பரத்பூர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 27°13′12″N 77°30′00″E / 27.22000°N 77.50000°E / 27.22000; 77.50000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜஸ்தான் மாநிலத்தில் பரத்பூர் மாவட்டத்தின் அமைவிடம் (எண்; 30)

பரத்பூர் மாவட்டம் (Bharatpur District) வட இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் முப்பத்து இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பரத்பூர் நகரம் ஆகும். இம்மாவட்டத்தில் அமைந்துள்ள கேவலாதேவ் தேசியப் பூங்காவை உலகப் பாரம்பரிய களமாக யுனேஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அமைவிடம்[தொகு]

5006 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் வடக்கில் அரியானாவின் குர்கான் மாவட்டம், கிழக்கில் உத்திரப் பிரதேசத்தின் மதுரா மாவட்டம் மற்றும் ஆக்ரா மாவட்டமும்; தெற்கில் தௌவுல்பூர் மாவட்டமும்; தென்கிழக்கில் கரௌலி மாவட்டமும்; தென்மேற்கில் தௌசா மாவட்டமும்; மேற்கில் அல்வார் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.

இம்மாவட்டத்தின் குறுக்கே பான் கங்கா ஆறு, ரூப்பரேல் ஆறு மற்றும் கம்பீர் ஆறுகள் பாய்கிறது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

பரத்பூர் மாவட்டம் பத்து உட்கோட்டங்களும்; வேய்ர், பூசாவர், பயானா, பரத்பூர், தீக், காமன், கும்கர், நட்பாய், நகர், பஹாரி, ரூப்வாஸ் என பதினொன்று வருவாய் வட்டங்களும் கொண்டது. [1]

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,548,462 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 80.57% மக்களும்; நகரப்புறங்களில் 19.43% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.29% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,355,726 ஆண்களும் மற்றும் 1,192,736 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 880 பெண்கள் வீதம் உள்ளனர். 5,066 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 503 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 70.11% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 84.10% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 54.24% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 436,165 ஆக உள்ளது. [2]

சமயம்[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 2,143,046 (84.09%) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 23,456 (0.92%) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 371,286 (14.57%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,576 (0.06% ) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 5,758 (0.23%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 899 (0.04%) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 18 (0.00 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 2,423 (0.10%) ஆகவும் உள்ளது.

மொழிகள்[தொகு]

இராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

சுற்றுலா[தொகு]

கேவலாதேவ் தேசியப் பூங்காவில் 364 வகையான இந்தியா மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் குளிர்காலத்தின் போது வலசை வருகிறது. இப்பூங்கா பறவைகளின் சரணாலயமாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Administrative Setup". Bharatpur District. Archived from the original on 2013-05-11. பார்க்கப்பட்ட நாள் 2016-03-18.
  2. District : Census 2011 data[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பரத்பூர்_மாவட்டம்&oldid=3890604" இலிருந்து மீள்விக்கப்பட்டது