மைசூர்

ஆள்கூறுகள்: 12°18′31″N 76°39′11″E / 12.30861°N 76.65306°E / 12.30861; 76.65306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைசூர்
ಮೈಸೂರು (கன்னடம்)
எருமையூர்
பெருநகரம்
மைசூரு
மேலிருந்து கடிகார திசையில்: மைசூர் அரண்மனை, சிவசமுத்திரம் அருவி, இன்ஃபோசிஸ் மல்டிபிளக்ஸ், மாண்டியாவில் பிருந்தாவன் தோட்டம், சோமநாதபுரம், லலித மகால், புனித பிலோமினா தேவாலயம் மற்றும் சாமுண்டீஸ்வரி கோயில்.
அடைபெயர்(கள்): பாரம்பரிய நகரம், அரண்மனைகளின் நகரம், கருநாடகத்தின் கலாச்சார தலைநகரம், சந்தன மர நகரம்,[1] மல்லிகை நகரம்
Map
Mysore City
ஆள்கூறுகள்: 12°18′31″N 76°39′11″E / 12.30861°N 76.65306°E / 12.30861; 76.65306
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம் கருநாடகம்
கோட்டம்மைசூர்
மாவட்டம்மைசூர்
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்மைசூர் மாநகராட்சி
 • மாநகர முதல்வர்சிவகுமார்[2] (பா.ச.க.)
 • துணை மாநகர முதல்வர்ஜி. ரூபா[2]
பரப்பளவு
 • பெருநகரம்112.81 km2 (110.5 sq mi)
 • நாட்டுப்புறம்703 km2 (271 sq mi)
 • Metro156 km2 (60 sq mi)
ஏற்றம்770 m (2,503 ft)
மக்கள்தொகை (2011)
 • பெருநகரம்9,20,550
 • அடர்த்தி8,200/km2 (8,300/sq mi)
 • நாட்டுப்புறம்3,88,706[3]
 • பெருநகர்10,60,120
இனங்கள்மைசூர்காரன்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+05:30)
அஞ்சல் குறியீட்டு எண்570 0xx
வாகனப் பதிவுKA-09, KA-55
தொலைபேசி குறியீடு91-(0)821-XXX-XXXX
UN/LOCODEIN MYQ MYS
அலுவல் மொழிகன்னடம்[4]
இணையதளம்www.mysurucity.mrc.gov.in

மைசூர், அல்லது எருமையூர், இந்தியாவிலுள்ள கருநாடகத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இது மைசூர் மாவட்டத்தின் மற்றும் மைசூர் கோட்டத்தின் நிர்வாக மையமாகும். மைசூர் நகரமே பண்டைய மைசூர் இராச்சியத்தின் தலைநகரமுமாகும். இங்கு கன்னடம் பரவலாக பேசப்பட்டாலும் தமிழ் பேசுவோரும் கணிசமாக குறிப்பிட்ட தக்க அளவில் உள்ளனர்.

சங்கநூல் குறிப்புகள்[தொகு]

எருமையூர், மையூர் என்னும் பெயர்களால் இவ்வூர் சங்ககாலத்தில் வழங்கப்பட்டு வந்தது. மைசூர் நாடு 'எருமை நன்னாடு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மையூர் கிழான் என்பவன் சேரவேந்தன் இளஞ்சேரல் இரும்பொறையின் அமைச்சனாக இருந்தவன். இந்தச் சேரவேந்தனின் தந்தை குட்டுவன் இரும்பொறைக்குப் பெண் கொடுத்தவன். வேளிர் குடியைச் சேர்ந்தவன். இளஞ்சேரல் இரும்பொறைக்குத் தாய்வழிப் பாட்டன். (பதிற்றுப்பத்து - ஒன்பதாம் பத்து - பதிகம்)

தலையாலங்கானம் என்னுமிடத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனை எதிர்த்துப் போரிட்ட எழுவர் கூட்டணியில் எருமையூரன் என்பவனும் ஒருவன். (அகநானூறு 36)

இக்கால மைசூர்[தொகு]

மைசூர் அரண்மனையும் பிருந்தாவன் தோட்டமும் மிகப் புகழ்பெற்றவையாகும். மைசூரில் ஒரு பெரிய அருங்காட்சியகமும் உள்ளது. மைசூர் மிருகக்காட்சிசாலை ஒரு புகழ்பெற்ற விலங்குக் காட்சிச்சாலை. இங்கு மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BEYER, BEVERLY; RABEY, ED (16 சூலை 1989). "Mysore Is 'Sandalwood City' of India". Los Angeles Times. Archived from the original on 5 பெப்பிரவரி 2011.
  2. 2.0 2.1 "BJP Bags Mayoral Posts". 6 செப்டெம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 6 செப்டெம்பர் 2022.
  3. "Census 2011 data" (PDF). பார்க்கப்பட்ட நாள் 25 சூலை 2023.
  4. THE KARNATAKA LOCAL AUTHORITIES (OFFICIAL LANGUAGE) ACT, 1981 https://indiacode.nic.in/bitstream/123456789/7897/1/30_of_1981_%28e%29.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசூர்&oldid=3931520" இலிருந்து மீள்விக்கப்பட்டது