மணப்பாறை முறுக்கு
மணப்பாறை முறுக்கு பரவலாக அறியப்பட்ட முறுக்கு வகைகளில் ஒன்று. இதன் தனித்துவமான சுவையினால் பிரபலமாகியுள்ளது.[1] இது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை நகரத்தின் பெயரிடப்பட்ட சிற்றுண்டியாகும்.
சிறப்பு
[தொகு]தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பிற இந்திய மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கூட மணப்பாறை முறுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மணப்பாறை முறுக்கின் சுவைக்குக் காரணம் அங்கு நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் இயற்கையாக உப்புச்சுவை கொண்டமையேயாகும்.[2] இந்த நீரைக் கொண்டு முறுக்கு தயாரிக்கப்படுவதால் அவை சுவையாக இருப்பதாகப் பல ஆண்டுகளாக முறுக்குத் தொழில் செய்துவரும் வியாபாரிகள் கூறுகின்றனர்.[3]
குடிசைத் தொழில்
[தொகு]ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு குடிசைத் தொழிலாகத் தொடங்கப்பட்ட இந்த முறுக்கு வியாபாரம், தற்போது மணப்பாறை நகரில் சுமார் 100 குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சி.ய.ஆனந்தகுமார்,என்.ஜி.மணிகண்டன். "ருசியின் ரகசியம்! - மணப்பாறை முறுக்கு". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
- ↑ "தீபாவளி நெருங்கியும் ஆர்டர்கள் இன்றி பாதிப்பில் மணப்பாறை முறுக்குத் தொழில்." News18 Tamil (in tm). பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 3.0 3.1 தினமணி புத்தாண்டு மலர் 2014
- மணப்பாறை முறுக்கு. தி இந்து (தமிழ்), நாள்: மே 31, 2014
- மணப்பாறை முறுக்கு தயாரிக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்