மங்கோலியர்களின் சிரியா மீதான படையெடுப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1240கள் முதல் மங்கோலியர்கள் அடிக்கடி சிரியா மீது படையெடுத்தனர் அல்லது படையெடுக்க முயற்சித்தனர். இம்முயற்சிகளில் பெரும்பாலானவை தோல்வி அடைந்தன. 1260 மற்றும் 1300 இல் அவர்கள் சில வெற்றிகளைப் பெற்றனர். அலெப்போ மற்றும் திமிஷ்கு ஆகிய  நகரங்களை வென்றனர். அய்யூப்பிய வம்சத்தை அழித்தனர். ஆனால் சில மாதங்களிலேயே மங்கோலியர்கள் பின்வாங்க வைக்கப்பட்டனர். ஒவ்வொரு முறையும் அப்பகுதியில் இருந்த மற்ற படைகளால் அவர்கள் இவ்வாறான நிலைக்கு உள்ளாக்கப்பட்டனர். முக்கியமாக எகிப்திய மம்லுக்குகளால் அவர்கள் இவ்வாறான நிலைக்கு உள்ளாக்கப்பட்டனர். 1260 முதல் இந்த நிகழ்வுகள் மம்லுக்-இல்கானரசு போர் என்று அழைக்கப்படுகிறது.

உசாத்துணை[தொகு]