பிரேக்கிங் பேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரேக்கிங் பேட்
A green montage with the name "Breaking Bad" written on it—the "Br" in "Breaking" and the "Ba" in "Bad" are denoted by chemical symbols
வகைகுற்றவியல் நாடகம்
திகில்[1]
தற்கால மேற்கத்திய நாடகம்[2][3]
துயர நகைச்சுவை[4]
உருவாக்கம்வின்சு கில்லிகன்
நடிப்புபிரியன் கிரான்சுட்டன்
அன்னா கண்
ஏரோன் பவுல்
டீன் நோரிசு
பெட்சி பிரான்ட்
ஆர்ஜே மிட்
பாப் ஓடென்கிர்க்
கியான்கார்லோ எசுபொசிடோ
ஜோனாதன் பாங்க்சு
லாரா பிரேசர்
ஜெஸ் பிளெமொன்சு
முகப்பிசை"பிரேக்கிங் பேட் தீம்"
பிண்ணனி இசைடேவ் போர்ட்டர்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
பருவங்கள்5
அத்தியாயங்கள்62
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புவின்சு கில்லிகன்
மார்க்கு ஜான்சன்
மிசேல் மக்லாரென்
படப்பிடிப்பு தளங்கள்ஆல்புகெர்க்கி, நியூ மெக்சிகோ
ஒளிப்பதிவு
  • மைக்கேல் இசுலோவிசு
  • ஜான் டோல் (துவக்க அத்தியாயம்)
தொகுப்பு
  • கெல்லி டிக்சன்
  • இசுகிப் மெக்டொனால்டு
  • லின் வில்லிங்காம்
ஓட்டம்47–55 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்ஹை பிரிட்ஜ் என்டர்டெயின்மென்ட்
கிரான் வயா புரொடக்சன்
சோனி நிகழ்படத் தொலைக்காட்சி
ஒளிபரப்பு
அலைவரிசைஏஎம்சி தொலைக்காட்சி
படவடிவம்16:9 உயர் வரையறு தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்சனவரி 20, 2008 (2008-01-20) –
செப்டம்பர் 29, 2013 (2013-09-29)
Chronology
தொடர்புடைய தொடர்கள்பெட்டர் கால் சவுல்
மெடாசுட்டாசிசு
வெளியிணைப்புகள்
இணையதளம்

பிரேக்கிங் பேட் (Breaking Bad) வின்சு கில்லிகனால் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட அமெரிக்க குற்றவியல் தொலைக்காட்சி நெடுந்தொடராகும். சனவரி 20, 2008 முதல் செப்டம்பர் 29, 2013 வரை ஐந்து பருவங்களாக ஏஎம்சி தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இதில் முதன்மை நாயகனாக பிரியன் கிரான்சுடோன் நடித்துள்ளார்; வால்ட்டர் வைட் என்ற அறுவை சிகிட்சைக்கு வாய்ப்பில்லாத நுரையீரல் புற்றுநோயால் அவதியுறும் உயர்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியராக இவர் நடித்துள்ளார். தன்னுடைய மரணத்திற்கு முன்னால் தமது குடும்பம் நல்லநிலையில் இருக்க வழிசெய்ய மெத் எனப்படும் மெதாம்பெடமைன் என்ற வேதிப் போதைப் பொருளை தயாரித்து விற்க முற்படுகிறார். இதற்கு இவரது முன்னாள் மாணவர் ஜெஸ் பிங்க்மேனை (ஏரோன் பவுல்) கூட்டு சேர்த்துக் கொள்கிறார். இத்தொலைக்காட்சித் தொடர் நியூ மெக்சிகோவின் ஆல்புகெர்க்கியில் நடப்பதாக அங்கு தயாரிக்கப்பட்டது.

பிரேக்கிங் பேட் அனைத்துக் காலத்திற்கும் சிறந்த தொலைக்காட்சித் தொடராக கருதப்படுகின்றது. தொடரின் முடிவில் அமெரிக்கத் தொலைக்காட்சியின் கம்பிவடத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே மிகவும் பார்க்கப்பட்ட நெடுந்தொடராக அமைந்தது. பல விருதுகளைப் பெற்ற இந்த நெடுந்தொடர் பன்னிருமுறை எம்மி விருதுகளையும் எட்டு முறை செய்மதி விருதுகளையும் இருமுறை கோல்டன் குளோப் விருதுகளையும், மக்கள் தேர்வு விருதையும் பெற்றுள்ளது. 2014இல் அனைத்துக் காலத்து.ம் மிகவும் உயர்வான தொடராக கின்னஸ் உலக சாதனைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

திரைக்கதை[தொகு]

வால்டர் ஒயிட் என்பவர்  அல்பும்ருக்கேவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் வேதியியல் ஆசிரியராக இருக்கிறார் இவரது குடும்பத்தில் இவரது மனைவி ஸ்கைலர் மற்றும் மகன் வால்டர் ஜூனியர் இருக்கின்றனர்  மற்றும்  ஸ்கைலர் தங்கை மேரி மற்றும் அவரது கணவர்  ஹாங்க் வால்டேரின் குடும்பத்துக்கு உறுதுணையாக இருக்கின்றனர் இந்த ஹங்க் போதைப்பொருள் தடுப்பு குழுவில் பணிபுரியும் நபராவார் இவரது மகன் ஒரு மாற்றுத் திறனாளி ஊருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது தான் இறப்பதற்கு முன் குடும்பத்தை காக்க ஜெஸ்ஸி பின்க் மேன் என்னும் கல்லூரி மாணவனுடன் மெத் எனப்படும் போதை பொருளை வேதியியல் ரீதியாக சுத்தமாக தயாரிக்கிறார் இதனால் அவருக்கு ஏற்படும் பிரச்சினைகளும் அதன் விளைவாக எடுக்கப்படும் முடிவுகளும் போன்றவையே பின்வரும் கதை

முதன்மை வேடங்கள்[தொகு]

  • வால்ட்டர் வைட் - வேதியியல் ஆசிரியர். நுரையீரல் புற்றுநோயால் அவதிப்படுபவர்.
  • இசுக்கைலர் வைட் - வால்ட்டரின் மனைவி. வால்ட்டருக்குப் புற்றுநோய் எனக் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே இரண்டாவது சிசுவை கருவில் சுமந்தவர்.
  • ஜெஸ் பிங்க்மேன் - போதை மருந்து விற்பனையாளர். முன்னதாக வால்ட்டரிடம் மாணவராகப் பயின்றவர்.
  • ஹாங்க் இசுச்ரேடர் - இசுக்கைலரின் சகோதரி கணவர்.
  • மாரி இசுச்ரேடர் - இசுக்கைலரின் சகோதரி. ஹாங்கை மணந்தவர். இவருக்கு அனிச்சைத் திருட்டு உளவியல் நோய் உள்ளது.
  • வால்ட்டர் வைட், இளையவர் - வால்ட்டர் & இசுக்கைலரின் மகன். இவருக்கு மூளை முடக்கு நோய் உள்ளது.
  • கஸ்தாவோ "கஸ்" பிரிங் - போதை மருந்து விற்பனையாளர்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Poniewozik, James (June 21, 2010). "Breaking Bad: TV's Best Thriller". TIME. பார்க்கப்பட்ட நாள் November 5, 2013.
  2. Nevins, Bill (March 27, 2013). "Contemporary Western: An Interview with Vince Gilligan". Local IQ. http://www.local-iq.com/index.php?option=com_content&task=view&id=3019&Itemid=56. பார்த்த நாள்: May 31, 2013. 
  3. "Breaking Bad Finale: Lost Interviews With Bryan Cranston & Vince Gilligan". The Daily Beast. September 29, 2013. http://www.thedailybeast.com/articles/2013/09/29/breaking-bad-finale-lost-interviews-with-bryan-cranston-vince-gilligan.html. பார்த்த நாள்: March 6, 2014. 
  4. பிரேக்கிங் பேடை துயர நகைச்சுவையாக குறிக்கும் சில ஆதாரங்கள் :
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேக்கிங்_பேட்&oldid=3440780" இலிருந்து மீள்விக்கப்பட்டது