பருத்திப்பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பருத்திப்பால், கூழ்மநிலையில் இருக்கும் ஒரு இனிப்புச்சுவையான உணவு வகையாகும். தமிழ்நாட்டின் மதுரையில் சாலையோரக்கடை முதல் எல்லா இடங்களிலும் கிடைக்கும். ஜிகர்தண்டா போல பருத்திப்பாலும் மதுரையில் மிகவும் பிரசித்தம்[சான்று தேவை]. இது பச்சரிசிமாவு, பருத்திவிதை, கருப்பட்டி, ஏலக்காய், சுக்கு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது.சங்க இலக்கியத்திலும் பருத்திக் கொட்டையை உணவிற்காகப் பெண்கள் சேகரித்து வைத்துள்ள செய்தி பதிவாகியுள்ளது. பாரம் எனப்படும் பருத்திப்பூவை எடுத்த பின்னர் அதை மூட்டைகளில் கட்டி வீட்டிற்கு எடுத்துச்செல்வர். இதனால் நெஞ்சுவலி தோன்றும். இதற்கு பருத்திக்கொட்டையிலிருந்து பனைவெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் பருத்திப்பால் சிறந்த மருந்தாகும்.பருத்திக்கொட்டையை கொக்கு போன்ற பறவைகள் உணவாக உட்கொள்வதை பல சங்கப் பாடல்கள் பதிவு செய்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பருத்திப்பால்&oldid=1435612" இலிருந்து மீள்விக்கப்பட்டது