ராமச்சந்திர தேவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராமச்சந்திர தேவா (Ramachandra Deva)ஒரு கன்னட கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.இவர் பல நாடகங்களை எழுதியுள்ளார். அவர் 1970 களில் வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட் மற்றும் மாக்பெத்நாடகங்களை கன்னடத்திற்கு மொழிபெயர்த்தார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

1949 இல் சுல்லியா தாலுகாவின் முண்டுகரி கிராமத்தில் பிறந்த ராமச்சந்திர தேவா தனது பள்ளிப்படிப்பை கல்மட்கா, பலிலா, பஞ்சா, புட்டூர் ஆகிய இடங்களில் பயின்றார். மேலும், மைசூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் மற்றும் முதுகலை பட்டம் பெற்றார். ஷேக்ஸ்பியர் மொழிபெயர்ப்புகளில் மேற்கொண்ட ஒப்பாய்விற்காக பெங்களூர் பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.

பணிகள்[தொகு]

கல்யாணபுரத்திலுள்ள மில்கிரேஸ் கல்லூரி, மைசூர் பனுமையாஹ் கல்லூரி, பெங்களூர் தேசிய கல்லூரி ஆகியவற்றில் ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றினார். காங்கிரஸின் அமெரிக்க நூலகத்திற்கான நூலகராக பணியாற்றினார். பிரஜவானி இதழின் துணையாசிரியாகப் பணியாற்றினார். ராமச்சந்திர தேவா ஒரு கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர் மற்றும் விமர்சகர் ஆவார். இவரது படைப்புகளில் இந்திரபிரஸ்தா, மாதத்துவ மரா, சமகிர காவ்யா (கவிதை), டங்கேய பிரகாரனா, மூகேலா மேட்டு இத்தாரா கதேகலு (கதைகள்), ஷேக்ஸ்பியர் யெராடு சம்ஸ்கிருதிகள்ளி (ஆராய்ச்சிப் பணிகள்), முச்சு மாது இத்தாரா லெகனகலு, மட்டுக்கேட் (நாடகங்களின் தொகுப்பு) குடுரே, கொலலு மாட்டு ஷன்க்கா,கெலம்பா கம்பவு ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். ராமச்சந்திர தேவா 11 செப்டம்பர் 2013 அன்று பெங்களூரில் காலமானார்.

குறிப்புகள்[தொகு]

  1. Hamlet Studies (Vikas Publishing House) 24: 71. January 2002. பன்னாட்டுத் தர தொடர் எண்:0256-2480. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமச்சந்திர_தேவா&oldid=3088305" இலிருந்து மீள்விக்கப்பட்டது