மேதா பட்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேதா பட்கர்

மேதா பட்கர்
இயக்கம்: நர்மதா பச்சாவோ அந்தோளன்
முக்கிய அமைப்புகள்: மக்களின் இயக்கங்களின் நாடளாவிய பிணைப்பு
National Alliance of People's Movements(NAPM)

மேதா பட்கர் (Medha Patkar,मेधा पाटकर, திசம்பர் 1, 1954) இந்தியாவில் பரவலாக அறிந்த சமூக உரிமைப் போராளி. குசராத் மாநிலத்தில் உள்ள நர்மதா ஆற்றில் கட்டப்படும் சர்தார் சரோவர் அணை கட்டுவதற்கு எதிராக மக்கள் சார்பாக உரிமைக்குரல் நிறுவனமான நர்மதா பச்சாவோ அந்தோளன் என்னும் அமைப்பால் நன்கு அறியப்பட்டவர்.

வாழ்க்கையும் பின்புலமும்[தொகு]

மேதா பட்கர் இந்தியாவில் மும்பையில் வசந்த் கனோல்க்கர் என்னும் தொழிலாளர் தலைவருக்கும், இந்து கனோல்க்கருக்கும் மகளாகப் பிறந்தார்[1] இவர் அரசியலிலும் குமுகவியலிலும் உரிமைக்கான உணர்வுடைய பெற்றோர்களால் வளர்க்கப்பட்டார். இவருடைய தந்தையார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டவர். இவருடைய தாயார், பொருளாதாரத்திலும், கல்வி, உடல்நலம் முதலியவற்றிலும் நலிவுற்ற பெண்களுக்கு உதவும் சுவதார் (Swadar) என்னும் நிறுவனத்தில் உறுப்பினராக இருந்தார். இவருடைய பெற்றோர்களின் விழிப்புணர்வும் தொண்டும் இவருடைய கொள்கைகள் கருத்துகளை செதுக்கின[2].

இவர் டாட்டா குமுக அறிவியல் கழகத்தில் (Tata Institute of Social Sciences, TISS) குமுகப் பணியியலில் (Social work) முதுநிலை பட்டம் பெற்றார். இவர் திருமணமானவர்[3]

தொழிற்பணி[தொகு]

முதுநிலை பட்டம் பெற்ற பின்னர் இவர் ஏழு ஆண்டுகளாக தன்னார்வலர் நிறுவனங்களில் பணியாற்றினார்.

பரிசுகளும் பெருமைகளும்[தொகு]

மேதா பட்கர் 1991 ஆம் ஆண்டுக்கான ரைட் லைவ்லிஃகூடு பரிசு (Right Livelihood Award) பெற்றார். 1999 ஆம் ஆண்டு விச்யில் இந்தியா இயக்கம் (Vigil India Movement) நிறுவனத்தின் எம். ஏ. தாமசு மனித உரிமைப் பரிசு (M.A.Thomas National Human Rights Award) பெற்றார். இவை தவிர பற்பல பரிசுகளும் பெருமைகளும் பெற்றுள்ளார். அவற்றுள் தீனா நாத் மங்கேழ்ச்கர் பரிசு (Deena Nath Mangeshkar Award), மகாத்மா பூலே பரிசு (Mahatma Phule Award), 1992இல் கோல்டுமன் சூழல்நலப் பரிசு (Goldman Environment Prize), பிபிசியின் (BBC) மிகச்சிறந்த அனைத்துலக அரசியல் பரப்புரையாளருக்கான பச்சை நாடா பரிசு (கிரீன் ரிப்பன் அவார்டு Green Ribbon Award), பன்னாட்டு மன்னிப்பு அவையின் மனித உரிமைக் காப்பாளர் பரிசு (Human Rights Defender's Award) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவர் அணைகளுக்கான உலக ஆணையம் (World Commission on Dams) என்பதன் ஆணையர். ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக வடகிழக்கு மும்பைத் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் (2014) போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்தார். பின்னர் 2015ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 28 ஆம் தேதியில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறினார்.

உசாத்துணை[தொகு]

  1. http://timesofindia.indiatimes.com/articleshow/msid-1495320,prtpage-1.cms
  2. "Medha Patkar: Biography" (PDF). Women in World History. http://www.womeninworldhistory.com/imow-Patkar.pdf. பார்த்த நாள்: 2008-02-10. 
  3. A mother speaks:I worry for her but I know Medha is right from Times Of India

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேதா_பட்கர்&oldid=3351461" இலிருந்து மீள்விக்கப்பட்டது