உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜேஷ்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராஜேஷ்குமார் (Rajesh Kumar) ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். குற்றப் புனைவு, அறிபுனை மற்றும் துப்பறிவுப் புனைவு பாணிகளில் 1500க்கும் மேற்பட்ட புதினங்களையும், 2000க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.[1][2] 1980களிலும் 90களிலும் தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்த “பாக்கெட் நாவல்” புத்தகங்களை ஆயிரக்கணக்கில் எழுதியதன் மூலம் புகழ் பெற்றவர். தமிழின் காகிதக்கூழ் புனைவின் ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர், 20 மார்ச், 1947இல் பிறந்தார்.[சான்று தேவை] இவரது பெற்றோர் இரங்கசாமி மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோர் ஆவர். இவரது இயற்பெயர் ராஜகோபால். கோவை ராமகிருஷ்ண வித்யாலயத்தில் கல்வி கற்றார். பவானிசாகர் பயிற்சிப் பள்ளியில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். 1968இல் கல்கண்டு இதழில் தன் முதல் சிறுகதையை வெளியிட்டார். இவரது முதல் புதினம் “வாடகைக்கு ஒரு உயிர்” 1980இல் வெளியானது. பின் ஆனந்த விகடன், குமுதம் போன்ற வெகுஜன இதழ்களிலும் பெஸ்ட் நாவல், திகில் நாவல், எவரெஸ்ட் நாவல், கிரேட் நாவல், கிரைம் நாவல் போன்ற பாக்கெட் நாவல் பதிப்புகளிலும் இவரது படைப்புகள் வெளியாகின. விவேக்-ரூபலா என்ற புகழ்பெற்ற துப்பறியும் சோடிப் பாத்திரங்கள் இவரால் உருவாக்கப்பட்டவை. இவரது சில படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பிளாஃப்ட் பதிப்பத்தால் வெளியிடப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டுக்கான, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

படைப்புகள்

[தொகு]

(பட்டியல் முழுமையானதல்ல)

  1. அபாய நோயாளி
  2. அகல்யா
  3. அஞ்சாதே அஞ்சு
  4. அடுத்த இலக்கு
  5. அது ஒரு நிலாக்காலம்
  6. அந்த சந்திரனே சாட்சி
  7. அபயம் அபாயம் அருணா
  8. அமரர் பதவி அக்டோபர்
  9. அமிர்தம் என்றால் விஷம்!
  10. அரைவிநாடி அநியாயம்
  11. அவசரம் விவேக் அவசரம்
  12. அவன் அவள் அவர்கள்
  13. அவிழ மறுக்கும் அரும்புகள்
  14. அறுபத்தைந்தாவது கலை
  15. அனு ஓர் ஆச்சர்யம்!
  16. ஆகஸ்ட் - 5 அதிகாலை
  17. ஆபத்து இங்கே ஆரம்பம்
  18. ஆப்பிள் பெண்ணே! நீ யாரோ?
  19. இடி மின்னல் இந்திரா!
  20. இதுதான் இந்தியா
  21. இந்த ரோஜாவுக்கு நிறமில்லை
  22. இந்தியன் என்பது என் பேறு
  23. இந்தியனாய் இரு
  24. இந்தியா விற்பனைக்கு அல்ல!
  25. இரண்டாவது உயிர்
  26. இரத்தம் இல்லாத யுத்தம்
  27. இரவுநேர வானவில்
  28. இருட்டில் ஒரு வானம்பாடி
  29. இருட்டில் பறக்கும் பறவைகள்
  30. இருள் பொருள் இன்பம்
  31. இனி மின்மினி
  32. இனிமேல் சாருமதி
  33. இன்று இறப்பு விழா
  34. இன்றே கடைசி
  35. உதடுகள் சுடும்
  36. உயிரோடுதான் விளையாடுவேன்
  37. உயிர்த் திருடர்கள்
  38. உலராத ரத்தம்
  39. உன் நிழலும் நான்தானே!
  40. உன்னால் முடியும் விவேக்
  41. உன்னுடைய Gunகளுக்கு மட்டும்
  42. உன்னை விட்டால் யாரும் இல்லை
  43. ஊசிமுனையில் உஷா
  44. ஊசிமுனையில் ஒரு உயிர்
  45. ஊதாநிறத் தீவு
  46. ஊமத்தம் பூக்கள்
  47. எலெக்ட்ரிக் ரோஜாக்கள்
  48. எந்த நேரத்திலும்
  49. எனக்கு நானே பகையானேன்!
  50. என் இனிய விரோதியே
  51. என் வானம் மிக அருகில்
  52. ஏழாவது டெஸ்ட் டியூப்
  53. ஐந்து கிராம் நிலவு
  54. ஒரு சனிக்கிழமை இரவு
  55. ஒரு தப்பு தாளம் ஒரு சரியான ராகம்
  56. ஒரு தீக்குச்சியின் வெளிச்சத்தில்!
  57. ஒரு தீப்பந்தம் தீபமாகிறது
  58. ஒரு துளி கடல்
  59. ஒரு நதி, ஒரு பௌர்ணமி, ஒரு பெண்
  60. ஒரு நாள் ஒரு கனவு
  61. ஒரு நிமிஷ நிசப்தம்
  62. ஒரு மேகத்தின் தாகம்
  63. ஒரு வியாழக்கிழமை விடிந்தபோது. . .
  64. ஒரு ஜனவரியின் ஞாயிற்றுக்கிழமை
  65. ஒன்பதாவது திசை பத்தாவது கிரகம்
  66. ஒன்று இரண்டு இறந்துவிடு!
  67. ஓடாதே! ஒளியாதே!
  68. கங்கை ஆறும் பாதை மாறும்!
  69. கடைசி எதிரி
  70. கடைசிச் சொட்டு இரத்தம்
  71. கண்ணிமைக்க நேரமில்லை
  72. கண்ணிலே நீர் எதற்கு?
  73. கண்ணுக்குள் எத்தனை கள்ளமடி
  74. கண்ணோடு கலந்துவிடு!
  75. கற்றது டைமண்ட் களவு
  76. கறுப்பு மல்லிகை
  77. கறுப்பு வானவில்; 1998; பாரதி பதிப்பகம், சென்னை 600 017.
  78. கறுப்பு ரத்தம்
  79. கனவின் விலை பத்து லட்சம்
  80. கனவுகள் இங்கே விற்கப்படும் (குங்குமச்சிமிழ், 1986-03-15)
  81. காகித புலிகள்
  82. காகிதப்பூ தேன்
  83. காதல் சாம்ராஜ்யம்
  84. காற்று உறங்கும் நேரம்
  85. கிரிமினல் யூனிவர்சிடி
  86. குட்மார்னிங் அமெரிக்கா!
  87. குற்றமும் கற்றுமற
  88. குற்றம் குற்றமே
  89. குறிஞ்சிப் பூக்கள்
  90. கூடவே ஒரு நிழல்
  91. கொலைகார கம்ப்யூட்டர்
  92. கொலை வள்ளல்
  93. கொன்றாலும் குற்றமில்லை
  94. கோகிலாவும் ஒரு கோடைகாலமும்
  95. கோவையில் ஒரு குற்றம்
  96. சத்தமில்லாமல்... ரத்தமில்லாமல்...
  97. சதுரங்க ராஜா
  98. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொல்
  99. சாம்ராஜ்ஜியம்
  100. சிகப்பு ரோஜக்கள்
  101. சித்தர்களா பித்தர்களா
  102. சிம்லா ரம்யா
  103. சிவப்பாய் ஒரு பௌர்னமி
  104. சிவப்பு தென்றல்!
  105. சொர்க்கம் என் கையில்
  106. டிசம்பர் இரவுகள்
  107. டைனமைட்
  108. டைனமைட் 98 (1000-ஆவது நாவல்), 2002 நவம்பர்
  109. தங்க சொர்க்கம்
  110. தங்க மச்சம்!
  111. தடுத்தால் கூட தருவேன்
  112. தப்பித்தே ஆக வேண்டும்
  113. தப்புத் தப்பாய் ஒரு தப்பு
  114. தப்பு + தப்பு = சரி!
  115. தலைநகரம்
  116. தவணைமுறையில் மரணம்
  117. திக் திக் திலகா
  118. திகில் திருவிழா!
  119. திகில் ரோஜா
  120. திசைதேடும் பறவை
  121. திலகா
  122. திறக்காத கதவுகள்!
  123. தீ தீபா தீபாவளி
  124. தீப்பந்தம் எடு! தீமையைச் சுடு!
  125. தீப்பிடித்த தென்றல்
  126. தீமையைச் சுடு
  127. தூங்காத கண் ஒன்று
  128. தூங்காத தோட்டாக்கள்!
  129. தூரத்து பொன்மான்
  130. தென்றல் வரும் ஜன்னல்
  131. தொட்டவனை விட்டதில்லை!
  132. நகராத நிழல்
  133. நந்தினி நாளை இறக்கிறாள்!
  134. நந்தினி 440 வோல்ட்
  135. நள்ளிரவு வானவில்
  136. நாலும் தெரிந்து கொல்!
  137. நாளைய தேசம்
  138. நான் நளினா நள்ளிரவு
  139. நித்தியத்தின் நிமிஷங்கள்
  140. நிலவுக்குள் இருட்டு!
  141. நில் கவனி கொல்
  142. நிழல்கள்
  143. நீ இன்றி நான் ஏது?
  144. நீலநிற நிமிஷங்கள்!
  145. நீலநிற நிழல்
  146. நீலம் என்பது நிறமல்ல
  147. நீலம் என்பது நிறமல்ல
  148. நெஞ்செல்லாம் நெருஞ்சிமுள்
  149. பம்பாய்க்கு பத்தாவது மைலில்
  150. பறப்பதற்கு ஒரு வானம் வேண்டும்
  151. பாதி ராஜ்ஜியம்
  152. பாலைவனப் பெளர்ணமி
  153. பாஸ்பரஸ் பூக்கள்
  154. புத்தம் புது பூமி வேண்டும்
  155. புனிதா ஒரு புதிர்
  156. பூவில் ஒரு சூறாவளி
  157. பூஜா புதுடெல்லி பூகம்பம்!
  158. பெண்ணால் முடியும்
  159. போகப் போகத் தெரியும்
  160. மஞ்சள் டயரி
  161. மரணம் சுலபம்
  162. மற்றவை நள்ளிரவுக்கு
  163. மனசெல்லாம் மாயா
  164. மன்னிக்காதே மறக்காதே
  165. மாண்டவன் கட்டளை
  166. மிஸ் தேவதை 1996
  167. மீண்டும் மீண்டும்
  168. மீண்டும் விவேக்கின் விஸ்வரூபம்
  169. முதல் நிமிஷம்
  170. முள் இல்லாத கடிகாரம்
  171. முள் கிரீடம்
  172. முள் நிலவு
  173. மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே!
  174. மெல்ல வரும் பூகம்பம்
  175. மெழுகுவர்த்திகள்
  176. மென்மையாய் ஒரு வன்முறை
  177. மேனகாவின் மே மாதம்
  178. யமுனாவின் மணி நேரம்
  179. யாரோ பார்க்கிறார்கள்; 1996; கலைமகளில் வெளிவந்த தொடர்
  180. ரத்தத்தில் ஒரு ராத்திரி
  181. ரத்தம் சிந்தும் ரோஜாக்கள்
  182. ரத்தம் தேடும் முகம்
  183. ரத்தமில்லா யுத்தம்
  184. ராணிக்கு செக்
  185. ராஜ ரகசியம்!
  186. ராஜாளி
  187. ரெட் அலர்ட்
  188. ரெட் ரோஸ்! கெஸ்ட் ஹவுஸ்!
  189. ரோசாப் பூவு லேசா சாவு
  190. வசந்த காலம்
  191. வணக்கத்துக்குறிய குற்றம்
  192. வளைவுகள் அபாயம்
  193. வாடகை தேவதை
  194. வாய்மையே கொல்லும்
  195. வானத்தில் கோலமிட்டு
  196. வானவில்லின் எட்டாவது நிறம்
  197. வானம் எங்கள் எல்லை
  198. விட்டு விடு விவேக்
  199. விடியாத இரவொன்று வேண்டும்
  200. விரைந்து வா, விவேக்!
  201. விலகு விபரீதம்
  202. விளக்கம் ப்ளிஸ் விவேக். . . (இரு பாகங்கள்)
  203. விவேக் அசோக் ராஜேஷ்
  204. விவேக் ரூபலா அதிரடி ஆட்டம்!
  205. விவேக் vs விவேக்
  206. விவேக் விஷ்ணு வெற்றி
  207. வினயா ஒரு விடுகதை
  208. வெண்ணிலவே விடை சொல்லு
  209. வெல்வெட் கனவுகள்
  210. வெல்வெட் கில்லர்
  211. வெல்வெட் குற்றம்
  212. வென்று வா விவேக்
  213. வேங்கை வெளியே வருது
  214. வைகறை நிழல்கள்
  215. ஜன்னல் நிலா
  216. ஜன்னல்கள் திறந்திருக்கின்றன
  217. ஜூப்ளி
  218. ஹாலோ டெட் மார்னிங்
  219. 100ஆவது பெளர்ணமி!
  220. A ஃபார் ஆப்பிள் M ஃபார் மர்டர்



மேற்கோள்கள்

[தொகு]
  1. Chakravarthy, Pritham (2008). The Blaft Anthology of Tamil Pulp Fiction. Chennai, India: Blaft Publications. p. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-906056-0-1. {{cite book}}: Cite has empty unknown parameters: |origmonth=, |month=, |chapterurl=, and |origdate= (help)
  2. Samanth Subramaniam (2008-09-07). "Meet Rajesh Kumar, Author of 1500 Novels". பார்க்கப்பட்ட நாள் 2008-09-11.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜேஷ்குமார்&oldid=3776472" இலிருந்து மீள்விக்கப்பட்டது