தாக்சைடுடன் சேர்த்து சூடுபடுத்துவதால் நைட்ரைல் நீக்கமடைந்து தொடர்புடைய சைக்ளோபுரோப்பீன் வழிப்பொருள் உருவாகிறது. கார்பீன்களை ஆல்க்கைன்களாக மாற்றும் தாமிர வினையூக்கி கூட்டு வினைகளில் முதன்முதலாக அலிபாட்டிக் வலையபுரோப்பீன்கள் தயாரிக்கப்பட்டன. தாமிர சல்பேட்டு வினையூக்கியின் முன்னிலையில் எத்தில் டையசோ அசிட்டேட்டு அசிட்டிலீன்களுடன் வினைபுரிந்து சைக்ளோபுரோப்பீனைத் தருகிறது. 2-பியூட்டைனிலி இருந்து இவ்வழிமுறையில் 1,2-டைமெத்தில்சைக்ளோபுரோப்பீன்-3-கார்பாக்சிலேட்டு தோன்றுகிறது. சைக்ளோ புரோப்பீன் தயாரிப்புத் தொகுப்பு முறைகளில் தாமிரம் ஒரு பயனுள்ள வினையூக்கியாக நிருபிக்கப்பட்டுள்ளது. தாமிர சல்பேட்டும், தாமிரத் தூளும் சமீபத்தில் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அறை வெப்பநிலையில், அதிக அளவில் சைக்ளோ புரோப்பீன் வழிப்பொருட்கள் தயாரிப்பதற்கு ரோடியம் அசிட்டேட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வளைய புரோப்பீனின் வினைகள்[தொகு]

சைக்ளோபுரோப்பீனின் வளைய உயர் திரிபு குறித்த ஆய்வுகள் வினையில் முக்கியத்துவம் பெறுகிறது. 425 பாகை செல்சியசு வெப்பநிலையில் வளையபுரோப்பீன் மெத்திலசிட்டைலீனாக (புரோப்பைன்) மாற்றமடைகிறது.

C3H4 → H3CC≡CH

சைக்ளோபுரோப்பீனை -36 பாகை வெப்பநிலையில் பின்னக்காய்ச்சி வடித்தலுக்கு உட்படுத்திய முயற்சிகளின் விளைவாக பலபடியாதலில் முடிந்தன. இவ்வினையின் வினை வழிமுறையானது, தனியுறுப்பு தொடர் வினையாக இருக்க வேண்டும் என கருதப்படுகிறது. விளைபொருள் பாலிசைக்ளோபுரோப்பேனாக இருக்கலாம் என நிறமாலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சைக்ளோபென்டாடையீனுடன் சைக்ளோபுரோப்பீன் டையீல்சு-ஆல்டர் வினையில் ஈடுபட்டு என்டோ-டிரைசைக்ளோ[3.2.1.02,4]ஆக்ட்-6-யீனைக் கொடுக்கிறது. இவ்வினையே சைக்ளோபுரோப்பீனின் இருப்பை அறிய உதவும் சோதனையாக உள்ளது.

தொடர்புடைய சேர்மங்கள்[தொகு]

  • பருத்திவிதை எண்ணெயிலிருந்து தோன்றும் மால்வாலிக் அமிலம் ஒரு நச்சுசைக்ளோபுரோப்பீன் கொழுப்பு அமிலமாகும்.
  • பழங்கள் விரைவில் அழுகாமல் [6][7] இருக்க 1-மெத்தில்சைக்ளோபுரோப்பீன் பயன்படுத்தப்படுகிறது.
  • போரிரீன்கள், பாசுபிரீன்கள், சிலிரீன்கள் என்பவை போரான், பாசுபரசு, சிலிக்கன் தனிமங்கள் பதிலீடு செய்யப்பட்ட சைக்ளோபுரோப்பீன்களாகும். RBC2R'2, RPC2R'2, மற்றும் R2SiC2R'2 என்பன இவற்ரின் வாய்ப்பாடுகளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "cyclopropene - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 27 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 9 October 2011.
  2. Staley, S. W.; Norden, T. D.; Su, C.-F.; Rall, M.; Harmony, M. D. (1987). "Structure of 3-cyanocyclopropene by microwave spectroscopy and ab initio molecular orbital calculations. Evidence for substituent-ring double bond interactions". J. Am. Chem. Soc. 109 (10): 2880–2884. doi:10.1021/ja00244a004. 
  3. Allen, F. H. (1982). "The geometry of small rings: Molecular geometry of cyclopropene and its derivatives". Tetrahedron 38 (5): 645–655. doi:10.1016/0040-4020(82)80206-8. 
  4. Closs, G.L.; Krantz, K.D. (1966). "A Simple Synthesis of Cyclopropene". Journal of Organic Chemistry 31: 638. doi:10.1021/jo01340a534. 
  5. Clarke, T. C.; Duncan, C. D.; Magid, R. M. (1971). "An Efficient and Convenient Synthesis of 1-Methylcyclopropene". J. Org. Chem 36: 1320. doi:10.1021/jo00808a041. 
  6. Beaudry, R.; Watkins, C. (2001). "Use of 1-MCP on Apples". Perishable Handling Quarterly (University of California) (108): 12. 
  7. Trinchero, G. D.; Sozzi, G. O.; Covatta, F.; Fraschina, A. A. (May 2004). "Inhibition of ethylene action by 1-methylcyclopropene extends postharvest life of "Bartlett" pears". Postharvest Biology and Technology 32 (2): 193–204. doi:10.1016/j.postharvbio.2003.11.009. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளையபுரோப்பீன்&oldid=3228109" இலிருந்து மீள்விக்கப்பட்டது