ரஞ்சனா தேசாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஞ்சனா தேசாய்
பிறப்பு30 அக்டோபர் 1949 (1949-10-30) (அகவை 74)
வாழ்க்கைத்
துணை
பிரகாஷ் தேசாய்

நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார்.[1] 2011 செப்டம்பர் 13 முதல் 2014 அக்டோபர் 29ஆம் தேதி வரை இவர் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி உள்ளார். தற்போது மின்சார ஒழுங்குமுறை மற்றும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவராக உள்ளார். 2014 டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் இவருடைய பரிந்துரைக் கட்டண விகிதங்கள் அமலுக்கு வந்தன.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

30 அக்டோபர் 1949 ஆம் ஆண்டு பிறந்த ரஞ்சனா தேசாயின் தந்தை சம்ரோ சாமந்த் புகழ்பெற்ற குற்றவியல் வழக்கறிஞராவார். தாயார் சராயு மேற்கத்திய தத்துவவியலில் பட்டப்படிப்பை மும்பையின் வில்சன் கல்லூரியில் பயின்றவா். இவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர். ரஞ்சனா தேசாய் சுதந்திரமான சூழலில் வளர்க்கப்பட்டார். இவருக்கு மைக் பட்டாச்சார்யா எள்ற மகன் உள்ளார்.[2] பாலமோகன் வித்யாமந்திர் இருபாலர் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த ரஞ்சனா தேசாய் 1970 இல் எல்பின்ஸ்டன் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தை முடித்தார். பின்னர் 1973 மும்பை அரசு சட்ட கல்லூரியில் இளங்கலை சட்டக் கல்வியை முடித்தார்

நீதித்துறை வாழ்க்கை[தொகு]

ரஞ்சனா தேசாயின் தந்தை எஸ். சி. சாமந்த் பிரபலமான குற்றவியல் வழக்கறிஞர் ஆவார். 1973 ஜூலை 30 ஆம் தேதி நீதிபதி பிரதாப் அவர்களிடம் இளநிலை வழக்குரைஞராக தனது சட்டப் பணியை தொடங்கினார்.[3] 1979ஆம் ஆண்டு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட தேசாய் 1986 தடுப்புக்காவல் விவகாரங்களுக்கான அரசின் சிறப்பு பொது வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1996 ஏப்ரல் 15 ஆம் நாள் மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.[4] மின்சார ஒழுங்குமுறை மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக புது தில்லியில் பணியேற்ற இவருடைய பரிந்துரைகள் 2014 டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்ககு வந்தது.[5] இதற்கு முன் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக 1996 முதல் 2013 11 வரை பதவி வகித்தார் பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். [6] 2018 செப்டம்பர் 27 ஆம் தேதி எட்டு பேர் கொண்ட லோக்பால் அமைப்புக்கான தேடுதல் கமிட்டியின் தலைவராக ரஞ்சனா தேசாய் மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். [7][8]

குறிப்பிடத்தக்க தீர்ப்புகள்[தொகு]

2012 மே 8 ஆம் தேதி ரஞ்சனா தேசாய் மற்றும் நீதிபதி அல்தமஸ் கபீர் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு ஹஜ் பயனம் மேற்கொள்ள அரசு வழங்கும் மானியத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் நிறுத்த வேண்டும் என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கினர் .[9][10] 2013 செப்டம்பர் 27ஆம் தேதி நீதிபதிகள் ப. சதாசிவம் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் மற்றும் ரஞ்சன் கோகோய் ஆகிய மூன்று பேர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தேர்தலில் வேட்பாளர்களுக்கு கீழே இவர்களில் எவருமில்லை (None of The above)) என்ற தெரிவினை சேர்க்க உத்தரவிட்டனர் .இவர்கள் வழங்கிய தீர்ப்பை உடனடியாக அமல் படுத்துவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. [11][12] மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு குற்றப்பின்னணி இல்லாத தூய்மையான வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து நிறுத்த அரசியல் கட்சிகளை உந்தி வருகிறது. [13]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hon'ble Mrs. Justice Ranjana Prakash Desai". Supreme court of india official website. Supreme Court of India. பார்க்கப்பட்ட நாள் 26 November 2011.
  2. https://www.barandbench.com/columns/judges-journey-highest-court-justice-ranjana-prakash-desai
  3. "Appellate Tribunal For Electricity". aptel.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2017-09-14.
  4. "Chief Justice & Judges | Supreme Court of India". supremecourtofindia.nic.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-09-14.
  5. "Former Supreme Court Judge Justice Ranjana Desai took charge as chairperson of Appellate Tribunal for Electricity on December 1, 2014 in New Delhi. - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/home/Former-Supreme-Court-Judge-Justice-Ranjana-Desai-took-charge-as-chairperson-of-Appellate-Tribunal-for-Electricity-on-December-1-2014-in-New-Delhi-/articleshow/45413280.cms?. 
  6. Apoorva (2014-12-01). "Justice Ranjana Prakash Desai takes over as Aptel chairperson". www.livemint.com/. http://www.livemint.com/Companies/70a1ganiktjcmCZI61tX3M/Justice-Ranjana-Prakash-Desai-takes-over-as-Aptel-chairperso.html. 
  7. https://www.thehindubusinessline.com/news/search-committee-on-lokpal-to-recommend-names-to-sc-by-feb-end/article26013931.ece
  8. https://www.firstpost.com/india/centre-forms-eight-member-lokpal-commitee-headed-by-justice-ranjana-desai-arundhati-bhattacharya-isro-chief-among-members-5279141.html
  9. "SC strikes down Haj subsidy - Livemint". www.livemint.com. பார்க்கப்பட்ட நாள் 2018-09-24.
  10. "Supreme Court disapproves Haj subsidy, to be eliminated within 10 years". The Economic Times. 2012-05-08. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/supreme-court-disapproves-haj-subsidy-to-be-eliminated-within-10-years/articleshow/13047870.cms?from=mdr. 
  11. Jain, Bharti (27 September 2013). "Will implement voters' right to reject candidates straight away: Election Commission". Times of India. http://timesofindia.indiatimes.com/india/Will-implement-voters-right-to-reject-candidates-straight-away-Election-Commission/articleshow/23169193.cms. பார்த்த நாள்: 2013-09-27. 
  12. "Voters have right to reject, poll panel must give them option, says Supreme Court". Hindustan Times. 27 September 2013 இம் மூலத்தில் இருந்து 27 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130927071428/http://www.hindustantimes.com/specials/coverage/MyIndia-MyVote/Chunk-HT-UI-MyIndiaMyVote-TopStories/Voters-have-right-to-reject-poll-panel-must-give-them-option-says-Supreme-Court/SP-Article10-1127779.aspx. பார்த்த நாள்: 2013-09-27. 
  13. "Highlights of SC judgement giving voter the right to reject all candidates - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/india/Highlights-of-SC-judgement-giving-voter-the-right-to-reject-all-candidates/articleshow/23155676.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சனா_தேசாய்&oldid=2926840" இலிருந்து மீள்விக்கப்பட்டது