ராட் லாவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரோட்னெ இச்சியாச் லாவர் (பிறப்பு 9 ஆகத்து 1938) என்பவர் ஆத்திரேலிய டென்னிசு ஆட்டக்காரரும் முன்னால் உலக முதல் நிலை வீர்ரும் ஆவார். உலகின் சிறந்த டென்னிசு வீரராக கருதப்படுகிறார். 1964 முதல் 1970 வரை முதல் தர வீரராக இருந்தார் [1]. ஓப்பன் கால டென்சுக்கு நான்கு ஆண்டுகள் முன்பும் மூன்று ஆண்டுகள் பின்பும். ஓப்பன் காலம் 1968 ஆண்டு ஆரம்பித்தது. 1961-62 காலப்பகுதியில் தொழில் முறையற்ற டென்னிசு வீரர்களில் முதல் தர வீரராக விளங்கினார். லாவர் 200 தனிநபர் கோப்பைகளை பெற்றுள்ளார், டென்னிசு வரலாற்றில் இது அதிகமாகும். அனைத்து விளையாட்டு தளங்களிலும் சிறப்பாக விளையாடக்கூடியவர். 1964 முதல் 1970 வரை ஒவ்வொரு ஆண்டும் 10 கோப்பைகளுக்கு மேல் தொடர்ச்சியாக பெற்றார்.

லாவர் 11 கிராண்ட் சிலாம் தனிநபர் கோப்பைகளை பெற்றுள்ளார், எனினும் இவர் ஓப்பன் காலத்துக்கு முன் ஐந்து ஆண்டுக்கு கிராண்ட் சிலாம் ஆடுவதில் இருந்து தடை செய்யப்பட்டிருந்தார். 1962, 969 ஆகிய இரு ஆண்டுகளும் கிராண்ட் சிலாம் கோப்பைகள் அனைத்தையும் வென்றவர் இவர். இவர் எட்டு புரொ சிலாம் (ஓப்பன் காலத்துக்கு முந்தையது) கோப்பைகளை வென்றுள்ளார். டேவிசுக் கோப்பையானது கிராண்ட் சிலாமுக்கு இணையாக கருதப்பட்ட காலத்தில் ஐந்து டேவிசுக் கோப்பைகளை பெற ஆத்திரேலிய அணிக்கு உதவினார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

லாவர் ஆத்திரேலியாவின் குயுன்சுலாந்து மாகாணத்திலுள்ள ராக்கம்டன் என்னும் நகரில் ஆகத்து 9, 1938 அன்று ரே லாவருக்கும் மெல்பா-ரோஃவே என்பவருக்கும் மூன்றாவது குழந்தையாக பிறந்தார். அவரின் தந்தை மாடு மேய்ப்பவராகவும் இறைச்சி வெட்டுபவராகவும் பணியாற்றினார். இவரது பெற்றோருக்கு நான்கு குழந்தைகள்.

1966இல் லாவருக்கு 27 வயதாக இருக்கும் போது கலிபோர்னியாவிள்ள சான் ராஃபல் நகரின் மேரி செல்பி என்பவரை திருமனம் செய்தார். அப்போது மேரிக்கு 30 வயது. இல்லினாயில் பிறந்த மணமுறிவு பெற்ற மேரி செல்பி பீட்டர்சன் மூன்று குழந்தைகளுக்கு தாய், திருமணத்திற்கு பின் அவர் மேரி செல்பி லாவர் ஆனார். திருமணத்திற்கு பின் நன்கு அறியப்பட்ட டென்னிசு வீரர்கள் லிய காட், கென் ரோசுவால், ரே எம்மர்சன் முதலான பல வீரர்கள் டென்னிசு மட்டையை கொண்டு கூம்பு வடிவில் நின்றார்கள், அதன் வழியே புதுமணத்தம்பதிகள் நடந்து வந்தனர். லாவருக்கும் மேரிக்கும் ஒரு பையன் பணந்து அவர்களுடனே கலிபோர்னியாவின் பல இடங்களில் வாழ்ந்தான். மேலி லாவர் தன் 84ஆம் வயதில் நவம்பர் 2012 அன்று வட சான் டியேகோ கவுண்டியிலுள்ள கார்ல்சுபெட் என்னுமிடத்திலுள்ள வீட்டில் இறந்தார்.

டென்னிசு வாழ்க்கை[தொகு]

தொழில்முறையில்லா வீரராக[தொகு]

லாவர் பள்ளி படிப்பை முடித்து வெளிவந்ததும் டென்னிசு வாழ்வை தேர்ந்தெடுத்தார், அவரது டென்னிசு வாழ்வு 24 ஆண்டுகள் நீடித்தது. இவருக்கு குயின்சுலாந்தின் சால்லி ஓல்லிசும் பின் ஆத்திரேலிய டேவிசுக் கொப்பை அணித்தலைவர் அரி ஆப்மேனும் பயிற்சியாளர்களாக இருந்தனர். லாவர் ஆத்திரேலிய அமெரிக்க என்று இரு நாட்டு இளையோர் சாதனையாளர் பட்டத்தை 1957இல் பெற்றார். 1959இல் விம்பிள்டனின் மூன்று இறுதியாட்டத்தை எட்டியது இவரது டென்னிசு வாழ்க்கையில் முதல் திருப்பு முனையாகும். விம்பிள்டனின் கலப்பு இரட்டையர் பிரிவில் டார்லெனெ ஆர்டு உடன் இணைந்து பட்டத்தை வென்றார். 87 ஆட்டங்களில் கடுமையாக போராடி அமெரிக்காவின் பேர்ரி பெக்கேயை அரை இறுதியில் வென்ற இவர் இறுதி போட்டியில் பெரு நாட்டவர் அலெக்சு ஓல்மெடோவிடம் தோற்றார். முதல் தனிநபர் கோப்பையை ஆத்திரேலிய சாதனையாளர் பட்டத்தை வென்ற போது பெற்றார். 1961இல் தனிநபர் பிரிவில் விம்பிள்டன் கோப்பையை முதன் முறையாக பெற்றார்.

1962இல் லாவர் 1938இல் டான் பட்சுக்கு பின் ஒரே ஆண்டில் அனைத்து கிராண்ட் சிலாம் தனிநபர் கோப்பைகளையும் பெற்றவராவார். அதே ஆண்டிலேயே மேலும் 18 கோப்பைகளை பெற்றார், மொத்தமாக 22 தனிநபர் பட்டங்கள். இதில் இத்தாலிய சாதனையாளர், செருமன் சாதனையாளர் போட்டிகளும் அடங்கும். இவருக்கு முன் லியு ஓட் 1956இல் இவ்விரு சாதனையாளர் போட்டிகளையும் பெற்றிருந்தார். லாவர் வெல்ல கடினமாக இருந்தது மெதுவாக பந்து எழும்பும் களிமண் தரையை உடைய பிரெஞ்சு ஓப்பன் தான். கால் இறுதியிலிருந்து தொடர்ச்சியாக ஐந்து தொகுப்புகள் உள்ள போட்டியாகவே அது இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.tennisfame.com/hall-of-famers/inductees/rod-laver/
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராட்_லாவர்&oldid=3861864" இலிருந்து மீள்விக்கப்பட்டது