பிந்தேசுவரி பிரசாத் மண்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிந்தேசுவரி பிரசாத் மண்டல்
7வது பீகார் முதலமைச்சர்
பதவியில்
1 பிப்ரவரி 1968 – 2 மார்ச் 1968
முன்னையவர்சதீசு பிரசாத் சிங்
பின்னவர்போலா பசுவான் சாசுதிரி
இந்தியர் நாடாளுமன்றம்
for மதேபுரா
பதவியில்
1967–1972
பின்னவர்இராஜேந்திர பிரசாத் யாதவ்
பதவியில்
1977–1980
முன்னையவர்இராஜேந்திர பிரசாத் யாதவ்
பின்னவர்இராஜேந்திர பிரசாத் யாதவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 (1918)
இறப்புஏப்ரல் 13, 1982(1982-04-13) (அகவை 63)
துணைவர்சீதா மண்டல்
பிள்ளைகள்7
பெற்றோர்
  • ராசு பிகாரி லால் மண்டல் (father)

பிந்தேசுவரி பிரசாத் மண்டல் (Bindheshwari Prasad Mandal பி. 1918–1982), மண்டல் ஆணைக்குழு என்று அறியப்படும் இரண்டாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றிய இந்தியப் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். பி.பி. மண்டல் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி ஆவார். இவர் பிற்படுத்தப்பட்டோர் இரண்டாவது குழுவின் தலைவராக இருந்தவர். பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய இட ஒதுக்கீட்டுப் பரிந்துரைகளை இந்தக் குழு இந்திய நடுவணரசுக்குச் சமர்ப்பித்தது. பி.பி.மண்டல் வடக்குப் பிகாரில் சகர்சா என்னும் பகுதியில் வசதிமிக்க ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர்.[1][2][3][4]

குடும்பம்[தொகு]

பி. பி. மண்டல் பீகாரில் இந்து யாதவ சமூகத்தில் பிறந்தவர் ஆவார்.[5] இவர் பணக்கார ஜமீன்தார் ராஷ் பிஹாரி லால் மண்டலின் மகன் ஆவார். உள்ளூர் புராணத்தின் படி, இவரது தந்தை 1911ஆம் ஆண்டு தில்லி தர்பாரில் இந்திய சுதந்திரத்திற்கான கோரிக்கையை எழுப்பினார். மண்டலின் தந்தை பீகாரின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவர் ஆவார்.

மண்டல்குழு அறிக்கை[தொகு]

1968ஆம் ஆண்டில் பிகார் மாநில முதலமைச்சராக 30 நாள்கள் மட்டும் ஆட்சிப் புரிந்தார்.[6] 1978 திசம்பரில் மொரார்சி தேசாய் பிரதமராக இருந்தபோது பி.பி.மண்டல் தலைமையில் மனித உரிமைகள் குழு அமைக்கப்பட்டது. அரசு அலுவலங்களிலும் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடுகள் பற்றிய பரிந்துரைகள் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. ஆனால் சுமார் 10 ஆண்டுகள் கழித்து வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மண்டல் குழு பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்தன,

மேற்கோள்[தொகு]