பொரி வல்லூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொரி வல்லூறு
ஆண் பறவை டொராண்டோ, ஒன்டாரியோ, கனடா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Falconiformes
குடும்பம்:
பல்கொய்ன்டே
பேரினம்:
இனம்:
F. peregrinus
இருசொற் பெயரீடு
Falco peregrinus
Tunstall, 1771
துணையினம்

17–19

Global range of F. peregrinus

     Breeding summer visitor     Breeding resident     Winter visitor     Passage visitor

வேறு பெயர்கள்

Falco atriceps ஹியூம்
Falco kreyenborgi Kleinschmidt, 1929
Falco pelegrinoides madens Ripley & Watson, 1963
Rhynchodon peregrinus (Tunstall, 1771)

பொரி வல்லூறு (peregrine falcon, Falco peregrinus) என்பது ஒரு பல்கொய்ன்டே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது ஒரு பெரிதான, காகத்தின் அளவுகொண்ட வல்லூறு ஆகும். இது நீல-பழுப்பு நிறத்தை பின்னும், கீழ்ப்பகுதியில் வெள்ளையும், கருப்புத் தலையும் கொண்டு காணப்படும். இதன் கண்கள், கால்கள், அலகு போன்றவை மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது பாம்பு, எலி, வாத்து, நீர்ப் பறவை போன்றவற்றை பிடித்து உண்ணும் பறவையாகவும், பால் ஈருருமை உடையதாகவும், ஆண் பறவையைவிட பெண் பறவை சற்று பெரியனவாக இருக்கும்.[1][2] பொரி வல்லூறு அதன் வேகத்திற்கானப் புகழ் பெறுகிறது. இதன் வேகம் வேட்டையாட கீழே குதிக்கும்போது 322 km/h (200 mph) வரைக்கு மேல் செல்வதால்[3] இது உலகிலேயே அதி வேகமாக பறக்கும் பறவையாக உள்ளது.[4][5][6] தேசிய புவியியல் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்படி, இதனுடைய அதி உச்ச வேகமான 389 km/h (242 mph) பதிவு செய்யப்பட்டுள்ளது.[7][8]

பொரி வல்லூறு அதன் வாழிட எல்லையில் உள்ள நகர்ப்புற வனவிலங்குகளில் மிகவும் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு ஆகும். நகர் புறங்களில் இவை உயரமான கட்டிடங்களை கூடு தளங்களாக பயன்படுத்துகின்றன. அங்கு இவை புறாக்கள், வாத்துகள் போன்ற ஏராளமான இரைகளை பயன்படுத்திக் கொள்கிறன. பறவையியில் வல்லுநர்கள் இதில் 17 முதல் 19 துணையினங்களை அங்கீகரிக்கின்றனர். இதன் துணையினங்கள் தோற்றத்திலும் வாழிட எல்லையிலும் வேறுபடுகின்றன.

விளக்கம்[தொகு]

பொரி வல்லூறு 34 முதல் 58 செமீ (13-23 அங்குலம்) உடல் நீளம் மற்றும் இறக்கைகள் வரை 74 முதல் 120 செமீ (29-47 அங்குலம்) அகலம் கொண்டது.[1] இதன் அலகு கருநீலநிறமாக முனை கருத்துக் காணப்படும். விழிபடலம் புழுப்பு நிறத்தில் இருக்கும். கால்களும், விரல்களும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். கூரிய இறகு முனைகளையும் அகன்ற தோள்களையும் கொண்ட வல்லூறு இது. இதன் தலை சிலேட் கருப்பாக இருக்கும். கருத்த மோவாய்க் கோடு காணப்படும். உடலின் மேல் பக்கம் சாம்பல் நிறமாகக் கருப்பு பட்டைகளுடன் காணப்படும். கீழ்பாகம் இளஞ் சிவப்பான பழுப்பு வெளிர் மஞ்சள் கலந்த வெள்ளையுமாகக் காணப்படும். அடுத்தடுத்து காணப்படும் கருப்பு பட்டைகள் கீழ் மார்பு வயிறு ஆகியவற்றின் வெள்ளை நிறத்தைப் பொரி பொரித்தது போன்ற தோற்றம் பெறச் செய்வதாலேயே இதனைப் பொரி வல்லூறு என அழைக்கின்றனர். உயரப் பறக்கும்போது மோவாய், தொண்டை ஆகியவற்றின் மீது நெடுக்காகக் காணப்படும் கருப்புக் கோட்டை வைத்து இதை அடையாளம் காணலாம். இதன் வால் கருஞ் சாம்பல் நிறமாக ஆழ்ந்த கருஞ் சாம்பல் நிறப்பட்டைகளுடனும் வெள்ளை முனையுடனும் காணப்படும்.[9]

நடத்தை[தொகு]

இந்தப் பறவை இணையாக அல்லாமல் தனித்து திரியக்கூடியது. காலையிலும், அந்தியிலும் சுறுசுறுப்பாக வேட்டையாடும். நண்பகல் வெயிலின்போது மரத்தின் இலை மறைவிலோ அல்லது மணலில் புதர்களின் நிழலிலோ அமர்ந்திருக்கும். நீரில் நீந்தியபடி உள்ள வாத்துகளையோ காட்டில் மேயும் புறாக்களையோ பிடித்து வேட்டையாடும். பெரும்பாலும் நீரில் வாழும் பறவைகளையே இது விரும்பி வேட்டையாடும். காலி்ன் பின் விரலாலேயே இவை இரையைத் தூக்கிச் செல்கின்றன. வாத்து, முக்குளிப்பான், நீர் கோழி போன்ற நீர்வாழ் பறவைகளே இதன் முக்கிய உணவு ஆகும்.[9]

குறிப்புகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 White, C.M. (1994). "Family Falconidae". in del Hoyo, J.; Elliot, A.; Sargatal, J.. Handbook of Birds of the World: New World Vultures to Guinea fowl. 2. Barcelona: Lynx Edicions. பக். 216–275, plates 24–28. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:84-87334-15-6. 
  2. Snow, D.W. (1998). The Complete Birds of the Western Palaearctic on CD-ROM. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-268579-1. 
  3. "All about the Peregrine falcon". U.S. Fish and Wildlife Service. 1999. Archived from the original on 16 April 2008. பார்க்கப்பட்ட நாள் 13 August 2007.
  4. ராதிகா ராமசாமி (9 மார்ச் 2019). "ஜெட்டெனப் பறக்கும் வல்லூறு". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. "Wildlife Finder – Peregrine Falcon". BBC Nature. பார்க்கப்பட்ட நாள் 18 March 2010.
  6. Subramanian, Meera (10 December 2009). "The world's fastest animal takes New York". Smithsonian. பார்க்கப்பட்ட நாள் 8 November 2010.
  7. Harpole, Tom (1 March 2005). "Falling with the Falcon". Smithsonian Air & Space magazine. பார்க்கப்பட்ட நாள் 4 September 2008.
  8. "Terminal Velocity: Skydivers chase the peregrine falcon's speed". Public Television's Wild Chronicles, from National Geographic Mission Programs.
  9. 9.0 9.1 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 85-87. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
the peregrine falcon
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
Conservation organizations
Video and other media of peregrines
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொரி_வல்லூறு&oldid=3771948" இலிருந்து மீள்விக்கப்பட்டது