மார்ட்டின் சுவார்சுசைல்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்ட்டின் சுவார்சுசைல்டு
Martin Schwarzschild
பிறப்பு(1912-05-31)மே 31, 1912
போட்சுடாம், செருமனி
இறப்புஏப்ரல் 10, 1997(1997-04-10) (அகவை 84)
இலாங்கார்னே, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைஇயற்பியல்
வானியல்
பணியிடங்கள்பிரின்சுடன் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்வானியற்பியல் நிறுவனம் ( Institut für Astrophysik Göttingen)
அறியப்படுவதுபால்வெளிக் கட்டமைப்பு, பால்வெளிப் படிமலர்ச்சி
விருதுகள்கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம் (1959)
என்றி டிரேப்பர் பதக்கம் (1960)
புரூசு பதக்கம் (1965)
பிரவுவேர் விருது (1992)
பல்சான் பரிசு (1994)
தேசிய அறிவியல் பதக்கம் (1997)
அரசு கழக உறுப்பினர்[1]

மார்ட்டின் சுவார்சுசைல்டு (Martin Schwarzschild, மே 31, 1912 – ஏப்ரல் 10, 1997) ஒரு செருமானிய அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் செருமானிய இயற்பியலாளர் கார்ல் சுவார்சுசைல்டு அவர்களின் மகன் ஆவார். இவர் சுவீடிய வானியற்பியலாளர் இராபர்ட் எம்டன் அவர்களின் ஒன்றுவிட்ட உடன்பிறப்பு ஆவார்.

வாழ்க்கை[தொகு]

இவர் 1947 இல் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் தன் வாழ்நாள் நண்பராகிய இலைமன் சுபிட்சர் அவர்களுடன் இணைந்தார்.சுபிட்சர் இவருக்குப் பத்து நாட்களுக்கு முன்பு இறந்தார். 1950 களிலும் 1960 களிலும் வளிமண்டல அடுக்குக் கோளப்பதிவுத் திட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். இவற்றில் பதிவுக் கருவிகள் முன்பு என்றும் இராத உயரங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. 1980 களில் மூவச்சு பால்வெளிகளின்படிமங்களை உருவாக்க தன் எண்ணியல் திறமைகளைப் பயன்படுத்தினார்.[2] பிரின்சுடன் பல்கலைக்கழகத்தின் வானியலுக்கான யூகின் இக்கின்சு தகைமைப் பேராசிரியர் ஆவார். இவர் தன் தொழில்முறை வாழ்வு முழுவதும் இங்கேயே கழித்தார்.[3]

தகைமைகள்[தொகு]

விருதுகள்[தொகு]

இவரது பெயர் இடப்பட்டவை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Leon Mestel (1999). "Martin Schwarzschild. 31 May 1912 -- 10 April 1997: Elected For.Mem.R.S. 1996". Biographical Memoirs of Fellows of the Royal Society 45: 469. doi:10.1098/rsbm.1999.0031. 
  2. Jeremiah P. Ostriker (1997). "Obituary: Martin Schwarzschild (1912-97)". Nature 388 (6641): 430. doi:10.1038/41230. Bibcode: 1997Natur.388..430.. 
  3. DAVID M. HERSZENHORN (April 12, 1997). "Martin Schwarzschild, 84, Innovative Astronomer". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 2010-07-24.
  4. "Grants, Prizes and Awards". American Astronomical Society. Archived from the original on 22 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Henry Draper Medal". National Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
  6. "Past Winners of the Catherine Wolfe Bruce Gold Medal". Astronomical Society of the Pacific. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
  7. "Winners of the Gold Medal of the Royal Astronomical Society". Royal Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.

வெளி இணைப்புகள்[தொகு]