ராபா ஆறு

ஆள்கூறுகள்: 47°41′03″N 17°38′04″E / 47.68417°N 17.63444°E / 47.68417; 17.63444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரபா-ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ராபா
மொல்னசெக்சோடில் ராபா
அமைவு
Countriesஆஸ்திரியா மற்றும் அங்கேரி
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுஆஸ்திரியா ஆல்ப்ஸ் (டெய்ச்சால்ம்)
 ⁃ ஏற்றம்1,150 m (3,770 அடி)
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
டான்யூப் (மொஸொனி-டூனா கிளை), ஜியோர்
 ⁃ ஆள்கூறுகள்
47°41′03″N 17°38′04″E / 47.68417°N 17.63444°E / 47.68417; 17.63444
நீளம்298.2 km (185.3 mi)
வடிநில அளவு10,401 km2 (4,016 sq mi)
வெளியேற்றம் 
 ⁃ சராசரி18 m3/s (640 cu ft/s)
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுலாவ்னிட்சு, பின்கா, ஜியோன்ஜியோசு
 ⁃ வலதுமர்கால்
அலுவல் பெயர்ராபா பள்ளத்தாக்கு
தெரியப்பட்டது6 அக்டோபர் 2006
உசாவு எண்1645[1]
ரபா-ஆறு

ராபா ஆறு (ஜெர்மன்: ராப், ஹங்கேரியன்: ராபா; ஸ்லோவீன்: ராபா) தென்கிழக்கு ஆஸ்திரியா மற்றும் மேற்கு ஹங்கேரி வழியே ஓடும் ஒரு ஆறு. இது 298.2 கிமீ (185.3 மைல்) நீளம் கொண்டது, இதில் 100 கி.மீ ஆஸ்திரியாவில் உள்ளது.

புவியியல்[தொகு]

டான்யூப் ஆற்றின் வலது கிளை ஆறான இதன் தோற்றுவாய் ஆஸ்திரியாவில் ஹொய்போடென்ஹோஹ குன்றுக்குக் கீழே புருக் ஆன் டெர் மூர் நகரின் கிழக்கே சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது ஆஸ்திரிய மாநிலங்களான இசுடைரியா மற்றும் புர்கன்லாண்ட், மற்றும் ஹங்கேரிய மாவட்டங்களான வாஸ் மற்றும் ஜியோர்-மோஷோன்-சொப்ரோன் ஆகியவற்றின் வழியாகப் பாய்கிறது. இது வடமேற்கு ஹங்கேரியில் ஜியோர் நகரூடாகப் பாய்ந்து டான்யூப் (மொஸொனி-டூனா)விடம் சேர்கிறது. இதன் வடிநிலம் 10,401 km2 (4,016 sq mi) பரப்பளவைக் கொண்டது.[2] ராபாவின் வழியிலுள்ள நகரங்கள் கிளைஸ்டோர்ஃப், பெல்ட்பாக் (இரண்டுமே ஆஸ்திரியாவில் உள்ளது), மற்றும் செண்ட்கோட்டார்ட் மற்றும் கொர்மெண்ட் (ஹங்கேரி) ஆகியவை. புத்துயிர் ஊழிக்காலத்தின் முற்பகுதியில் இந்த ஆற்றின் ஓட்டம் எதிர்புறமாக இருந்தது. ஆனால் புவியொட்டின் ஏற்றம் இந்த ஆற்றின் ஓட்டத்தைத் தற்போதைய போக்குக்கு மாற்றிவிட்டது.

ராபா பள்ளத்தாக்கு[தொகு]

ராபா பள்ளத்தாக்கு பரந்த பகுதியான பிரெக்மூரியேவின் ஒரு பகுதியாக உள்ளது.[3] ராபா பள்ளத்தாக்கில் (Sln. Porabje, Hung Vendvidék) வாழும் ராபா ஸ்லோவீன்கள், மேற்குக் கோடியில் வாழும் ஹங்கேரியன் ஸ்லோவென்களின் குழுவாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rába valley". ராம்சர் Sites Information Service. பார்க்கப்பட்ட நாள் 25 May 2020.
  2. "Flächenverzeichnis der Flussgebiete: Leitha-, Rabnitz- und Raabgebiet" (PDF). Beiträge zur Hydrografie Österreichs Heft 63. December 2014. p. 137.
  3. "Slovenians in Hungary". Ministry of Foreign Affairs, Government of Slovenia. பார்க்கப்பட்ட நாள் 11 February 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபா_ஆறு&oldid=3508539" இலிருந்து மீள்விக்கப்பட்டது