மார்க் சக்கர்பெர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்க் சக்கர்பெர்க்
மார்க் சக்கர்பெர்க்
பிறப்புமார்க் எலியட் சுக்கர்பெர்க்
மே 14, 1984 (1984-05-14) (அகவை 39)
ஒயிட் பிளைன்ஸ், நியூயார்க்
இருப்பிடம்பாலோ ஆல்டோ, கலிபோர்னியா
தேசியம்அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஹார்வர்ட் கல்லூரி (2004 இடையில் வெளியேறினார்)
பணிஇணை-நிறுவனர், முதன்மை செயல் அதிகாரி & தலைவர் ஃபேஸ்புக்
செயற்பாட்டுக்
காலம்
2004–தற்போதுவரை
அறியப்படுவதுமுகநூலின் இணை நிறுவனர்; இளவயது பில்லினியர்
சொந்த ஊர்டாப்சு பெரி, நியூயார்க்
சொத்து மதிப்பு US$6.9 billion (2010)[1]
உறவினர்கள்ராண்டி சுக்கர்பெர்க் (தமக்கை)
விருதுகள்டைம் பத்திரிக்கை
 
துறைகணினியியல்[2]
குறிப்புகள்
வலைத்தளம்
Facebook.com/MarkZuckerberg

மார்க் எலியட் சுக்கர்பெர்க் (ஆங்கில மொழி: Mark Elliot Zuckerberg, பிறப்பு: மே 14, 1984) ஒரு அமெரிக்கத் தொழில் முனைவர் ஆவார். இவர் பிரபல சமூக பிணைப்பு வலைத்தளமான ஃபேஸ்புக்கின் இணை-நிறுவனர் ஆவார். சுக்கர்பெர்க் ஹார்வெர்டில் கல்வி பயின்று கொண்டிருக்கும் போது அவருடைய சக வகுப்புத்தோழர்களான டஸ்டின் மோஸ்கொவிட்ச், எடர்டோ சவெரின் மற்றும் கிரிஸ் ஹக்ஸ் ஆகியோருடன் இணைந்து ஃபேஸ்புக்கை உருவாக்கினார். சுக்கர்பெர்க் ஃபேஸ்புக்கின் CEOவாக பணியாற்றுகிறார்.[3] அவர் தொழில் துவங்கியதைப் பற்றிய சச்சரவுகளின் பொருளாக அவர் உள்ளார்.[4]

2008 ஆம் ஆண்டில் டைம் பத்திரிகை உலகில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவராக சுக்கர்பெர்க்கை சேர்த்தது. அவரது வலைத்தளத் தோற்றப்பாடு, பேஸ்புக் ஆகியவற்றிற்காக அறிவியலர்கள் & சிந்தனையாளர்களின் கீழ் வரும் 101 மனிதர்களுள்[5] 52வதாகத் தரவரிசைப் படுத்தப்படுகிறார். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்இருந்து ஒரு பில்லியன் டாலர்களைக் காட்டிலும் அதிகமான மதிப்புடன் சுக்கர்பெர்க் இளம் தொழிலதிபராக இருக்கிறார்.[6]

மார்க் சுக்கர்பெர்க் "உலக வாழ்க்கையை புதுவிதமாகவும் நேர்மறை எதிர்பார்ப்புகளுடனும் வாழுமாறு மாற்றியமைக்காக" டைம் இதழின் 2010ஆம் ஆண்டிற்கான நபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[7]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

நியூயார்க்கில் உள்ள ஒயிட் பிளைன்ஸில் சுக்கர்பெர்க் பிறந்தார். நியூயார்க்கில் உள்ள டாப்ஸ் பெர்ரியில் வளர்ந்தார். அவர் நடுநிலைப்பள்ளியில் இருந்த போதே நிரலாக்கம் செய்யத்தொடங்கினார். தொடக்கத்தில் சுக்கர்பெர்க் கணினி நிரல்களை உருவாக்குவதில் மகிழ்ச்சி கொண்டிருந்தார். குறிப்பாக தகவல் தொடர்புக் கருவிகள் மற்றும் விளையாட்டுகள் நிரலாக்கங்களில் ஆர்வமாய் இருந்தார். பிலிப்ஸ் எக்ஸெட்டர் அகாடமியில் சேர்வதற்கு முன்பு அர்ட்ஸ்லே உயர்நிலைப்பள்ளிக்கு மார்க் சென்று கொண்டிருந்தார். “உயர்நிலைப் பள்ளியில் அவர் இலக்கியங்களில் சிறந்து விளங்கினார். அவர் பிலிப்ஸ் எக்ஸ்டெர் அகாடமிக்கு இடம் மாறிச்சென்றார். அங்கு லத்தினில் தன்னை முழுக்க ஆட்படுத்திக் கொண்டார்.[8][8] அவரது தந்தையின் அலுவலகத்தில் பணியாளர்களைத் தொடர்பு கொள்வதற்கு உதவியாக ஒரு நிரலையும் அவர் உருவாக்கினார்; அவர் ரிஸ்க் என்ற விளையாட்டின் பதிப்பையும் உருவாக்கினார். மேலும் சினாப்சிஸ் என்ற இசை இயக்கியையும் உருவாக்கினார். பயனர்களின் கேட்கும் பழக்கங்களைக் கற்பதற்கு செயற்கை நுண்ணறிவில் இது பயன்படுத்தப்பட்டது. மைக்ரோசாஃப்ட் மற்றும் AOL ஆகிய நிறுவனங்கள் சினாப்சிஸை வாங்கி சுக்கர்பெர்க்கை பணியமர்த்த முயற்சித்தது. ஆனால் அவர் அதற்குப் பதிலாக ஹார்வெர்டு பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு முடிவெடுத்தார். அங்கு அவர் ஆல்ஃபா எப்சிலிலோன் பீ என்ற அதன் துணைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.[9] கல்லூரியில் த இல்லியாட் போன்ற வீரகாவியங்களில் இருந்து ஒப்புவிக்கும் வரிகளுக்காக அறியப்பட்டார்.[8]

ஃபேஸ்புக்[தொகு]

2008 இல் ராபர்ட் ஸ்கோபிலுடன் சுக்கர்பெர்க் (வலது).

நிறுவுதல்[தொகு]

பிப்ரவரி 4, 2004 அன்று சுக்கர்பெர்க் அவரது ஹார்வர்டு ஓய்வறையில் இருந்து ஃபேஸ்புக்கை நிறுவினார். பிலிப்ஸ் எக்ஸ்டெர் அகாடமியில் அவரது நாட்களில் இருந்து ஃபேஸ்புக்கின் யோசனை அவருக்கு உதித்துள்ளது. பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் தனியார் பள்ளிகள் போன்று அங்கும் அனைத்து மாணவர்கள், பணியார்கள் மற்றும் ஆசிரியர்களை உடைய குழுப் புகைப்படங்களைக் கொண்டு ஆண்டுமலர் புத்தகத்தை வெளியிடும் நீண்ட-கால மரபுடைய வழக்கம் இருந்தது. அது "ஃபேஸ்புக்" என அறியப்பட்டிருந்தது. கல்லூரியில் ஒருமுறை சுக்கர்பெர்க்கின் ஃபேஸ்புக்கானது "ஹார்வர்டு-நினைவு" என்ற போக்கிலேயே தொடங்கியது. பின்னர் சுக்கர்பெர்க் ஃபேஸ்புக்கை மற்ற பள்ளிகளுக்கும் பரப்புவதற்கு முடிவெடுத்தார். இதை அவரது அறைத் தோழர் டஸ்டின் மோஸ்கோவிட்ச் உதவியுடன் செய்தும் முடித்தார். ஸ்டார்போர்டு, டார்ட்மவுத், கொலம்பியா, கார்னெல் மற்றும் யால் ஆகிய பள்ளிகளில் முதலில் ஃபேஸ்புக்கை அறிமுகப்படுத்தினார். மேலும் பின்னர் ஹார்வர்ட்டின் சமுதாய இணைப்புடன் மற்ற பள்ளிகளுக்கும் அறிமுகப்படுத்தினார்.[10][11][12]

கலிபோர்னியாவுக்கு இடம்பெயர்தல்[தொகு]

மோஸ்கோவிட்ச் மற்றும் சில நண்பர்களுடன் சுக்கர்பெர்க் கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவிற்கு இடம்பெயர்ந்தார். அங்கு அவர்கள் ஒரு சிறிய இல்லத்தை குத்தகைக்கு எடுத்து அவர்களது முதல் அலுவலகமாக மாற்றினர். அந்தக் கோடைகாலத்தில் அந்த நிறுவனத்திற்கு முதலீடு செய்த பீட்டர் தீலை சுக்கர்பெர்க் சந்தித்தார். 2004 ஆம் ஆண்டு கோடைகாலத்தின் போது அவர்களுக்கு அவர்களது முதல் அலுவலகம் கிடைத்தது. சுக்கர்பெர்க்கைப் பொறுத்தவரை இலையுதிர் காலத்தில் அந்தக் குழுவினர் ஹார்வெர்டுக்குத் திரும்புவதற்கு முடிவெடுத்திருந்தனர். ஆனால் கடைசியாக அவர்கள் கலிபோர்னியாவிலேயே தங்கி விட்டனர். அதன் பிறகு அவர் மாணவராகக் கல்லூரிக்குத் திரும்பவே இல்லை.

நியூஸ் பீடு[தொகு]

செப்டம்பர் 5, 2006 அன்று ஃபேஸ்புக் நியூஸ் பீடு அறிமுகமானது. நியூஸ் பீடு என்பது வலைத்தளத்தில் உங்களது நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் காண்பிக்கும் ஒரு தயாரிப்பு ஆகும். நியூஸ் பீடை தேவையற்றதாக சிலர்[weasel words] பார்த்ததற்காகவும் சைபர்ஸ்டால்கிங்கிற்கான கருவிக்காகவும் சுக்கர்பெர்க் விமர்சிக்கப்பட்டார்.

ஃபேஸ்புக் இயங்குதளம்[தொகு]

மே 24, 2007 அன்று ஃபேஸ்புக் இயங்குதளத்தை சுக்கர்பெர்க் அறிவித்தார். இது ஃபேஸ்புக்கினுள் ஒரு சமுதாயப் பயன்பாடுகளை உருவாக்குவதற்கு நிரலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இயங்குதளம் ஆகும். இந்த அறிவிப்பானது உருவாக்குனர் சமூகத்தில் ஆர்வத்தீயை ஏற்படுத்தியது. ஒரு சில வாரங்களில் பல பயன்பாடுகள் உருவாக்கப்பட்டன. அதில் சிலவற்றை ஏற்கனவே இலட்சக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இன்று உலகம் முழுவதும் 800,000 ஐக் காட்டிலும் அதிகமான உருவாக்குனர்கள் ஃபேஸ்புக் இயங்குதளத்திற்கான பயன்பாடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஜூலை 23, 2008 அன்று ஃபேஸ்புக் கனெக்ட்டை சுக்கர்பெர்க் அறிவித்தார். இது பயனர்களுக்கான ஃபேஸ்புக் இயங்குதளத்தின் ஒரு பதிப்பாகும்.

பேஸ்புக் பீகான்[தொகு]

நவம்பர் 6, 2007 அன்று லாஸ் ஏஞ்சலில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு புதிய சமுதாய விளம்பர அமைப்பை சுக்கர்பெர்க் அறிவித்தார். இந்தப் புதிய நிரலின் ஒரு பகுதி பீகான் எனப்பட்டது. இது மக்களை பிற வலைத்தளங்களில் உலாவி நடவடிக்கைகளைச் சார்ந்து அவர்களது ஃபேஸ்புக் நண்பர்களுக்கு தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு இடமளித்தது. எடுத்துக்காட்டாக ஈபே விற்பனையாளர் இருந்தது. இதன் மூலம் ஃபேஸ்புக் நியூஸ் பீடின் வழியாக பயனர்களின் நண்பர்கள் பட்டியலிட்ட பொருள்களில் எதையெல்லாம் விற்றார்கள் என்பதை தானாகவே அறிய நவம்பர் 6, 2007 அன்று லாஸ் ஏஞ்சலில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு புதிய சமுதாய விளம்பர அமைப்பை சுக்கர்பெர்க் அறிவித்தார். இந்தப் புதிய நிரலின் ஒரு பகுதி பீகான் எனப்பட்டது. இது மக்களை பிற வலைத்தளங்களில் உலாவி நடவடிக்கைகளைச் சார்ந்து அவர்களது ஃபேஸ்புக் நண்பர்களுக்கு தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு இடமளித்தது. எடுத்துக்காட்டாக ஈபே விற்பனையாளர் இருந்தது. இதன் மூலம் ஃபேஸ்புக் நியூஸ் பீடின் வழியாக பயனர்களின் நண்பர்கள் பட்டியலிட்ட பொருள்களில் எதையெல்லாம் விற்றார்கள் என்பதை தானாகவே அறிய நவம்பர் 6, 2007 அன்று லாஸ் ஏஞ்சலில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு புதிய சமுதாய விளம்பர அமைப்பை சுக்கர்பெர்க் அறிவித்தார். இந்தப் புதிய நிரலின் ஒரு பகுதி பீகான் எனப்பட்டது. இது மக்களை பிற வலைத்தளங்களில் உலாவி நடவடிக்கைகளைச் சார்ந்து அவர்களது ஃபேஸ்புக் நண்பர்களுக்கு தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு இடமளித்தது. எடுத்துக்காட்டாக ஈபே விற்பனையாளர் இருந்தது. இதன் மூலம் ஃபேஸ்புக் நியூஸ் பீடின் வழியாக பயனர்களின் நண்பர்கள் பட்டியலிட்ட பொருள்களில் எதையெல்லாம் விற்றார்கள் என்பதை தானாகவே அறிய நவம்பர் 6, 2007 அன்று லாஸ் ஏஞ்சலில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு புதிய சமுதாய விளம்பர அமைப்பை சுக்கர்பெர்க் அறிவித்தார். இந்தப் புதிய நிரலின் ஒரு பகுதி பீகான் எனப்பட்டது. இது மக்களை பிற வலைத்தளங்களில் உலாவி நடவடிக்கைகளைச் சார்ந்து அவர்களது ஃபேஸ்புக் நண்பர்களுக்கு தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு இடமளித்தது. எடுத்துக்காட்டாக ஈபே விற்பனையாளர் இருந்தது. இதன் மூலம் ஃபேஸ்புக் நியூஸ் பீடின் வழியாக பயனர்களின் நண்பர்கள் பட்டியலிட்ட பொருள்களில் எதையெல்லாம் விற்றார்கள் என்பதை தானாகவே அறிய முடியும்.

இந்த நிரலானது இரண்டு இரகசியக் குழுக்கள் மற்றும் தனிப்பட்ட பயனர்க

கனெக்ட்யூ சச்சரவு[தொகு]

ஹார்வர்டு மாணவர்களான கேமரான் வின்கில்வோஸ், டைலர் வின்கில்வோஸ் மற்றும் திவ்யா நரேந்திரா ஆகிய ஹார்வர்டு மாணவர்கள் சுக்கர்பெர்க் மீது குற்றம் சாட்டினர். அதாவது அவர்களுக்கு HarvardConnection.com (பின்னர் கனெக்ட்யூ என்றழைக்கப்பட்டது) என்ற சமுதாய நெட்வொர்க்கை அமைப்பதற்கு உதவுவாதக் கூறி சுக்கர்பெர்க் அவர்களை ஏமாற்றிவிட்டதாக அவர்கள் கூறினர்.[13] 2004 ஆம் ஆண்டில் அவர்கள் வழக்குப் பதிவு செய்தனர். மார்ச் 28, 2007 அன்று இந்த வழக்கு பாராபட்சம் இன்றி இரத்து செய்யப்பட்டது. பின்னர் விரைவில் போஸ்டனில் உள்ள U.S. மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் பதிவு செய்யப்பட்டது. ஜூலை 25, 2007 அன்று அவ்வழக்கின் பூர்வாங்கமான கேட்டறிதலானது திட்டமிடப்பட்டது.[14] அவர்களது புகாரின் ஒரு பகுதிகளான கனெக்ட்யூ தெளிவாக அறிவிக்கப்படவில்லை என்றும், திருத்தப்பட்ட புகாரை மீண்டும் பதிவு செய்யும் திறமையை அவர்களுக்கு வழங்குவதாகவும் அந்தக் கேட்டறிதலில் நீதிபதி கூறினார். ஜூன் 25, 2008 அன்று இந்த வழக்கு முடிவுற்றது. மேலும் ஃபேஸ்புக் அவர்களுக்கு முடிவாக $65 மில்லியன் கொடுப்பதற்கு ஏற்றுக்கொண்டது.[15]

இந்த வழக்கின் ஒருபகுதியாக 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஹார்வர்டு முன்னாள் மாணவர்கள் பத்திரிகை 02138 இன் வலைத்தளத்தில் இரகசிய நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடப்பட்டன. அவர்கள் அதில் சுக்கர்பெர்க்கின் சோசியல் செக்யூரிட்டி எண், அவரது பெற்றோர்களின் வீட்டு முகவரி, அவரது கேர்ல்பிரண்டின் முகவரி ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தனர். ஃபேஸ்புக் அந்த ஆவணங்களை வெளியே எடுக்கும் படி வழக்கு பதிவு செய்தது. ஆனால் நீதிபதி 02138க்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கினார்.[4]

ஃபேஸ்புக்கில் மைக்ரோசாஃப்ட்டின் முதலீடு[தொகு]

அக்டோபர் 24, 2007 அன்று ஃபேஸ்புக் இன்க். 1.6% பங்கை மைக்ரோசாஃப்ட் கார்பரேசனுக்கு $240 மில்லியன் டாலர்களுக்கு விற்றது. மேலும் ஆன்லைன் தேடுதல் முனைவரான கூகுள் இன்க்.கிடம் இருந்து போட்டி கோரிக்கையை நிராகரித்தது. இதன் மூலம் அந்த சமயத்தில் $15 பில்லியன் சந்தை மதிப்பை ஃபேஸ்புக் கொண்டிருப்பது தெரியவந்தது. மைக்ரோசாஃப்ட்டின் எக்ஸ்பாக்ஸ் 360 விளையாட்டுகள் கன்சோலின் ஒரு மென்பொருள் புதுப்பித்தலின் வெளியீட்டில் ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் லாஸ்ட்.எஃபெம்மின் ஆதரவு இருந்தது.[16]

2009 இல் ஃபேஸ்புக்[தொகு]

டிசம்பர் 2, 2009 அன்று ஃபேஸ்புக்கில் 350 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

திரைப்படம்[தொகு]

மார்க் ஜூக்கெர்பெர்க் மற்றும் ஃபேஸ்புக்கை உருவாக்கியவர்களை சார்ந்த திரைப்படம் ''த சோசியல் நெட்வொர்க் என அழைக்கப்பட்டது, இப்படம் 2010 ஆம் ஆண்டில் வெளியானது. இத்திரைப்படத்தில் ஜீஸ் ஏய்சென்பெர்க், ஜஸ்டின் டிம்பர்லேக் ஆகியோர் நடித்துள்ளனர்.

நன்கொடை[தொகு]

இவர் அதிக நன்கொடை வழங்கிய அமெரிக்கர்கள் பட்டியலில் உள்ளார்[17]

ஆதார நூற்பட்டியல்[தொகு]

  • யோகேஷ் சாபிரா, ஹேப்பினர்'ஸ் சீஷ் த கிரஷ் . CNBC - நெட்வொர்க்18. ISBN 978-81-906479-5-3 - 2009

குறிப்புதவிகள்[தொகு]

  1. "Mark Zuckerberg profile on Forbes magazine". Archived from the original on 2013-07-08. பார்க்கப்பட்ட நாள் 2010-12-16.
  2. Craig Newmark. "The 2008 TIME 100". டைம் (இதழ்) இம் மூலத்தில் இருந்து 2010-03-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100310134747/http://www.time.com/time/specials/2007/article/0,28804,1733748_1733754_1735207,00.html. 
  3. ரீகன், கில்லியன் (2009-03-10). தம்ஸ் அப்! தேர்'ஸ் எ லாட் டூ லைக் அபவுட் 'லைக்' (HTML). த நியூயார்க் அப்சர்வர். த நியூயார்க் அப்சர்வர், எல்எல்சி. 2009-03-11 இல் பெறப்பட்டது
  4. 4.0 4.1 "02138 கட்டுரைப் பற்றிய news.com". Archived from the original on 2012-09-15. பார்க்கப்பட்ட நாள் 2010-04-14.
  5. டைம் பத்திரிகை பரணிடப்பட்டது 2010-03-10 at the வந்தவழி இயந்திரம் யின் 100 மிகவும் செல்வாக்குள்ள மனிதர்கள்
  6. போர்பஸ் ஏசியா, ஆசியாவின் இளம் வயது Youngest Self-Made Billionaire
  7. மார்க் சுக்கர்பெர்க் டேம் இதழின் 2010 ஆண்டு நபராக வெற்றி:ஓர் வாழ்க்கை குறிப்பு
  8. 8.0 8.1 8.2 McDevitt, Caitlin (2010-03-05). "What We Learned About Mark Zuckerberg This Week". The Big Money இம் மூலத்தில் இருந்து 2010-03-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100308105506/http://www.thebigmoney.com/blogs/facebook-status/2010/03/05/what-we-learned-about-mark-zuckerberg-week. பார்த்த நாள்: 2010-03-05. 
  9. "Hacker. Dropout. CEO".
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-01-05. பார்க்கப்பட்ட நாள் 2007-01-05.
  11. "Online network created by Harvard students flourishes". Tufts Daily. பார்க்கப்பட்ட நாள் 2009-08-21.
  12. "Thefacebook.com opens to Duke students - News". Media.www.dukechronicle.com. பார்க்கப்பட்ட நாள் 2009-08-21.[தொடர்பிழந்த இணைப்பு]
  13. Nicholas Carlson. "In 2004, Mark Zuckerberg Broke Into A Facebook User's Private Email Account". Silicon Alley Insider. பார்க்கப்பட்ட நாள் 2010-03-05.
  14. "PC வேர்ல்ட் - ஃபேஸ்புக் ட்ரைஸ் டூ ஃபெண்ட் ஆஃப் காப்பிரைட்-இன்பிரிங்க்மென்ட் க்ளைம்". Archived from the original on 2007-09-30. பார்க்கப்பட்ட நாள் 2010-04-14.
  15. Logged in as click here to log out. "Facebook paid up to $65m to founder Mark Zuckerberg's ex-classmates | Technology | guardian.co.uk". Guardian. பார்க்கப்பட்ட நாள் 2009-08-21.
  16. "மைக்ரோசாஃப்டின் இன்வெஸ்ட்ஸ் $240 மில்லியன் இன் ஃபேஸ்புக் - MSNBC.com". Archived from the original on 2010-04-17. பார்க்கப்பட்ட நாள் 2010-04-14.
  17. "Facebook founder Mark Zuckerberg donates $970 million worth shares". DECCAN CHRONICLE. பார்க்கப்பட்ட நாள் 12 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_சக்கர்பெர்க்&oldid=3791748" இலிருந்து மீள்விக்கப்பட்டது