மார்த்தா பி. கேனசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரா. மார்த்தா பி. கேனசு
Prof. Martha P. Haynes
மார்த்தா கேனசு
பிறப்புமார்த்தா பாத்ரீசியா கேனசு
1 சனவரி 1951 (1951-01-01) (அகவை 73)
போசுடன், மசாசூசட், ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைவானியற்பியல்
கல்வி கற்ற இடங்கள்வெல்லெசுலி (இளமறிவியல்), இந்தியானா (முனைவர்)
ஆய்வு நெறியாளர்மார்ட்டன் இராபர்ட்சு
அறியப்படுவதுகதிர் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி புடவியின் படம் வரைதல்
விருதுகள்என்றி டிரேப்பர் பதக்கம் (1989)

மார்த்தா பாத்ரீசியா கேனசு (Martha Patricia Haynes) (பிறப்பு 1951) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் கதிர்வானியலிலும் புறப்பால்வெளி வானியலிலும் சிறப்பு புலமையாளர் ஆவார். இவர் 1989 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதைக் கதிர்தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி புடவியில் உள்ல பால்வெளிகளின் பரவலைப் படம் வரைந்ததற்காக இரிக்கார்டோ ஜியோவனெல்லியுடன் இணைந்து பெற்றார். இவர் கார்னெல் ப்ல்கலைக்கழகத்தில் வானியலில் கோல்டுவின் சுமித் பேராசிரியராக உள்ளார்.[1] இவர் அமெரிக்காவிலும் பன்னாட்டு வானியல் குமுகங்களிலும் பல உயர்மட்டக் குழுக்களில் பணிபுரிந்துள்ளார். இதில் தேசியக் கல்விக்கழகங்களின் பொறியியல், புறநிலை அறிவியல் பிரிவின் அறிவுரைக் குழுவும் (2003-2008)வானியல், வானியற்பியல் பத்தாண்டு மீள்பார்வைக் குழுவும் அடங்கும் ( 2010 இல்). இவர் 2006 முதல் 2012 வரையில் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் செயற்குழுவின் துணைத்தலைவராக இருந்துள்ளார்.[2] இவர் 1994 இல் இருந்து கூட்டுப் பல்கலைக்கழகங்களின் நிறுவனத்தில் அறக்கட்டளையாளர் குழுமத்திலும் இருந்து வருகிறார்.

கல்வி வாழ்க்கை[தொகு]

கேனசு வெல்லெசுலி கல்லூரிய்ல் இயற்பியலிலும் வானியலிலும் இளங்கலைப் பட்ட்த்தை 1973 இல் பெற்றார். இவர் முதுவர் பட்டப் படிப்புக்காக இந்தியானா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்ரிவர் இங்கு 1975 இல் முதுவர் பட்டமும் 1978 இல் முனைவர் பட்டமும் பெற்றார். இவர் 1978 முதல் 1981 வரையில் தேசிய வானியல் மின்னணு மண்டல மையத்தில் பணிசெய்தார். பின்னர், இவர் கிரீன் வங்கித் தொலைநோக்கியின் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். இவர் 1983 இல் கார்னெல் பலகலைக்கழகத்தின் புலவுறுப்பினராகச் சேர்ந்தார்.[3] இவரும் இரிக்கார்டோ ஜியோவனெல்லியும் கட்புல புடவியின் பேரளவு படலக் கட்டமைப்பின் முப்பருமானக் காட்சியை முதலில் உருவாக்கியமைக்காக என்றி டிரேப்பர் பதக்கத்தைப் 1989 இல் பெற்றனர்.[4] இவர் 1999 இல் அமெரிக்கக் கலை, அறிவியல் கல்விக்கழகத்துக்கும் 2000 இல் தேசிய அறிவியல் மன்றத்துக்கும் தேர்வு செய்யப்பட்டார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

கேனசு நெடுங்காலத்துக்குத் தன்னோடு பணிபுரிந்த இரிக்கார்டோ ஜியோவனெல்லியை மணந்துகொண்டார். இருவரும் இப்போது நியூயார்க்கில் உள்ள இதாக்காவில் வாழ்ந்துவருகின்றனர்.

தேர்ந்தெடுத்த வெளியீடுகள்[தொகு]

  • Haynes, M. P., and R. Giovanelli. "Large-Scale Structure in the Local Universe: The Pisces-Perseus Supercluster." In Large-Scale Motions in the Universe, V. C. Rubin and G. F. Coyne, eds. (Princeton: Princeton University Press, 1988), 45.
  • Haynes, M. P. "Evidence for Gas Deficiency in Cluster Galaxies." In Clusters of Galaxies, W. R. Oegerle, M. J. Fitchett, and L. Danly, eds. (New York: Cambridge University Press, 1990), 177.
  • Vogt, N. P., T. Herter, M. P. Haynes, and S. Courteau. "The Rotation Curves of Galaxies at Intermediate Redshift." Astrophys. J. Lett. 415 (1993).
  • Roberts, M. S., and M. P. Haynes. "Variation of Physical Properties along the Hubble Sequence." Annu. Rev. Astron. Astrophys. 32, 115 (1994).
  • Haynes, M. P., and A. H. Broeils. "Cool HI Disks in Galaxies." In Gas Disks in Galaxies, J. M. van der Hulst, ed. (New York: Springer-Verlag, 1995), to appear.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Cornell University Staff Pages Retrieved on 2009-03-08.
  2. [1] Retrieved on 2012-10-19.
  3. "Vita Martha Patricia Haynes" (PDF). பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
  4. NAS Henry Draper Medal பரணிடப்பட்டது 2013-01-26 at the வந்தவழி இயந்திரம் Retrieved on 2009-03-08.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்த்தா_பி._கேனசு&oldid=2720689" இலிருந்து மீள்விக்கப்பட்டது