பூக்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூக்கொத்திகள்
Orange-bellied flowerpecker (Dicaeum trigonostigma)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
டைகேயிடே

Bonaparte, 1853
Genera

Prionochilus
Dicaeum

பூங்கொத்திகள் (Flowerpecker) என்பது டைகேயிடே குடும்பம் குருவிகளாகும். இந்தக் குடும்பத்தில் பிரியோனோசிலசு மற்றும் டைகேயம் என இரண்டு பேரினங்கள் உள்ளன. இப்பேரினத்தின் கீழ் மொத்தம் 50 சிற்றினங்கள் உள்ளன. இக்குடும்பம் சில சமயங்களில் நெக்டரினிடே என்ற விரிவாக்கப்பட்ட தேன்சிட்டு குடும்பத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. மெலனோசரிடிடே குடும்பத்தைச் சேர்ந்த பெரிகொத்திகள் மற்றும் வண்ண பெரிகொத்திகளின் பரமித்திடே, ஒரு காலத்தில் இந்தக் குடும்பத்தின் கீழ் சேர்க்கப்பட்டன. இந்தியாவின் கிழக்கே பிலிப்பீன்சு மற்றும் தெற்கே ஆத்திரேலியா வரை வெப்பமண்டல தெற்கு ஆசியா மற்றும் ஆத்திரேலியப் பகுதிகளில் இவைக் காணப்பட்டன. இக்குடும்ப பறவைகள் கடல் மட்டத்திற்கு மேற்பட்ட மலை வாழ்விடங்கள் வரை பரந்த அளவிலான சுற்றுச்சூழலை ஆக்கிரமித்துள்ளது. ஆத்திரேலியாவின் புல்லுருவி போன்ற சில சிற்றினங்கள், அவற்றின் எல்லையின் சில பகுதிகளில் நாடோடிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.[1]

டிக்கல் பூக்கொத்தி[தொகு]

டிக்கல் பூக்கொத்தி (Tickell’s Flowerpecker) மிகச்சிறிய கிட்டத்தட்ட 7 செ.மீ. அளவே உள்ள பறவை. வீட்டுத் தோட்டங்களிலும், பழ மரங்களிலும் அடிக்கடி சுற்றித் திரிந்துகொண்டிருக்கும். வெளிர்ரோஸ் நிற அலகைக் கொண்டிருக்கும். சாம்பல் மற்றும் வெள்ளை நிற அடி வயிற்றுப் பகுதியும், வெளிர் பச்சைநிற முதுகுப் பகுதியையும் கொண்டிருக்கும்.

தடித்த அலகு பூக்கொத்தி[தொகு]

தடித்த அலகு பூக்கொத்தி. பெயருக்கேற்றார் போல, தடிமனான அலகைக் கொண்டது. இது டிக்கலை விட சற்றுப் பெரியதாக இருந்தாலும், பார்வைக்கு டிக்கலைப் போலவே இருக்கும். ஆனால் இதன் அலகின் கருநீல நிறத்தில் ஒரு சிறிய அமைப்பைப் பார்க்கலாம். தவிர, இதன் மற்றொரு தனித்துவமான குணம், மற்ற பூக்கொத்திகளைப் போல பழங்களை அப்படியே விழுங்காது. தோலைத் தேய்த்து எடுத்துவிட்டுத் தான் சாப்பிடும்.

பூக்கொத்தி

மேற்கோள்கள்[தொகு]

[2] [3]

  1. Cheke, Robert; Mann, Clive (2008). "Family Dicaeidae (Flowerpeckers)". in Josep, del Hoyo; Andrew, Elliott; David, Christie. Handbook of the Birds of the World. Volume 13, Penduline-tits to Shrikes. Barcelona: Lynx Edicions. பக். 350–367. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-84-96553-45-3 
  2. சரவண கணேஷ் & கொழந்த. கா2 : கா ஸ்கொயர். https://docs.google.com/uc?id=0Bwum8gbunJGsYk1KZlNCUk8wZVk&export=download. 
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:126,127
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூக்கொத்தி&oldid=3531413" இலிருந்து மீள்விக்கப்பட்டது