லாப்ரடார் கடல்

ஆள்கூறுகள்: 61°N 56°W / 61°N 56°W / 61; -56 (Labrador Sea)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாப்ரடார் கடல்
கிறீன்லாந்தின் கடற்கரைப் பகுதியான பாமியட் அருகே சூரிய மறைவிற்குப் பிறகான லாப்ரடார் கடலின் தோற்றம்
ஆள்கூறுகள்61°N 56°W / 61°N 56°W / 61; -56 (Labrador Sea)
வகைகடல்
வடிநில நாடுகள்கனடா, கிறீன்லாந்து
அதிகபட்ச நீளம்c. 1,000 km (621 mi)
அதிகபட்ச அகலம்c. 900 km (559 mi)
மேற்பரப்பளவு841,000 km2 (324,700 sq mi)
சராசரி ஆழம்1,898 m (6,227 அடி)
அதிகபட்ச ஆழம்4,316 m (14,160 அடி)
மேற்கோள்கள்[1][2]

லாப்ரடார் கடல் (The Labrador Sea) (French: mer du Labrador, Danish: Labradorhavet) வடக்கு அத்திலாந்திக்கு பெருங்கடலின் கரம் போன்று அமைந்துள்ள கடலாகும். இது லாப்ரடோர் மூவலந்தீவிற்கும், கிறீன்லாந்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தக்  கடலானது  கண்டத் திட்டுகளால் தென்மேற்கு,  வடமேற்கு, மற்றும்  வடகிழக்குப்  பகுதிகளில்  மடிப்புகளுடையதாய்  இருக்கிறது. இது வடபகுதியுடன் பேஃபின் குடா வழியாக டேவிஸ் நீரிணையின்  வழியாக  இணைக்கப்பட்டுள்ளது. [3] இது அத்திலாந்திக்கு கடலின் எல்லையோரக் கடலாக குறிப்பிடப்படுகிறது.[4][5]

வட அமெரிக்கத் தட்டும் கிறீன்லாந்து தட்டும் சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு தொடங்கிப் பிரியத் தொடங்கி, சுமார் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அந்த நகர்வு நின்ற போது இந்தக் கடல் உருவாகியிருக்காலம் எனக் கூறப்படுகிறது. உலகின் மிகப் பெரிய கலங்கல் நீரோட்டத்தைக்  கொண்டுள்ளது. அதாவது, வடமேற்கு அட்லாண்டிக் நடுப்பெருங்கடல் நீர்வழிப் பாதையானது (NAMOC), ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் கடல் வழியாக அட்லாண்டிக் பெருங்கடலின் அடிப்பகுதியை நோக்கி அமைந்துள்ளது.

லாப்ரடோர் கடலானது வட அட்லாண்டிக் ஆழ்கடல் நீரின் முதன்மையான ஆதாரமாக உள்ளது. மிகவும் குளிர்ச்சியான, வட அட்லாண்டிக் கடலின் பெரும் ஆழத்தில் நகரும் நீர்ப்பரப்பாக உள்ள இக்கடலானது பரந்து விரிந்து, உலகப் பெருங்கடலில் அடையாளம் காணக்கூடிய நீர்ப்பரப்பாக இது திகழ்கிறது.

Arctic cultures in history

வரலாறு[தொகு]

வட அமெரிக்கத் தட்டும் கிறீன்லாந்து தட்டும் சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு தொடங்கிப் பிரியத் தொடங்கி, சுமார் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அந்த நகர்வு நின்ற போது இந்தக் கடல் உருவாகியிருக்காலம் எனக் கூறப்படுகிறது.  கிரீத்தேசியக் காலத்தில் வண்டல்  படிவுகளாலான  வடிநிலமொன்று உருவாகி தற்போது அது கண்டத்திட்டுகளின் அடியில் புதைக்கப்பட்டு விட்டது.   மாக்மாவால் ஆன கடல்  தளம்  விரிவடையத்  தொடங்கிய போது, டேவிஸ் நீரிணை மற்றும் பேஃபின் குடாவிற்கருகில் பேலியோசினில்  உள்ள பிக்ரைட்டுகள் மற்றும் பேசால்ட்டுகளின்  எரிமலைக்  கசிவுகளும் படியத் தொடங்கின. 

கி.மு 500 மற்றும் கி.பி 1300 க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தக் கடலின் தென்பகுதி கடற்கரையானது, டோர்செட், பியோதக் மற்றும் இனுவிட்டு ஒப்பந்தப்படியான பகுதிகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. டோர்செட் பழங்குடியின மக்கள் துலே மக்களால் இடம் பெயரச் செய்யப்பட்டனர்.  [6]

பரப்பு மற்றும் எல்லைகள்[தொகு]

சர்வதேச நீரியல் பரப்பு நிறுவனம் (International Hydrographic Organization) லாப்ரடார் கடலின் எல்லைகளைப் பின்வருமாறு வரையறுக்கிறது:[7]

வடக்கில்: டேவிஸ் நீரிணையின் தெற்கு எல்லையும் கிறீன்லாந்து மற்றும் லாப்ரடோர் இவற்றுக்கிடையேயான 60° வட அட்ச ரேகை.

கிழக்கில்: புனித பிரான்சிஸ் முனையிலிருந்து 47°45′N 52°27′W / 47.750°N 52.450°W / 47.750; -52.450 (Cape St. Francis) (நிய ஃபவுண்ட்லாந்து) கிறீன்லாந்தின் ஃபேர்வெல் முனைக்கும் இடையிலான கோடு.

மேற்கில்: லாப்ரடாரின் கிழக்குக் கடற்கரை மற்றும் நியூபவுண்ட்லாந்து மற்றும் புனித லாரன்சு வளைகுடாவின் வடகிழக்கு எல்லை – பால்ட் முனை (கிர்பான் தீவின் வடமுனை,(51°40′N 55°25′W / 51.667°N 55.417°W / 51.667; -55.417 (Cape Bauld)) மற்றும் பெல்லே தீவின் கிழக்கு அதி எல்லை மற்றும் வடகிழக்கு முனை (52°02′N 55°15′W / 52.033°N 55.250°W / 52.033; -55.250 (Belle Isle)) இவைகளை இணைக்கும் அட்ச ரேகை. அவ்விடத்திலிருந்து, இந்த குறுக்குத்தடுப்பை இணைக்கும் லாப்ரடாரில் உள்ள புனித சார்லசு முனையின் கிழக்கு எல்லை. (52°13'N)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Labrador" (in Russian). Great Soviet Encyclopedia.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Wilson, R. C. L; London, Geological Society of (2001). "Non-volcanic rifting of continental margins: a comparison of evidence from land and sea". Geological Society, London, Special Publications 187: 77. doi:10.1144/GSL.SP.2001.187.01.05. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-86239-091-1. https://books.google.com/books?id=-bsvkxVBTasC&pg=PA77. 
  3. Encyclopædia Britannica. "Labrador Sea". பார்க்கப்பட்ட நாள் 2008-02-03. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)
  4. Calow, Peter (12 July 1999). Blackwell's concise encyclopedia of environmental management. Wiley-Blackwell. பக். 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-632-04951-6. https://books.google.com/books?id=0E0LP-pPCWwC&pg=PA7. பார்த்த நாள்: 29 November 2010. 
  5. Spall, Michael A. (2004). "Boundary Currents and Watermass Transformation in Marginal Seas". J. Phys. Oceanogr. 34 (5): 1197–1213. doi:10.1175/1520-0485(2004)034<1197:BCAWTI>2.0.CO;2. 
  6. Grønlands forhistorie, ed. Hans Christian Gulløv, Gyldendal 2005, ISBN 87-02-01724-5
  7. "Limits of Oceans and Seas, 3rd edition" (PDF). International Hydrographic Organization. 1953. Archived from the original (PDF) on 8 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 6 February 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாப்ரடார்_கடல்&oldid=3689811" இலிருந்து மீள்விக்கப்பட்டது