பிந்தியாவாசினி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிந்தியாவாசினி தேவி
பிறப்புமுசாபர்பூர், பிகார், இந்தியா
இறப்பு18 ஏப்ரல் 2006
கன்கர்பாக், பாட்னா, பிகார், இந்தியா
பணிநாட்டுப்புற இசைக் கலைஞர்
அறியப்படுவதுஇந்திய நாட்டுப்புற இசை
வாழ்க்கைத்
துணை
ஷேதவேஸ்வர் சந்திர வர்மா
பிள்ளைகள்இரண்டு மகன்கள்- (சந்தோஷ் குமார் சின்ஹா மற்றும் சுதிர் குமார் சின்ஹா) மற்றும் ஒரு மகள்- (புஷ்பராணி மது)
விருதுகள்பத்ம ஸ்ரீ, சங்கீத நாடக் அகாதமி விருது, அஹில்யா பாய் விருது

பிந்தியவாசினி தேவி (இறப்பு 2006) ஒரு இந்திய நாட்டுப்புற இசைக்கலைஞர் மற்றும் நாட்டுப்புற இசையை ஊக்குவிக்கும் பாட்னாவைச் சேர்ந்த இசை அகாடமியான விந்தியா கலா மந்திர் நிறுவனர் ஆவார். விந்தியா கலா மந்திர் லக்னோவின் பட்கண்டே பல்கலைக்கழகத்துடன் 55 ஆண்டுகளாக தொடர்புடையது. இது இப்போது அவரது மருமகள் ஷோபா சின்ஹா, மகன் சுதிர் குமார் சின்ஹா ஆகியோரால் நடத்தப்படுகிறது. [1] [2] அவர் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் முசாபர்பூரில் பிறந்தார். மைதிலி, போஜ்புரி மற்றும் மாகாஹி நாட்டுப்புற இசையில் நிபுணத்துவம் பெற்றவர். விவா கீத் [3] திரைப்படத்தில் சோட் துல்ஹா கே என்ற பிரபலமான பாடலையும் அவர் பாடியுள்ளார். மேலும் அவரது பல பாடல்கள் குறுவட்டு வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளன. [4]

1974 ஆம் ஆண்டில் இந்திய அரசு அவருக்கு நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கியது . [5] சங்கீத நாடக அகாடமி 1991 ஆம் ஆண்டில் தனது வருடாந்திர விருதை அவருக்கு வழங்கியது. [6] [2] அதைத் தொடர்ந்து 2006 இல் அகாடமி பெல்லோஷிப்பைப் பெற்றார். [7] அவர் 1998 இல் மத்திய பிரதேச அரசிடமிருந்து அஹில்யா பாய் விருதைப் பெற்றார். [1] பிந்தியவாசினி தேவி தனது கங்கர்பாக் இல்லத்தில் 18 ஏப்ரல் 2006 அன்று தனது 86 வயதில் இறந்தார்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Folk singer Bindhyavasini Devi is dead". One India. 18 April 2006. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 "Nitish condoles Bindhyavasini Devi's death". Web India News. 19 April 2006. Archived from the original on 26 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Chhote Dulha Ke". Saavn. 2015. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015.
  4. "ITunes". ITunes. 2015. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015.
  5. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
  6. "Folk singer Bindhyabasini Devi is dead". One India. 18 April 2006. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015.
  7. "Sangeet Natak Akademi Ratna Puraskar". Sangeet Natak Akademi. 2015. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

  • Chhote Dulha Ke. Inreco — The Indian Record Mfg Co. 2010. ASIN B00LRY8J6U.
  • Palki Charal Awe. Inreco — The Indian Record Mfg Co. 2010. ASIN B00LSQ23T6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிந்தியாவாசினி_தேவி&oldid=3700781" இலிருந்து மீள்விக்கப்பட்டது