வடக்கு மர மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கு மர மூஞ்சூறு
Northern treeshrew
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இசுகேன்டென்டியா
குடும்பம்:
துபாயடே
பேரினம்:
துபாயா
இனம்:
து. பேலன்கெரி
இருசொற் பெயரீடு
துபாயா பேலன்கெரி
வாக்நெர், 1841
வடக்கு மர மூஞ்சூறு பரம்பல்

வடக்கு மர மூஞ்சூறு (Northern Tree Shrew)(துபாயா பேலன்கெரி) என்பது மரமூஞ்சூறு ஆகும். இது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது.[1]

1841ஆம் ஆண்டில், ஜெர்மன் நாட்டைச் சார்ந்த விலங்கியல் நிபுணர் ஜோஹான் ஆண்ட்ரியாஸ் வாக்னர் தென்கிழக்கு ஆசியாவிற்கான பிரெஞ்சு பயணத்தின் போது பெகுவில் சேகரித்தார். இதற்கு இவர் மரமூஞ்சூறுகளுக்கான கிளாடோபேட்சு பெலங்கேரி என்ற பெயரை முதலில் இட்டார். இந்த மாதிரிகளை 1834ஆம் ஆண்டில் ஐசிடோர் ஜெஃப்ராய் செயிண்ட்-ஹிலாயர் விவரித்துள்ளார். இவை துபாயா டானா சிற்றினத்திலிருந்து போதுமான அளவு வேறுபடவில்லை என்பது ஹிலாயர் கருத்தாகும்.[2][3]

பண்புகள்[தொகு]

ஒரு வடக்கு ட்ரீஷ்ரூவின் மண்டை ஓடு

தொலை அளப்பியல் ஆய்வின் மூலம் வடக்கு மர மூஞ்சூறுகளின் உடல் வெப்பநிலையானது இரவு நேரத்தில் 35 °C (95 °F)லிருந்து பகல் நேரத்தில் 40 °C (104 °F) வரை வேறுபடுவதாக அறியப்படுகிறது. இந்த வேறுபாடு மற்ற வெப்பங்கொள் விலங்குகளை விட அதிக வேறுபாடுடையது. மேலும் உடல் வெப்பநிலை மற்றும் இடம்பெயர்தல் செயலில் நாள் சார் சீரியக்கத்துடன் ஒத்திருந்துள்ளது.[4]

முதிர்ச்சியடைந்த மூஞ்சூறு 0.2 கிலோ (0.44 பவுண்ட்ஸ்) வரை எடையுடையன. இவற்றின் அதிகபட்ச ஆயுட்காலம் 11 ஆண்டுகள் ஆகும். 

இனவரலாறு[தொகு]

முழுமையான இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி மரபணு தரவு, துபாயா, முதனிகளை விட முயல்களுடன் நெருக்கமான தொகுதிப் பிறப்பு கருதுகோளை ஆதரிக்கிறது.[5] இருப்பினும் மிக சமீபத்திய முழு மரபணு வரிசை முறை தரவுகளால் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இதன் அடிப்படையில் லகோமார்பா மற்றும் கொறிணிகளை விட முதனினுகளுடன் நெருக்கமானவை.[6]

மருத்துவ ஆராய்ச்சியில்[தொகு]

துபாயா பெலங்கேரியினை மருத்துவ மாதிரியாகப் பயன்படுத்த ஆர்வம் அதிகரித்துள்ளது. 2002 ஆம் ஆண்டில், து. பெலங்கேரியின் முதன்மை கல்லீரல் உயிரணுக்கள் கல்லீரல் அழற்சி வைரசு ஆய்விற்கு மாதிரியாகப் பயன்படுத்தப்படலாம் என்று விவரிக்கும் ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது.[7] ஒளி ஏற்புத் தன்மை,[8] விழித்திரை கூம்புகளின் சோதனை,[9] மற்றும் ஒளிவிலகல் நிலை மற்றும் கண்ணின் கண் கூறு பரிமாணங்கள் ஆகிய ஆய்வுகளுக்கு டூபியா பெலங்கேரியைப் பயன்படுகிறது.[10] டூபியா பெலங்கேரி மாதிரியைப் பயன்படுத்தி கண் அமைப்பு, வளர்ச்சி மற்றும் பார்வை குறித்துப் பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. மனித கண் அமைப்பு மற்றும் பார்வைக்கு ஒற்றுமை இருப்பதால், கொறிணி போன்ற வழக்கமான சிறிய ஆய்வக விலங்குகளை விட மூஞ்சூறுவின் கண் இயல்பானது.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Han, K. H.; Duckworth, J. W.; Molur, S. (2016). "Tupaia belangeri". IUCN Red List of Threatened Species 2016: e.T41492A22280884. https://www.iucnredlist.org/species/41492/22280884. 
  2. Wagner, J. A. (1841). "Das peguanische Spitzhörnchen". Die Säugethiere in Abbildungen nach der Natur mit Beschreibungen. Supplementband 2. Erlangen: Expedition des Schreber'schen Säugethier- und des Esper'schen Schmetterlingswerkes. பக். 42–43. https://archive.org/stream/diesugthierein21841schr#page/42/mode/2up. 
  3. Geoffroy Saint-Hilaire, I. (1834). "Insectivores vivant dans le continent de l’Inde ou dans le grand Archipel indien. Les Tupaias". Voyage aux Indes orientales, pendant les années 1825 a 1829 par M. Charles Bélanger. Zoologie, Mammifères. Paris: Arthus Bertrand. பக். 103–107. https://books.google.com/books?id=qxTPAAAAMAAJ&pg=PA103#v=onepage&f=false. 
  4. Refinetti, R.; Menaker, M. (1992). "Body temperature rhythm of the tree shrew, Tupaia belangeri". Journal of Experimental Zoology 263 (4): 453–457. doi:10.1002/jez.1402630413. பப்மெட்:1402741. 
  5. Schmitz, J.; Ohme, M.; Zischler, H. (2000). "The complete mitochondrial genome of Tupaia belangeri and the phylogenetic affiliation of Scandentia to other eutherian orders". Molecular Biology and Evolution 17 (9): 1334–1343. doi:10.1093/oxfordjournals.molbev.a026417. பப்மெட்:10958850. https://archive.org/details/sim_molecular-biology-and-evolution_2000-09_17_9/page/1334. 
  6. Fan, Y.; Huang, Z.Y.; Cao, C.C.; Chen, C.S.; Chen, Y.X.; Fan, D.D.; He, J.; Hou, H.L. et al. (2013). "Genome of the Chinese tree shrew". Nature Communications 4: 1426. doi:10.1038/ncomms2416. பப்மெட்:23385571. Bibcode: 2013NatCo...4.1426F. 
  7. Zhao, X., Tang, Z. Y., Klumpp, B., Wolff-Vorbeck, G., Barth, H., Levy, S., von Weizsäcker, F., Blum, H. E., Baumert, T. F. (2002). Primary hepatocytes of Tupaia belangeri as a potential model for hepatitis C virus infection. Journal of Clinical Investigation 109(2): 221−232.
  8. Taylor, W. Rowland; Morgans, Catherine (1998). "Localization and properties of voltage-gated calcium channels in cone photoreceptors of Tupaia belangeri". Visual Neuroscience 15 (3): 541–552. doi:10.1017/S0952523898153142. 
  9. Knabe, W., Skatchkov, S., Kuhn, H.-J. (1997.) Lens Mitochondria in the Retinal Cones of the Tree-shrew Tupaia belangeri. Vision Research 37 (3): 267–271.
  10. Norton, T. T., McBrien, N. A. (1992.) Normal development of refractive state and ocular component dimensions in the tree shrew (Tupaia belangeri). Vision Research 32 (5): 833–842.
  11. Shriver, J .G., Noback, C. R. (1967). "Color Vision in the Tree Shrew (Tupaia glis)". Folia Primatologia 6: 161−169.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_மர_மூஞ்சூறு&oldid=3630525" இலிருந்து மீள்விக்கப்பட்டது