யாகோபசு காப்தேயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாகோபசு கார்னீலியசு காப்தேயன்
Jacobus Cornelius Kapteyn
யாகோபசு காப்தேயன், ஜான் வேத் அவர்களின் ஓவியம் (1921).
பிறப்பு(1851-01-19)சனவரி 19, 1851
பார்ன்வில்டு
இறப்புசூன் 18, 1922(1922-06-18) (அகவை 71)
ஆம்சுடர்டாம்
தேசியம்நெதர்லாந்து
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்உட்ரெச்ட் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுபால்வெளிச் சுழற்சிக்கான சான்றைக் கண்டுபிடித்தல்
விருதுகள்புரூசு பதக்கம் 1913
குரோனிங்கன் பேராசிரியான 40 ஆம் ஆண்டு நிகழ்வின்போது யாகோபசு காப்தேயன், (பின்னணியில் சர் டேவிட் ஜில்). இது ஜான் வேத்தின் ஓவியம்.

யாகோபசு கார்னீலியசு காப்தேயன் (Jacobus Cornelius Kapteyn) (ஜனவரி 19, 1851, பார்ன்வெல்டு, ஜெல்டெர்லாந்து - ஜூன் 18, 1922) ஒரு நெதர்லாந்து டச்சு வானியலாளர் ஆவார். இவர் பால்வெளி குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தியுள்ளார். இவர் பால்வெளிச் சுழற்சிக்கான சான்றைக் கண்டறிந்தார்.

வாழ்க்கை[தொகு]

காப்தேயன் பார்ன்வெல்டில் ஜெர்ட்டுக்கும் எலிசபெத்துக்கும் (கூமான்சு காப்தேயன் எனப்பட்டவர்) மகனாகப் பிறந்தார்.[1] [2] இவர் 1868 இல் உட்ரெச்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியலும் கணிதவியலும் கற்க சேர்ந்தார். இவர் 1875 இல் தன் ஆய்வுரையை முடித்த பிறகு, இலெய்டன் வான்காணகத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். பின்னர் குரோனிங்கன் பல்கலைக்கழகத்தில் வானியல், கோட்பாட்டு இயக்கவியல் துறையில் பேராசிரியரானார். இங்கு இவர் 1921 இல் ஓய்வு பெறும்வரை பணியாற்றினார். இவர் 1888 இல் நெதர்லாந்து அரசு கலை, அறிவியல் கல்விக்கழகத்தில் உறுப்பினர் ஆனார்.[3]

இவர் 1896 க்கும் 1900 க்கும் இடையில் வான்காணக உதவியின்றியே, டேவிட் ஜில் படம்பிடித்த ஒளிப்படத் தட்டுகளை ஆய்வு செய்து அளக்க தன்னார்வமாக முன்வந்தார். ஜில் தெற்கு அரைக்கோள விண்மீன்களின் ஒளிப்பட அளக்கையை நன்னம்பிக்கை முனை அரசு வான்காணகத்தில் நடத்திக் கொண்டிருந்தார். இந்தக் கூட்டாய்வு முடிவுகள் நன்னம்பிக்கைமுனை ஒளிப்பட ஆய்வு முடிவுகள் என வெளியிடப்பட்டன. இதில் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள 454,875 விண்மீன்களின் இருப்பும் பருமையும் பட்டியல் இடப்பட்டன.

இப்பணியின் பகுதியாக 1897 இல் இவர் காப்தேயன் விண்மீனைக் கண்டுபிடித்தார். இது 1916 இல் பர்னார்டு விண்மீன் கண்டுபிடிக்கும் வரை மற்ற எந்த விண்மீனையும் விட மிக உயர்ந்த இயக்கம் வாய்ந்ததாக அமைந்தது.

காப்தேயன் 1904 இல் விண்மீன்களின் இயல்பு இயக்ககத்தை ஆய்வு செய்து அவை அவர் சம காலத்தில் கருதியதைப் போல தம் போக்கில் கண்டபடி இயங்கவில்லை என அறிவித்தார்; மாறாக விண்மீன்களை ஏறக்குறைய எரெதிராக இயங்கும் இரண்டுவகை ஓடைகளாகப் பிரிக்கலாம் என்றார். ஆனால் நம் பால்வழி சுழல்வதை நிறுவும் முதல் சான்றாக காப்திகேயனின் தரவுகள் அமைந்தமை பின்னர் உணரப்பட்டது. இத்தரவுகள் அறுதியாக பெர்ட்டில் இலிண்ட்பிளாடும் ஜான் ஊர்த்தும் பால்வெளி சுழற்சியைக் கண்டுபிடிக்க வழிவகுத்தன.

வெவ்வேறு திசைகளில் இயங்கும் விண்மீன்களை எண்ணி பால்வழியில் அமையும்விண்மீன்களின் பரவலை அறியும் பேராய்வுத் திட்டம் ஒன்றை 1906 இல் தொடங்கினார். இத்திட்டம் விண்கோளத்தில் 206 வட்டாரங்களில் விண்மீன்களின் தோற்றப் பருமை, கதிர்நிரல்வகை, ஆர விரைவு, இயல்பு இயக்கம் ஆகிய அளபுருக்களைக் கண்டறிய முனைந்த்து. இப்பெருந்திட்டம் தான் வானியலில் ஒருங்கிணைத்த முதல் புள்ளியியல் பகுப்பாய்வு ஆக விளங்கியது. இப்பணிக்கு நாற்பது நோக்கீட்டகங்களின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது.

இவருக்கு 1913 இல் ஜேம்சு கிரைகு வாட்சன் பதக்கம் அளிக்கப்பட்டது. இவர் பின்னர் 1921 இல் தன் எழுபதாம் அகவையில் பணிவிடை பெற்றார் . ஆனாலும் இவர் தன் முன்னாள் மாணவராகிய இலெய்டன் நோக்கீட்டக இயக்குநரான வில்லெம் தெ சிட்டர் வேண்டிக்கொண்டதால் இலெய்டனுக்கு மீளவும் சென்று சம கால வானியல் செந்தரங்களுக்கு இயைவாக தம் உயர்த்த உதவினார்.

இவரது வாழ்நாள் பணியான, உடுக்கண அமைப்பின் இயக்கமும் கட்டமைப்பும் பற்றிய முதல் கோட்பாட்டு முயற்சி, எனும் ஆய்வுக் கட்டுரை 1922 இல் வெளியிடப்பட்டது. அதில் இவர் வில்லைவடிவ தீவுப் புடவியையும் விண்மீன்களின் அடர்த்தி ஆர வழியில் மையத்தில் இருந்து விளிம்புக்குச் செல்லும்போது குறைந்துகொண்டே போவதையும் அறிவித்தார். இது இப்போது காப்தேயன் புடவி என இவரது நினைவாக அழைக்கப்படுகிறது இவரது படிமத்தில் பால்வழி 40,000 ஒளியாண்டுகள் உருவளவு உள்ளதாகக் கருதப்பட்டது. சூரிய மையத்தில் இருந்து2,000 ஓளியாண்டுகள் தொலைவில் இருந்ததாக கருதப்பட்டது. இந்தப் படிம்ம் பால்வழியின் உயர்கிடைவரைகளில் பொருத்தமானதாகவும் பால்வழித் தளத்தில தவறானதாகவும் அமைந்தது. ஏனெனில் இதில் உடுக்கண ஊடக உட்கவர்தல், அப்போது அறயப்படாமையல் கருதப்படவில்லை.

காப்தேயன் ஆம்சுட்டர்டாமில் இறந்த பிறகே, இராபர்ட் டிரம்பிளர் உடுக்கண ஊடகம் சிவக்கும் அளவு கருதிய அளவினும் பெரியதாக உள்ளதைக் கண்டறிந்தார். இக்கண்டுபிடிப்பு பால்வழி உருவளவை to 100,000 ஒளியாண்டுகளாக உயர்த்தி, சூரிய பால்வழி மையத்தில் இருந்து 30,000 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளதாக மாற்றியது.

குரோனிங்கன் பல்கலைக்கழகத்தின் வானியல் துறை இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது. குரோனிங்கன் நகரத் தெருவொன்றும் இவரது நினைவாகக் காப்தேயன்லான் எனப் பெயரிடப்பட்டது. மேலும் கானரித் தீவில் உள்ள இலாபைமா அய்சக் நியூட்டன் குழுத் தொலைநோக்கிகளில் ஒன்றும் யாகோபசு காப்தேயன் தொலைநோக்கி என இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது .

இவர் மகள் என்றியேட்டா (1881-1956) எய்னார் எர்ட்சுபிரிங்கை மணந்து கொண்டார்.

தகைமைகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jacobus Cornelius Kapteyn
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

விருதுகள்

  • அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கம் (1902)
  • ஜேம்சு கிரைகு வாட்சன் பதக்கம்]] (1913)
  • புரூசு பதக்கம் (1913)


இவர் பெயர் இடப்பட்டவை

  • நிலாவில் உள்ள காப்தேயன் குழிப்பள்ளம்
  • சிறுகோள் 818 காப்தேயனியா
  • காப்தேயன் விண்மீன்
  • குரோனிங்கன் பல்கலைக்கழகத்தில் உள்ள காப்தேயன் வானியல் நிறுவனம்
  • கானரி தீவுகளில் ஒன்றான இலா பால்மாவில் உள்ள யாகோபசு காப்தேயன் தொலைநோக்கி (JKT)
  • காப்தேயன் திட்டம், பிதான் வானியல் திட்டம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Science+Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-31022-0. http://www.springerreference.com/docs/html/chapterdbid/58744.html. பார்த்த நாள்: August 22, 2012. 
  2. van der Kruit, Pieter (2015). Jacobus Cornelius Kapteyn, Born Investigator of the Heavens. Springer Science+Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-319-10876-6. http://dx.doi.org/10.1007/978-3-319-10876-6. 
  3. "Jacob Cornelius Kapteyn (1851 - 1922)". Royal Netherlands Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 22 July 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாகோபசு_காப்தேயன்&oldid=3358622" இலிருந்து மீள்விக்கப்பட்டது