பைலட் (எழுதுகோல் நிறுவனம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைலட் நிறுவனம்
நிறுவுகை1918 -"நமிகி மேனுபாக்ச்சரிங் கம்பனி" (ஜப்பான்)
நிறுவனர்(கள்)ரியோசுகே நமிகி
தலைமையகம்தோக்கியோ, ஜப்பான்
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
தொழில்துறைஎழுதுபொருள் நிறுவனம்
உற்பத்திகள்எழுதுகோல்கள்
இணையத்தளம்www.pilotpen.com
Pilot ball pens

பைலட் (Pilot Corporation) தோக்கியோவைத் தலைமையகமாக கொண்ட ஓர் ஜப்பானிய எழுதுகோல் நிறுவனமாகும். இதன் துணை நிறுவனங்கள் பிலிப்பீன்ஸ், ஐக்கிய ராஜ்ஜியம், இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்சில் உள்ளன.

வரலாறு[தொகு]

தோக்கியோவிலுள்ள கடற் சார்ந்த வியாபாரக் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்த ரியோசுகே நமிகி, 1915ல் மைக்கோலின் கூர்முனை தயாரிக்கும் சிறு தொழிற்சாலையைத் துவங்கினார்[1] . 1918ல் அவரது நண்பர் மசவோ வாதாவுடன் இணைந்து "நமிகி மேனுபாக்ச்சரிங் கம்பனி" என்ற பெயரில் நிறுவினார். பைலட் என்ற குறியில் எழுதுகோல்களை வெளியிட்டார். பின்னர் அந்த நிறுவனத்தின் பெயர் "பைலட் கார்ப்பரேஷன்" என மாற்றப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pilot Pen: History", Pilot website.