நேபாள் மையோடிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாள் மையோடிசு

Nepal myotis

உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கைராப்பிடிரா
குடும்பம்: வெசுபெர்டிலோனிடே
பேரினம்: மையோடிசு
சிற்றினம்:
மை. நிப்பாலென்சிசு
இருசொற் பெயரீடு
மையோடிசு நிப்பாலென்சிசு
தாப்சன், 1871

மையோடிசு நிபாலென்சிசு என்பது நேபால் மையோடிசு (Nepal myotis) என பொதுவாக அறியப்படுகிறது. இது வெசுபர் வகை வெளவால் ஆகும்.

விளக்கம்[தொகு]

இவை அளவில் சிறியவை. இவற்றின் மொத்த நீளம் 10 சென்டிமீட்டர்கள் (4 அங்) மற்றும் இறக்கை இடைவெளி 4 சென்டிமீட்டர்கள் (2 அங்).[2] இது சிறிய காதினையும் நீண்ட குறுகிய பலுக்கலையும் கொண்டது. அடர்த்தியான மென்மயிரானது, முதுகுபுறத்தில் கறுப்பு நிறத்திலும், வயிற்றுப்புறத்தில் கறுப்பு நிறத்துடன் வெளிறிய முனைகளுடன் காணப்படும்.[3]

இனப்பெருக்கம்[தொகு]

இவை வருடத்திற்கு ஒரு முறை ஒரு சந்ததியினைப் பெற்றெடுக்கின்றன.[1]

பரவல்[தொகு]

இவை ஆசியாவினைச் சார்ந்தவை. ஈரானிலிருந்து சைபீரியா வரை காணப்படுகின்றன.[4]

வாழ்விடம்[தொகு]

இவை உயரமன மற்றும் தாழ்வன பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை வறண்ட பகுதிகள், மலைப்பிரதேசங்கள் மற்றும் காடுகள் உள்ளிட்ட பல்வேறு வாழ்விடங்களில் வாழ்கின்றன.[1]

உணவு[தொகு]

இவை முக்கியமாக லெபிடோப்டிரான் பூச்சிகளை விழுங்குகின்றன.[3] பெரும்பாலும் அந்தி வேளையில் வேட்டையாடுகிறார்கள்.[1]

கிளையினங்கள்[தொகு]

உலகின் பாலூட்டி இனங்கள் மூன்று கிளையினங்களை பட்டியலிடுகின்றன:[4]

  • மயோடிசு நிபாலென்சிசு நிபாலென்சிசு (தாப்சன், 1871)
  • மியோடிசு நிபாலென்சிசு பிரசுவால்சுகி (போப்ரின்சுகி, 1926)
  • மியோடிசு நிபாலென்சிசு டிரான்சுகாசுபிகசு (ஓக்னெவ் & ஹெப்ட்னர், 1928)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Srinivasulu, B.; Srinivasulu, C. (2019). "Myotis nipalensis". IUCN Red List of Threatened Species. 2019: e.T136495A21976309.
  2. DE Wilson, DM Reeder, Myotis nipalensis. In Mammal Species of the World. A Taxonomic and Geographic Reference. 3rd edition, Johns Hopkins University Press, 2005. ISBN 0-8018-8221-4
  3. 3.0 3.1 A Guide to the Mammals of China By Andrew T. Smith, Yan Xie, Robert S. Hoffmann, Darrin Lunde, John MacKinnon, Don E. Wilson, W. Chris Wozencraft
  4. 4.0 4.1 Wilson & Reeder's Mammal Species of the World 3rd Edition
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாள்_மையோடிசு&oldid=3124048" இலிருந்து மீள்விக்கப்பட்டது