மீரா தத்தா குப்தா
மீரா தத்தா குப்தா | |
---|---|
பிறப்பு | 5 அக்டோபர் 1907 டாக்கா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா தற்போதைய வங்காளதேசம் |
இறப்பு | 18 சனவரி 1983 (வயது 76) கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | பெதுன் கல்லூரி |
பணி | கல்வியாளர், அரசியல்வாதி |
மீரா தத்தா குப்தா (Mira Datta Gupta) ( வங்காள மொழி: মীরা দত্ত গুপ্ত ) (5 அக்டோபர் 1907 - 18 சனவரி 1983) ஓர் சுதந்திர போராட்ட வீரரும், சமூக சேவகரும், கல்வியாளரும், அரசியல்வாதியும், கொல்கத்தாவில் பெண்கள் பிரச்சனைக்கான ஆர்வலரும் ஆவார். இவர் 1937 முதல் 1957 வரை இருபது ஆண்டுகள் வங்காளத்திலும் பின்னர் மேற்கு வங்காளத்திலும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். முதலில் 1937 முதல் 1952 வரை மகளிர் தொகுதியையும், பின்னர் 1952 முதல் 1957 வரை பவானிபூரையும் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் பவானிப்பூரின் முதல் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1]
பின்னணி
[தொகு]இவர், இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை அதிகாரியான சரத் தத்தா குப்தா, இந்தியத் தலைமைக் கணக்காளர் ( ஓய்வு ) என்பவருக்கும், ஜெய்ப்பூர் மாநிலத்தின் இரயில்வே நிதியின் முகவர் சரஜுபாலா தத்தா குப்தா (என்கிற சென்) என்பவருக்கும் மகளாகப் பிறந்தார். வர் அக்டோபர் 5 அன்று டாக்காவில் உள்ள தாய்வழி தாத்தா பாட்டி வீட்டில் பிறந்தார். இவரது தந்தைவழி மூதாதையர்கள் டாக்கா மாவட்டத்தின் ஜெயின்ஷார் கிராமத்தின் தர்பாஷா பகுதியில் கணிசமான நிலங்களை வைத்திருந்தனர். இந்த குடும்பம் 1947 இல் வங்காளத்தின் இரண்டாவது பிரிவினை வரை இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து குடும்பத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் கொல்கத்தாவில் வாழ்ந்து வேலை செய்ததால், இவரது தந்தைவழி உறவினர்கள் பிரிவினையால் கணிசமாக பாதிக்கப்படவில்லை. கொல்கத்தாவில், ஹஸ்ரா சாலையில் 41 வயதில் தனது பெற்றோருடன் வாழ்ந்தார்.
மேற்கு வங்க அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த (1972-77) சாந்தி தாஸ்குப்தா இவரது மருமகன். வரலாற்றாசிரியரான பருண் டே ஒரு மருமகன். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் மேற்கு வங்காள முன்னாள் தலைமை செயலாளரருமான அர்தெந்து சென், இவருடைய உறவினர் ஆவார்.
கல்வி
[தொகு]இவர் கொகல்கத்தாவின் புனித ஜான்ஸ் மறைமாவட்டப் பள்ளியிலும், கொல்கத்தாவின் பெதுன் கல்லூரியின் மாணவியாவார். இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் தனது முதுநிலையை முடித்தார். 1930 இல் நடந்த தேர்வில் முதல் வகுப்பில் இரண்டாமிடம் பெற்றார்.
இவருடைய பெற்றோர் தேசபக்தி உணர்வுகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். மேலும் இவர் வளர்ந்து வரும் போது இவரும் இந்த யோசனைகளை உள்வாங்கினார். இவருடைய தந்தை ஒரு மூத்த அரசாங்க அதிகாரி என்பதால், இவர் நீண்ட காலமாக ஒரு புரட்சிகர தொழிலாளி என்று காவல் துறையினர் சந்தேகிக்கவில்லை. ஹஸ்ரா சாலையில் உள்ள இவரது குடும்ப வீட்டில் புரட்சிகர கட்சி ஊழியர்களுக்கான ஆவணங்களையும் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் கூட இவர் ரகசியமாக வைத்திருந்தார். 1946 கொல்கத்தா கலவரத்தின் போது இவர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மற்றும் இந்துகளுக்கு அடைக்கலம் கொடுத்தார். இந்த முயற்சியில் இவரது பெற்றோர்கள் உட்பட இவருடைய குடும்ப உறுப்பினர்களின் தீவிர ஆதரவைக் கொண்டிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில், இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்தார். ஆனால் பின்னர் கட்சியின் நடவடிக்கையால் ஏமாற்றமடைந்தார். பின்னர், இவர் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியில் சேர்ந்தார்.
இவர் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள பல முக்கிய பெண்கள் அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ஆவார். அகில இந்திய மகளிர் மாநாடு மற்றும் அனைத்து வங்காள பெண்கள் சங்கத்தின் நிறுவனர் உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்தார்.
இறப்பு
[தொகு]இவர் 18 சனவரி 1983 அன்று தனது 76 வயதில் [[நுரையீரல் அழற்சி|நுரையீரல் அழற்சியால் இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Key Highlights of General Elections 1951 to the Legislative Assembly of West Bengal பரணிடப்பட்டது 30 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்