லூயிசு அமிலங்களும் காரங்களும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லூயிசு அமிலம் (Lewis acid) என்பது ஒரு வேதியியல் இனம் ஆகும். இது லூயிசு காரத்துடன் வினை புரிந்து லுாயிஸ் கூட்டுப்பொருளைத் தருகிறது. லூயிசு காரம் அல்லது வேறு இனங்கள் பகிரப்படாத இலத்திரன் இணையை லுாயிசு அமிலத்திற்கு வழங்கி லுாயிஸ் கூட்டுப்பொருளை உருவாக்குகிறது.[1] உதாரணமாக OH மற்றும் NH3 ஆகியவை லுாயிஸ் அமிலமாகும். ஏனெனில் இவை தனித்த இணை இலத்திரன்களை வழங்குகின்றன. உதாரணமாக Me3B மற்றும் NH3 இரண்டும் வினை புரிந்து Me3BNH3 உருவாகும் வினையில் Me3B லுாயிஸ் அமிலமாகவும் NH3 லுாயிஸ் காரமாகவும் செயல்படுகிறது. Me3BNH3 என்பது ஒரு லுாயிஸ் கூட்டுப்பொருளாகும்.

எளிய லுாயிஸ் அமிலம்[தொகு]

போரான் ட்ரைஅலைடு, ஆர்கனோபோரான்கள் ஆகியவை எளிய லுாயிசு அமிலத்திற்கு உதாரணமாக காட்டப்டுகிறது.

BF3 + F− → BF4
BF3 + OMe2 → BF3OMe2

BF4, BF3OMe2 ஆகியன போரான் ட்ரைஅலைடின் லூயிசு காரக் கூட்டுப்பொருட்கள் ஆகும்.

கூட்டு லுாயிஸ் அமிலம்[தொகு]

இதற்கு உதாரணம் அலுமினியம் ட்ரைஅலைடுகள் ஆகும்.[2]

பல உலோக அணைவுச்சேர்மங்கள் லுாயிசு அமிலங்களாக செயல்படுகின்றன.

[Mg(H2O)6]2+ + 6 NH3 → [Mg(NH3)6]2+ + 6 H2O

பயன்கள்[தொகு]

லூயிசு அமிலம் பிரீடல்-கிராப்ட்சு வினையில் பங்குபெறுகின்றது.[3]

RCl +AlCl3 → R+ + AlCl4

மேற்கோள்கள்[தொகு]

  1. IUPAC Gold Book - Lewis acid
  2. Greenwood, N. N.; & Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd Edn.), Oxford:Butterworth-Heinemann. ISBN 0-7506-3365-4.
  3. March, J. “Advanced Organic Chemistry” 4th Ed. J. Wiley and Sons, 1992: New York. ISBN 0-471-60180-2.