புதிய வளர்ச்சி வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதிய வளர்ச்சி வங்கி
New Development Bank BRICS
சுருக்கம்NDB BRICS
உருவாக்கம்15 சூலை 2014 (2014-07-15)
வகைபன்னாட்டு நிதி நிறுவனங்கள்
சட்ட நிலைஉடன்பாடு
தலைமையகம்சாங்காய், சீனா, ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்கா (ஆப்பிரிக்கப் பகுதிக்கானது)
உறுப்பினர்கள்
 பிரேசில்
 உருசியா
 இந்தியா
 சீனா
 தென்னாப்பிரிக்கா
தலைவர்
கே.வி. காமத்
சார்புகள்பிரிக்ஸ்

புதிய வளர்ச்சி வங்கி (New Development Bank BRICS, பழைய பெயர்: பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி)[1] என்பது வளர்ந்து வரும் ஐந்து நாடுகளின் கூட்டமைப்பின் சார்பாக உருவான வங்கியாகும். இந்தக் கூட்டமைப்பில் பிரேசில், உருசியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய வளரும் நாடுகள் இணைந்துள்ளன. இந்த வங்கி உலக வங்கிக்கும் அனைத்துலக நாணய நிதியம்[2] ஆகியவற்றிற்கும் மாற்றாக விளங்குகிறது.

புதிய வளர்ச்சி வங்கி ஐந்து உறுப்பு நாடுகளின் நிதி தேவைகளுக்கும் முன்னேற்றத்திற்கும் பெரும் துணை புரியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சீனாவின் சாங்காய் [3]நகரைத் தலைமை இடமாக கொண்டும், முதல் தலைவராக ஒரு இந்தியரைக் கொண்டும் செயல்படும்.[3][4]

தொடக்கம்[தொகு]

27ஆம் தேதி மார்ச் மாதம் 2013 ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்க நாட்டில் டர்பன் நகரில் நடந்த ஐந்தாவது பிரிக்ஸ் மாநாட்டில் புதிய வளர்ச்சி வங்கி தொடங்குவது குறித்து பிரிக்ஸ் தலைவர்கள் மத்தியில் ஓர் உடன்பாடு ஏற்பட்டது. [2]

15 ஜூலை 2014 பிரேசில் நாட்டின் போர்டலேசா நகரில் ஆறாவது பிரிக்ஸ் மாநாட்டின் முதல் நாளில் ஐந்து வளர்ந்து வரும் நாடுகளுக்கும் பொதுவான ஒரு நிதி நிறுவனம் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் ஐந்து நாடுகளும் கையெழுத்திட்டன. இதன் விளைவாக 100 பில்லியன்[5] அமெரிக்க டாலர்களை கொண்டு புதிய வளர்ச்சி வங்கி தொடங்கவும் , அவசர கால நிதியாக 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை பயன்படுத்தவும் திட்டம் கையெழுத்தானது.[6]

புது தில்லி , ஜோகானஸ்பேர்க் ஆகிய நகரங்களுடன் போட்டியிட்டு இறுதியாக சாங்காய் தலைமையகமாக தேர்வுசெய்யப்பட்டது . தலைவர் பதவி சுழற்சி முறையில் இருக்குமெனவும், முதல் தலைவராக இந்தியர் ஒருவர் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது .[7]

குறிக்கோள்கள்[தொகு]

பிரிக்ஸ் நாடுகள், பிற வளரும் நாடுகளின் உள்கட்டமைப்பு மற்றம் நிலையான வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான வளங்களை திரட்டுவதே இந்த வங்கியின் நோக்கமாகும். வருடத்திற்கு 34 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை கடன் தந்து வளர்ந்து வரும் ஐந்து நாடுகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதை முக்கியமான குறிக்கோளாக கொண்டு இந்த வங்கி செயல்படும் . தென் ஆப்ரிக்காவின் கிளையாக "புதிய வளர்ச்சி வங்கி - தென் ஆப்ரிக்கா பகுதி அமைப்பு" செயல்படும் . தொடக்கத்தில் 50 பில்லியன் அமெரிக்க டாலர் கொண்டு செயல்படும் இந்த வங்கி காலப்போக்கில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் செயல்படும். ஐந்து நாடுகளும் தலா 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் .ஓர் உறுப்பு நாடு மற்ற உறுப்பு நாடுகளின் ஒப்புதல் இல்லாமல் முதலீடு தொகையின் பங்குகளை அதிகரிக்க முடியாது . புதிய உறுப்பு நாடுகளை சேர்த்து கொண்டாலும் 55% முதலீட்டு பங்கினை இந்த ஐந்து நாடுகள் மட்டுமே கொண்டிருக்கும்.

மேற்கோள்[தொகு]

  1. "BRICS Bank to be headquartered in Shanghai, India to hold presidency". Indiasnaps.com. 16 July 2014
  2. 2.0 2.1 Powell, Anita. "BRICS Leaders Optimistic About New Development Bank". வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா. பார்க்கப்பட்ட நாள் 27 March 2013.
  3. 3.0 3.1 Lewis, Jeffrey; Trevisani, Paulo. "Brics Agree to Base Development Bank in Shanghai". The Wall Street Journal. பார்க்கப்பட்ட நாள் 16 July 2014.
  4. http://timesofindia.indiatimes.com/business/international-business/BRICS-Development-Bank-launched-first-president-to-be-from-India/articleshow/38440605.cms
  5. "Brics nations to create $100bn development bank". BBC.com. 15 July 2014
  6. "BRICS establish $100bn bank and currency reserves to cut out Western dominance". RT.com. 15 July 2014
  7. பிரபாத் பட்நாயக். "பிரிக்ஸ் வங்கி: வளர்ச்சியா? தொடர்ச்சியா?". தீக்கதிர் தமிழ் நாளிதழ். p. 4. பார்க்கப்பட்ட நாள் 27 ஆகத்து 2014.[தொடர்பிழந்த இணைப்பு]

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_வளர்ச்சி_வங்கி&oldid=3221707" இலிருந்து மீள்விக்கப்பட்டது