பார்பரா மோரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்பரா மோரி

இயற் பெயர் பார்பரா மோரி ஒஹொவா ("Barbara Mori Ochoa")
பிறப்பு பெப்ரவரி 2, 1978 (1978-02-02) (அகவை 46)
Montevideo, Uruguay
 மெக்சிக்கோ (Naturalization)

பார்பரா மோரி ஒஹொவா (பிப்ரவரி 2,1978ல் உருகுவேயில் உள்ள மான்டிவிடீயோவில் பிறந்தவர்) ஒரு மெக்சிகன் நடிகை மற்றும் விளம்பர அழகி.

விளம்பர அழகியாக தனது பணியைத் துவக்கிய இவர் பின்னர் டிவி அஸ்டெகா-வில் ஒளிபரப்பான சோப் ஒபேரா அசுல் டெக்கிலா என்கிற டெலிநாவலாவில் நடித்தான் மூலம் டெலிநாவலா நடிகையானார். 2004ல், இதன் போட்டி தொலைக்காட்சி நிறுவனமான டெலிவிசாவின் மறுதயாரிப்பான ரூபி என்ற டெலிநாவலா இவருக்கு மிகப் பெரிய புகழைத் தேடித் தந்தது, இதில் இவர் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்தார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

பார்பரா மோரி ஒஹொவா பிப்ரவரி 2, 1978ல் பிறந்தார். இவர் உருகுவேயன் ஜப்பானிய மற்றும் மெக்சிகன் வம்சாவளியைச் சேர்ந்தவர்;[1] அவரது ஜப்பானிய வம்சாவளி அவரது தந்தை வழி பாட்டனாரால் கிட்டியது.[2] இவருடன் பிறந்தவர்கள், நடிகை கென்யா மோரி மற்றும் சகோதரர் கின்டாரோ மோரியும் ஆவார். இவரது பெற்றோர் யூயி மோரியும் ரோசாரியோ ஒஹொவாவும் இவர் மூன்று வயதாய் இருந்த போது திருமண ஒப்பந்தத்தை முறித்து பிரிந்தனர். சிறு வயதில் மோரி உருகுவேயிலும் மெக்சிகோவிலும் மாறி மாறி இருந்து வந்தார். பிறகு தன் பன்னிரண்டாவது வயதில் மெக்சிகோ நகரத்தில் நிரந்தரமாக தங்கினார்.[3]

ஒருநாள் இவருடைய பதினான்காவது வயதில் உணவுக்கூட பணியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது நவீன ஆடை வடிவமைப்பாளர் மார்கோஸ் டொலிடோ இவரை விளம்பர அழகியாக பணியாற்ற அழைத்தார். இவரது பதினேழாவது வயதில் பிறர் ஆதரவின்றி வாழத்தொடங்கினார், தனது உறவினர்களுடன் சென்று தங்கினார்.[4] இவரது 19வது வயதில் இவருக்கு நடிகர் செர்கியோ மேயருடன் சந்திப்பு ஏற்பட்டது, இவர்கள் இருவருக்கும் 1998ல் செர்கியோ என்ற மகன் பிறந்தான்.[5] இவர்கள் இருவரும் மணம் செய்து கொள்ளவில்லை.

இவர் பிறகு எல் சென்ட்ரோ டி எஸ்டுடியொஸ் டி ஃபார்மெசியான் ஆக்டோரல் பள்ளியில் நடிப்புக் கலையைக் கற்றார். இவர் முதலில் மெக்சிகன் டெலிநாவலான அல் நோர்டே டெல் காரசனில் நடித்தார். பிறகு டிரிக் டாக் மற்றும் மிராடா டி முஜேர் என்ற நகைச்சுவைத் தொடரில் அதற்கு அடுத்த வருடமே பங்கேற்றார். இவருக்கு முதலில் சிறந்த புதுமுக நடிகை க்கான டிவி நாவலாஸ் விருது, அவர் மிராடா டி முஜேர் தொடரில் நடித்ததற்காக கிடைத்தது.

1998ம் வருடம் பார்பரா மோரிக்கு அசுல் டெக்கிலா தொடரில் முக்கிய கதாபாத்திரமான அஃசுலாக மாரிசியோ ஓக்மானுடன் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதற்கு அடுத்த வருடம் அவர் மீ ம்யூரோ போர் டி என்ற தொடரை பெருவியன் நடிகர் கிறிஸ்டியன் மேயருடன் மயாமி நகரில் படமெடுத்தார். இவரது முதல் திரைப்படம் 2000ம் வருடம் வெளிவந்த மெக்சிகன் நகைச்சுவைத் திரைப்படம் இன்ஸ்பிரேசியான் ஆகும். பிறகு அவர் பல தொலைக்காட்சி தொடர்களில் (டெலிநாவலாஸ்) நடித்தார். இதில் அமோர் டெஸ்கார்டோ மற்றும் மிகப் பிரபலமான மெக்சிகன் சோப் ஓபரா ரூபி யும் அடங்கும். ரூபியில் நடித்ததற்கு இவருக்கு மற்றுமொரு டிவி நாவலாஸ் விருது கிடைத்தது.

2005ம் வருடம் வெற்றிகரமாக ஓடிய லா முஜேர் டி மி ஹெர்மானோ வில் இவர் ஃஜோயியாக நடித்தார். இதில் இவரது கணவராக இவருடன் மீ ம்யூரோ போர் டி யில் நடித்த கிறிஸ்டியன் மேயர் நடித்தார். மேயருடன் உறவு முறிந்த பின் மோரி மனோலா கார்டோனாவைச் சந்திக்க துவங்கினார்.[மேற்கோள் தேவை] "பிரிடென்ட்டியண்டோ" என்ற சிலி மற்றும் மெக்சிகன் இணைந்து உருவாக்கிய, பலருடைய விமர்சனத்துக்குள்ளான படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது.[மேற்கோள் தேவை]

இந்திய படத் தயாரிப்பாளர் ராகேஷ் ரோஷன் சமீபத்தில் வெளிவரப் போகும் கைட்ஸ் என்ற தனது படத்தில் தனது மகனும், பாலிவுட் நட்சத்திரமுமான ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். கைட்ஸ் திரைப்படக்காட்சிகளை நியூ மெக்சிகோ, லாஸ் வேகாஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது.இப்படம் ஜூலை 2008 இறுதியில் தயாரிக்கப்பட்டு மே 21, 2010ல் திரையிடப்பட்டது.[மேற்கோள் தேவை]

மோரி ஆரம்பகட்ட புற்று நோயால் பாதிகப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, தற்பொழுது அதிலிருந்து மீண்டுள்ளார்.அவருடிய அந்த பயணம் பற்றி யுனி க்ளோப் என்டேர்டைன்மென்ட் தயாரித்துள்ள 1 எ மினிட் என்கிற குறு நாடகத்தில் கூறியுள்ளார். இந்த குறும்படம் நடிகை நம்ரட்ட சிங்க் குஜ்ராலால் எடுக்கப்படுகிறது, இதில் சிறப்பம்சம் என்னவென்றால் புற்று நோயிலிருந்து மீண்ட ஒலிவிய நியூட்டன்-ஜான், டியாஹன் கரோல், மெலிசா எதர்ரிஜ், நம்ரட்ட சிங்க் குஜ்ரலால், மும்தாஸ் மற்றும் ஜச்லின் ஸ்மித் இவர்களுடன் புற்று நோயை தழுவிய வில்லியம் பால்ட்வின், டேனியல் பால்ட்வின் மற்றும் பிரியா தத் ஆகியோர் நடித்துள்ளனர். இக்கதையை கெல்லி மெக்கில்லிஸ் விவரிக்கிறார். இப்படத்தில் மேலும் லிசா ரே, தீபக் சோப்ர மற்றும் மோர்கன் பிரிட்டனி ஆகியோரும் நடித்துள்ளனர்.

திரைப்படங்கள்[தொகு]

  • கைட்ஸ் (2010) (இந்தி) நடாஷா / லிண்டாவாக நடித்துள்ளார்
  • 1 எ மினிட் (2010)
  • வயலன்சலோ (2008) கன்சுவலோவாக நடித்துள்ளார்
  • ரோபாட்ஸ் (2005) கேப்பியாக நடித்துள்ளார் (ஸ்பானிஷ் மொழி பதிப்பு)
  • லா முஜேர் டி மி ஹெர்மானோ (2005) ஜோயியாக நடித்துள்ளார்
  • பிரிடென்ட்டியண்டோ (2005) ஹெலனா/அமண்டாவாக நடித்துள்ளார்
  • இன்ஸ்பிரேசியான் (2000)

தொலைக்காட்சி தொடர்கள் (டெலிநாவலாஸ்)[தொகு]

  • ரூபி யில் (2004) ரூபி பெரஸ் டி ஃபெரராக நடித்துள்ளார்
  • அமோர் டெஸ்காரடோ வில் (2003) ஃபெர்னான்டாவாக நடித்துள்ளார்
  • மிராடா டி முஜேர்: எல் ரெக்ரசோ (2003)
  • சுபெட்டே எ மி மோடோ வில் (2002) நெல்லியாக நடித்துள்ளார்
  • அமோர் எஸ்... குவரர் கான் அலேவோசியா வில் (2001) கரோலினாவாக நடித்துள்ளார்
  • மி முயரோ போஃர் டி (1999)
  • அஃசுல் டெகீலா வில் (1998) அஃசுலாக நடித்துள்ளார்
  • மிராடா டி முஜேரில் (1998) மோனிகா சான் மிலனாக நடித்துள்ளார்
  • அல் நார்டே டெல் கோரசான் (1997)

நகைச்சுவை தொடர்கள்[தொகு]

  • டிரிக் டிராக் (1997)

அங்கீகாரம்[தொகு]

  • கொய்கொசியா (ஹெமடோமா குணமாக்கும் மருந்து)

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. "அழகி பார்பரா மோரி இரு முனை வாளைப் போன்றவர் (அசெக்ரா பார்பரா மோரி குவே லா பெலிசா எஸ் அன் அர்மா டே டோபில் ஃபிலோ)". Archived from the original on 2010-12-22. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05.
  2. "பார்பரா மோரி நேர்காணல் (பகுதி II)". Archived from the original on 2006-11-05. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05.
  3. "பார்பரா மோரி என் லா சிமா ஒய் கான் லாஸ் பியெஸ் பியன் புஸ்டொஸ் என் லா டியர்ரா". Archived from the original on 2006-08-15. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05.
  4. "Biography". iespana.es. Archived from the original on 2006-01-25. பார்க்கப்பட்ட நாள் 2006-02-09.
  5. "பார்பரா மோரி நேர்காணல் (பகுதி III)". Archived from the original on 2009-09-08. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05.

பிற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்பரா_மோரி&oldid=3562836" இலிருந்து மீள்விக்கப்பட்டது